Aranmanai kili serial: ஆண்கள் உள்ளமே கருணை இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானு ஒரு தெய்வ பெண். இவள் கால் நடக்க முடியாத அர்ஜுனுக்கு மனைவியாகி இருக்கிறாள். இருந்தாலும், இவள் வேண்டாம் என்று ஆரம்பத்தில் கோவத்தில் முடிவு எடுக்கிறான் அர்ஜுன்.

அதனால், விவாகரத்து வேலைகள் கடைசி கட்டத்தில் இருக்க, இப்போது ஜானுவை பிடித்துப் போகிறது அர்ஜுனுக்கு. ஆனால், அவள் நன்றாக வாழ வேண்டும் என்றால் நம்மை விட்டு போனால்தான் நன்றாக வாழ முடியும் என்று பேசாமல் இருக்கிறான்.

ஜானு தனது கணவன் அர்ஜுனின் கால் சரியாக வேண்டும் என்று கடுமையான விரதங்கள், பூஜைகள், காடு மலை மேடு சுற்றி வந்து மூலிகை எடுத்து வந்தது என்று பல வேலைகள் செய்து, இப்போது அர்ஜூனால் ஓரளவு நடக்க முடிகிறது.

சித்தர் அழைப்பு

சித்தர் அழைப்பு

ஜானு தனது கணவனின் கால்கள் சரியாக வாசுகி பாம்பு வந்து ,கணவனைத் தீண்டினால் தானே கூட அவனை விட்டு இங்கு வந்து விடுவதாக ஒரு வேண்டுதல் வைக்கிறாள்.இப்போதுதான் நடக்க ஆரம்பித்து இருக்கிறான், இன்னும் பிராக்டிஸ் கொடுத்தால்தான் தனியாக நடக்க முடியும் என்கிற நிலையில் ஜானு தான் சொன்ன வாக்கை மறந்து விடுகிறாள்.ஆனால், சித்தர் வந்து வா வா என்று அழைக்கிறார்.

உன் புருஷனை

உன் புருஷனை

நீ வரவில்லை என்றால் உன் புருஷனை துன்புறுத்துவேன், அவனுக்கு சோதனைகள் பல தருவேன் என்று சித்தர் கூறியதோடு அல்லாமல் சித்து விளையாட்டுக்களையும் காண்பிக்கிறார். பயந்து போன ஜானு வந்துவிடுகிறேன் என்று கிளம்புகிறாள். .கடைசி நாள் என்று வீட்டில் செம விருந்து சாப்பாடு சமைக்கிறாள். எதுக்கு இன்னிக்கு விருந்துன்னு கேட்டும் ஜானுவிடம் இருந்து சும்மான்னுதான் பதில் வருது.

எப்பவாவது நினைப்பீங்களா?

எப்பவாவது நினைப்பீங்களா?

விடிந்ததும் கிளம்பிவிடலாம் என்று அர்ஜுனிடம் பேச வருகிறாள், சார்,நான் போயிட்டேன்னா என்னை எப்பவாச்சும் நினைப்பீங்களா சார்னு கேட்க, அர்ஜுன் பேசாமல் இருக்கான். எனக்கு அப்பா பாசம் மட்டும்தான் கிடைச்சுது, இப்போ உங்க மூலமா அம்மா பாசம், அப்பா பாசம் எல்லாம் கிடைச்சுது. அதை எனக்கு அனுபவிக்க குடுத்து வைக்கலை சார்னு ஜானு சொல்றா. அப்போதும் கல்லு மாதிரி இருக்கான் அர்ஜுன். .

உங்க மடியில்

உங்க மடியில்


சார் நான் ஒண்ணு கேட்டால் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களேன்னு ஜானு கேட்க,கேளு ஜானு.. நான் உன்னை தப்பாவே நினைக்க மாட்டேன்னு சொல்றான். ரெண்டு நிமிஷம் உங்க மடியில படுத்துக்கறேன் சார்னு கேட்கிறாள். படுத்துக்கோ ஜானு என்று சொல்கிறான் அர்ஜுன். ஆனால், அவனது கைகள் அவளின் தலையை வருடிக் கொடுக்க போய் பாதியில் நின்று விட்டது.

ஆண்கள் உள்ளமே கருணை இல்லையா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+