For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Ayudha Ezhuthu Serial: மாவட்ட ஆட்சியர் ரோகினி + சிவகாசி = ஆயுத எழுத்து கதை!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் மக்களுக்கு சில பிரச்சனைகளை பூத கண்ணாடி வைத்து காண்பிப்பது போல இருக்கு. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியதும்., புரிந்துகொள்ள வேண்டியதும் நிறையத்தான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி, அதிரடி விஷயங்கள் செய்து ,மாவட்ட மக்களையே கவர்ந்தார். விவசாயிகள் துதி பாடினார். திடீரென அவரை அவசர இடம் மாறுதல் செய்துவிட்டார்கள்.

அவரின் கதை, பிறகு சிவகாசி குழந்தை தொழிலாளர் கதை இரண்டையும் சேர்த்து இந்த சீரியலில் அத்தியாயத்தை காட்சி படுத்தி இருப்பது போல தோன்றுகிறது..

இருபது வருஷமாவா?

இருபது வருஷமாவா?

நாகர்கோயில் அருகே இருக்கும் கிராமத்தில் காளி அம்மா என்று ஒரு அம்மா. சொர்ணாக்கா மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அவங்க புண்ணியத்தால் உள்ளூரில் இருக்கும் பள்ளிக்கு இருபது வருஷமா குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லையாம். ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கறாங்க. இது எப்படி இருக்குது பாருங்க.

பள்ளிக்கு பிள்ளைகளை

பள்ளிக்கு பிள்ளைகளை

இப்படி அப்பட்டமாக எந்த ஊரிலாவது இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிக்கப் படாமல் இருக்கிறதா என்ன? அதுவும் பெரிய ஃபேக்டரி எடுத்து நடத்துவது மாதிரி. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்படி இருந்தாலும், அதை சீல் வைக்க சப்கலெக்டர் இந்திராவுக்கு அதிகாரம் அளிக்கவில்லை கலெக்டர் வேறு முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

ஒழிப்பு அமைப்பு

ஒழிப்பு அமைப்பு

உடனே குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு அமைப்புக்கு போன் செய்து பிரஸையும் அழைச்சுக்கிட்டு வர சொல்றாங்க சப் கலெக்டர் இந்திரா. இப்படி தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாதபடி கைகள் கட்டப்பட்டு இருக்கும்போது சம யோசிதமாக செயல்பட வேண்டும். உண்மையில் அரசாங்கத்தில் நல்ல அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட சமயோசித யுக்திகளை கையாண்டு தாங்கள் நினைத்தை சாதிக்கலாம்.

காளி அம்மாவை

காளி அம்மாவை

இப்படித்தான் இந்த சீரியலில் வரும் சப்கலெக்டர் இந்திரா, பள்ளிக்கு ஒரு குழந்தைகள்கூட வராமல் தொழிலாளர்களாக இருக்கும் நிலையில், கலெக்டரிடம் ஃபேக்டரிக்கு சீல் வைக்க அனுமதி கேட்டு, அவர் கொடுக்காத பட்சத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்புக்கு போன் செய்து பிரஸையும் அழைச்சுக்கிட்டு வர சொல்றாங்க .இது காளி அம்மாவின் ஃபேக்டரி என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

English summary
Vijay TV's Armed Writing Serial people have some problems with the mirror. There is a lot that people need to know and understand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X