"அண்ணாமலை" படத்தில் ரஜினிகாந்தின் மகளாக வருவாரே! "அந்த பெண் புறா" இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: "அண்ணாமலை" படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தாரே அவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இவரால்தான் ஒரு பெண் புறா எனும் பாடல் உருவாகி பிரபலமடைந்தது. ரஜினிக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்குமாம். இந்த நடிகை யார், தற்போது என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ, ஹீரோயின்கள் எத்தனை உச்சத்தில் சென்றாலும், திடீரென தொபுகடீர்னு கீழே விழுந்து விடுவது வாடிக்கை. இது எல்லாருக்கும் அமையாது. ஒரு சிலருக்கு அமைந்துவிடும். அந்த படத்தில் நன்றாக பேசப்பட்டிருப்பார். ஆனால் வாய்ப்பு இல்லாமல் அவதிப்படுவார்.

சாதாரணமானவரை தூக்கியும் விடும். உயரத்தில் இருப்போரை கீழேயும் தள்ளும். இதுதான் சினிமா! அப்படியிருக்கும் போது ஹீரோ, ஹீரோயினுக்கு மகளாகவோ, மகனாகவோ, சகோதர சகோதரியாகவோ நடித்தவர்களின் நிலை சொல்லவே வேண்டாம்.
அண்ணாமலை
அந்த வகையில் "அண்ணாமலை" படத்தில் நடித்த ஒரு கேரக்டர் குறித்துதான் நாம் பார்க்க போகிறோம். அவரால்தான் இந்த படத்தில் பிரிந்து கிடந்த இரு நண்பர்களும் சேர்கிறார்கள். சம்பந்தியும் ஆகிறார்கள். கடந்த 1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியானது "அண்ணாமலை".
எந்த கேரக்டர்
இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ரேகா, கனகராஜ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்! இந்த படம் ரஜினிக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
ரஜினிக்காக தேவா செய்த இசை
இந்த படத்தில் ரஜினிக்காக தேவா, லோகோவுடன் இசையை உருவாக்கியது இன்று வரை அனைத்து படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் நடிகை தாட்சாயினி. பால்கார அண்ணாமலையும் பணக்கார சரத்பாபுவும் நண்பர்கள். இவர்களது நட்பு, சரத்பாபுவின் அப்பாவான ராதாரவிக்கு பிடிக்காது. இதனால் ரஜினியிடம் ஏமாற்றி ஒரு இடத்தை வாங்கி அவரது வீட்டையும் இடித்துவிடுவதால் அண்ணாமலைக்கும் அசோக்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது.

சரத்பாபுவின் வீடு ஏலம்
பிற்காலத்தில் ரஜினியும், சரத்பாபுவை போல் பணம், வீடு, கார், பங்களா என சம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சரத்பாபுவின் வீடு ஏலத்திற்கு வருகிறது, அதை ரஜினியே வாங்குகிறார். இந்த நிலையில் ரஜினியின் மகள் தாட்சாயினிக்கும் சரத்பாபுவின் மகன் கரணுக்கும் இடையே காதல் ஏற்படும்.
ரஜினி எதிர்ப்பு
அந்த காதலுக்கு ரஜினி எதிர்ப்பு தெரிவிப்பார், காதலை விட மகள் மறுப்பார். அப்போது மகளை ரஜினி அடித்துவிட்டு "ஒரு பெண் புறா" என்ற பாடலை பாடுவார். கடைசியில் இவர்களது காதல்தான் பெரியவர்களை ஒன்று சேர்க்கும்.
மகள் ரோல்
இப்படி மகள் ரோலில் நடித்த நடிகை தாட்சாயினி என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம். அவர் தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் அன்னம் சீரியலில் நடிக்கிறார். அது போல் வானத்தை போல சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தாட்சாயினி நடித்திருந்தார். அண்ணாமலை படத்தில் ரஜினியுடன் தாட்சாயினி அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அந்த படத்தில் நடித்தவரா நீங்கள் என தாட்சாயினியிடம் கேட்டு வருகிறார்களாம்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications