அம்மா சத்தியமா நான் அதை பண்ணவில்லை.. நடந்தது இதுதான்.. கண்ணீர் மல்க ஓட்டேரி சிவாவின் விளக்கம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலக்கப்பட்டதாகவும் அதற்கு தான் குடித்து இருந்தேன் என்று கூறப்படுவது எல்லாமே பொய் என்று ஓட்டேரி சிவா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து ஓட்டேரி சிவா விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அந்த தகவலுக்கு விளக்கம் கொடுத்து ஓட்டேரி சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கவில்லை விரைவில் அழைக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள் என்றும் தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

நான்காவது சீசன்
விஜய் டிவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக தான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் இதில் கலந்து கொண்டாலே தங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்து குவிந்து விடும் என்பது பலரும் தெரிந்து கொண்ட ரகசியம் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலர் பிரபலமடைந்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போதைய நான்காவது சீசனிலும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

வெளியான தகவல்கள்
ஒவ்வொரு சீசனிலும் குக்குகள் புதியதாக அறிமுகமாகி கோமாளிகள் அதிகமாக இருந்த அதே கோமாளிகள் தான் இருந்து வருகின்றனர். இந்த சீசனில் ஒரு சில கோமாளிகள் புதியதாக கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஓட்டேரி சிவாவும் ஒருவர். இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில வாரங்கள்தான் ஆகின்றது இதில் ஓட்டரி சிவா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது குடித்துவிட்டு வருவதாகவும் நிதானம் இல்லாமல் செயல்படுவது ஆகவும் அதனால் விஜய் டிவி அவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டது என்று வலைத்தளத்தில் அதே தகவல்கள் பரவி வந்தது.

மது அருந்த மாட்டேன்
அதுமட்டுமல்லாமல் ஓட்டேரி சிவாவுக்கு பதிலாக வேறொரு பிரபலம் நடிக்க வைத்ததாகவும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓட்டேரி சிவா சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் நீங்கள் குடித்துவிட்டு நடிப்பதால் தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் கைநழுவி போனதாக செய்திகள் பரவி வருகிறது அது உண்மைதானா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் குடிக்க மாட்டேன் சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். நான் பிரபலமாகி அதிகமாக சம்பாதிக்கிறேன் என்ற காரணத்தினாலே பலர் என்மீது பொறாமையால் இருக்கின்றனர். அதனால் தான் அப்படி கூறுகின்றனர். நான் மது அருந்த மாட்டேன் அவர்கள் சொல்வது எல்லாமே பொய் என்று கூறியிருக்கிறார்.

எல்லாமே பொய்யாம்
அதுமட்டுமல்லாமல் நான் இப்போது விஷால் கூடத்தான் இருந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னை விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை விரைவில் அழைக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள் என்றும் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு தரும்படியும் இது போன்ற பொய் செய்திகளை நம்பாதீர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications