Aranmanai Kili Serial: தெய்வ பாம்பு தீண்டினால் ஒரு மாசம் கழிச்சு விஷம் ஏறுமாமே...!
சென்னை: தனக்கு பிடித்த புருஷனுக்காக ஒரு பெண் எதையும் செய்வாள் என்பதை எடுத்து காண்பிக்கும் சீரியலாக அரண்மனை கிளி சீரியல் இருக்கிறது என்று சமாதானமாக சொல்லிக் கொள்ளலாம்.
விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில், தனது அப்பா காலத்தில் இருந்து, தங்களது குடும்பத்தை வாழ வைத்த மீனாட்சி அம்மா மகன் அர்ஜுனுக்கு தனது முதல் மகள் ரேணுகாவை கல்யாணம் செய்து வைக்கலாம் என்று அப்பா நினைக்கிறார்.
ஆனால், கால் நடக்க முடியாத மீனாட்சி அம்மா மகன் அர்ஜூடன் தன்னால் வாழ முடியாது என்று மண்டபத்தை விட்டு ஓடிவிடுகிறாள் ரேணுகா. உடனடியாக தங்கை ஜானுவுடன் அர்ஜுனுக்கு கல்யாணம் நடக்குது.

ஜானுவை யாருக்கும்
ஜானு என்கிற ஜானகியை வீட்டில் யாருக்கும் பிடிக்கலை.தாலி கட்டிய கணவன் அர்ஜூனுக்கும் பிடிக்கலை. உடனே விவாகரத்து செய்துட ஏற்பாடுகள் செய்யறாங்க. அதற்குள் ஜானு, கணவன் அர்ஜுனுக்கு பணிவிடைகள் செய்து, அவன் நடப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறாள்.

ஆஷ்ரமம் மூலிகை
கடையில் பூஜை, புனஸ்காரம், ஆஷ்ரமம், காடுகள், மலைகளை கடந்து மூலிகை எடுத்து வருவது என்று படாத பாடு படுகிறாள் ஜானகி. பாம்பு தேவர்கள் குடியிருக்கும் மலைக்கு சென்று,அங்கு வாசுகி பாம்பு வர பூஜை செய்கிறாள்.அந்த பாம்பு வெளியில் வந்து அர்ஜுன் காலைத் தீண்டிப் போகிறது. அர்ஜூனால் இனி நடக்க முடியும். ஆனால் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பாசத்தில் வாக்கு
ஜானு புருஷன் பாசத்தில் என் புருஷன் நடக்க நீ வழி செய்தால், நீ என்ன செய்ய சொன்னாலும் செய்கிறேன் என்று சிவன் முன்னால் வாக்கு கொடுக்கிறாள். அதற்கு பின்னர்தான் எல்லாமே நல்ல படியாக நடக்கிறது. இப்போது, சித்தர் வந்து கொடுத்த வாக்கை மறந்துட்டேன்னு அடிக்கடி மிரட்டி வா வான்னு கூப்பிடுகிறார்.

ஜானு போகிறாள்
சித்தரின் மிரட்டலான அழைப்பை தாங்கிக்க முடியாமல் அவள் போகிறாள்.அங்கு சிவன் சிலை முன்பு அந்த சித்தர் கூறுகிறார்.உன் உயிரை தருவதாக சொன்னாய். இப்போது கண்டுக்காமல் இருந்தால் எப்படி என்று மிரட்டுகிறார். அதற்கு ஜானு, அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அதை முடித்துவிட்டு வரேன் சுவாமின்னு கேட்கிறாள்.

ஆலகால விஷம்
சிவனின் ஆலகாலம் விஷம் கொண்ட தெய்வ பாம்பு வந்து உன்னைத் தீண்டிவிட்டுப் போகும். வரும் பவுர்ணமிக்குள் அது உன் தலைக்கு ஏறி விஷமாக மாறும், அதற்குள் நீ சொன்னபடி இங்கு வந்துவிட வேண்டும் என்று சித்தர் கூறுகிறார். ஜானும் சரி என்று சொல்லி சிவனை வணங்கிவிட்டு வருகிறாள்.
என்ன செய்யறது..பதி பக்தி, புருஷன் பாசம் உள்ளவர்களுக்கான கதை இது. லாஜிக் இல்லாமல் இதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications