செருப்படி.. பொசுக்னு சொல்லி குழப்பியடித்த அனிதா சம்பத்.. யாரை சொல்றாரு? மணிமேகலை? பிரியங்கா? புரியலயே
சென்னை: மணிமேகலையின் துணிச்சல் முடிவுக்கு பலரும் ஆதரவு தந்து வரும் நிலையில், அனிதா சம்பத்தும் கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் மணிமேகலையை விமர்சிக்கிறாரா? பிரியங்காவை விமர்சிக்கிறாரா? என்று தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பி போய் இருக்கிறார்களாம்.
தொகுப்பாளர் பிரியங்காவின் அதீத தலையீடு காரணமாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகியிருக்கிறார்.. இதையடுத்து, விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களும் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக வந்துள்ளனர்..

முக்கியமாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற குரேஷி, அனிதா சம்பத், பின்னணி பாடகி சுசித்ரா என பலரும் திரண்டு வந்து மணிமேகலைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்திருக்கிறார்கள்.
அனிதா சம்பத்: அந்தவகையில், மற்றொரு விஜய் டிவி பிரபலமான அனிதா சம்பத், இதுகுறித்து நேற்றைய தினம் கமெண்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.. அதில், " "Guts🔥all the best mani" நீங்கள் எடுத்தது நல்ல முடிவு ஆல் தி பெஸ்ட்" என்றும் ஆதரவு தந்திருந்தார்.
இந்நிலையில், இன்னொரு பதிவையும் இன்ஸ்டாவில் அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.. அதில், 'கர்மா உண்மை தான். யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ அவர் அதே போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார். அதனால் நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும். கர்மா அவர்களை பார்த்துக் கொள்ளும் என்று பதிவிட்டுள்ளார். ஒருவர் உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் கண்டுகொள்ள வேண்டாம். கர்மா அவர்களை பார்த்துக் கொள்ளும், உங்கள் குறிக்கோளை நோக்கி செல்லுங்கள்" என்று அனிதா பதிவிட்டுள்ளார்.
ஸ்டோரி: ஆனால், அனிதா யாரை மனதில் வைத்து, இப்படி ஸ்டோரி போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை.. பெரும்பாலானோர் பிரியங்கா மீதான கோபத்தைதான் அனிதா இப்படி பதிவிட்டுள்ளதாகவும், இன்னும் எத்தனை பேர் பிரியங்கா மீது கோபத்தை கொட்ட போகிறார்களோ தெரியவில்லை என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
ஒருசிலர் அனிதாவின் போஸ்ட்டுக்கு, சில சம்பவங்களை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.. அதாவது, "பிரியங்காவால் முதலில் அடிபட்டவர் அனிதா சம்பத் என்பதால், தான் பாதிக்கப்பட்டதை இந்த சந்தர்ப்பத்தில் அனிதா பயன்படுத்தி கொள்வதாகவும், அதனாலேயே கர்மா பற்றி பேசியிருப்பதாகவும் கருத்து கூறுகிறார்கள்.
ஜாக்குலின்: மேலும் சிலரோ, அனிதாவுக்கு முன்னாடியே நிறைய பேர் பிரியங்காவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி, அந்த தொகுப்பாளினிகள் பெயர்களை லிஸ்ட் போட்டுள்ளார்கள்.. அந்த லிஸ்ட்டில்,. ஜாக்குலின், சங்கீதா, ஃபரினா, பாவனா என்று பல பெயர்கள் உள்ளன.. இதில், அனிதா பெயரும், மணிமேகலையின் பெயரும் கடைசியாக இடம்பெற்றிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications