ஏ ஆர் ரகுமான் - சாய்ரா தம்பதி மணமுறிவு.. இதுதான் காரணமா? பிள்ளைகளுக்காக சேரணும்.. பிரபலம் விருப்பம்
சென்னை: எப்போதும் நம்மை சார்ந்தவர்களுக்காகவும் வாழ வேண்டியிருக்கிறது.. தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.. மீண்டும் ஏஆர் ரகுமான் தம்பதியினர் ஒன்று சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Realone media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையார் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், ஏ.ஆர். ரகுமான் - சாய்ரா பானு தம்பதி குறித்து பேசியிருக்கிறார்.

விவாகரத்து: அதில், "விவாகரத்துக்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை.. பலரும் பல கருத்துக்களை கற்பனையில் சொல்வதால், நாம் அவைகளை புறந்தள்ளிவிடுவோம்.. ரகுமான் மிகச்சிறந்த மனிதர்.. அடித்தட்டு மக்களிடம் புழங்கியவர்.. தன்னுடைய கடின உழைப்பால் மேலே வந்தவர்.... புகழின் உச்சிக்கும் போயிருக்கிறார். சிறந்த ஆளுமையாக பார்க்கப்படுபவர்..
பலருக்கும் இந்த முடிவு வருத்தமாக உள்ளது. ஏதோ நமக்கு நெருங்கிய உறவுக்காரருக்கு விவாகரத்து ஏற்பட்டது போல நெருடலாக உள்ளது.. இதற்கான காரணத்தைதான் எல்லாரும் தேடி கொண்டு இருக்கிறார்கள்..
அவரை யாராவது தவறாக வழிநடத்துகிறார்கள் என்றால், நிச்சயம் கிடையாது. ரகுமான் தெளிவான சிந்தனை உள்ளவர். அவரது படைப்புகளிலிருந்தே அதனை தெரிந்து கொள்ளலாம். தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடியவரை, யாராலும் எப்போதும் குழப்பத்தில் தள்ளிவிட முடியாது.
விவாத பொருள்: எந்த விவகாரத்துமே நடந்துவிடக்கூடாது என்பதே என்னுடைய கருத்து. புகழின் உச்சியில் பலருக்கும், இப்படி விவாகரத்து நடக்குபோது, அது விவாத பொருளாக மாறிவிடுகிறது. பணம், புகழ், உறவுகள் இந்த 3 காரணங்களும்தான் விவாகரத்துக்கு பிரதான காரணமாக இருக்கும். மணமுறிவு என்று வரும்பொது, எல்லா மனிதர்களும் சாதாரண மனிதர்களாகி விடுகிறார்கள். அதுதான் இங்கே ஆச்சரியமான விஷயம்.
இதில், பணத்துக்காக அலைபவர் அவர் கிடையாது.. தனக்கு புகழ் வந்தபோதுகூட, எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்னவர்.. எனவே, உறவுகளால் சிக்கல் வந்திருக்கலாம். எப்போதுமே யார் முதலில் விவாகரத்து அறிவிக்கிறார்களோ, அவர்தான் உறவுகளின் பிணைப்பில் இருந்திருப்பார்கள் என்பது என் கருத்து.. இதில் சாய்ரா, முதலில் அறிவித்திருக்கிறார்.. அப்படியானால் அவர்தான் பாசப்பிணைப்பில் இருந்திருக்கிறார் என்றே தெரிகிறது.
வாய்ப்பில்லை: 3வது நபர் இவர்கள் விவகாரத்திலும் நுழைய வாய்ப்பு உள்ளது. ஏஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதிக்குள் இன்னொரு ஆணாலோ, இன்னொரு பெண்ணாலோ தவறான உறவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பே கிடையாது. கணவன்-மனைவிக்கு நடுவே 3வது நபர் வராமல் இருக்க வேண்டும்.. பிள்ளைகள் உட்பட.
கால் நூற்றாண்டு கடந்துவிட்டாலே, பிள்ளைகள் வளர்ந்ததுமே, வேறு மாதிரியான சிக்கல்கள் குடும்பத்தில் வந்துவிடும். 25வது வருடம் கழித்து, மகளுக்கு திருமணம் செய்ய நேரும்போது, சொந்த பந்தங்களுடன் கருத்து முரண்கள் வர வாய்ப்புள்ளது..
அதேபோல, திருமண நிகழ்வுகளின்போது, 2 வீட்டு தரப்பிலும் நல்ல முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது.. இதில் கருத்து வேறுபாடு வந்திருக்கலாம்.. எனவே, பணம், புகழால் தம்பதிக்குள் பிரச்சனை வர வாய்ப்பேயில்லை.. மற்ற உறவுகளால் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்பதை யூகமாக மட்டுமே நான் சொல்கிறேன். கொலுவில்கூட ஒவ்வொரு பொம்மையையும் எங்கே வைக்க வேண்டும் என்ற படிநிலை உள்ளது. உறவுகளையும் அப்படி வைத்துவிட்டால் பிரச்சனையே இல்லை.
ஒன்று சேர வேண்டும்: இந்த வாழ்க்கை நமக்கானது மட்டுமே கிடையாது, நம்மை சார்ந்தவர்களுக்கானதும்கூட.. எப்போதும் நம்மை சார்ந்தவர்களுக்காகவும் வாழ வேண்டியிருக்கிறது.. ஒரு பிள்ளைக்கு திருமணமாகி விட்டதால், மற்ற 2 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இவர்கள் பார்க்க வேண்டியிருக்கு. இவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்" என்றார்.
இதுபோலவே பல பிரபரங்கள் ரகுமான் தம்பதி மீண்டும் இணைய வேண்டும் என்று விருப்பங்களை பதிவிட்டு வருகிறார்கள்.. மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில், "ஏ.ஆர். ரகுமான் தம்பதிக்குள், பூ பூக்குற நொடி போல தான் இந்த பிரிவு நடந்துள்ளது.. நீரடித்து நீர் விலகவே விலகாது.. குழந்தைகள் 3 பேருக்காகவும் ஒன்று சேருவார்கள்.. அந்த இறைவன் இவர்களுக்கு துணை புரியட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications