Ayudha ezhuthu serial: கிளு கிளுப்புக்கு எதை வேணா கதையா எழுதலாமா?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் இந்த வாரம் முழுக்க கிளு கிளுப்பா எபிசோட்களை ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள் போலும்! சப் கலெக்டர் இந்திரா சக்தியை அவசரமா வரவழைச்சு ஐ மிஸ் யூன்னு கட்டிப்பிடிச்சுக்க நமக்கே ஷாக் ஆகுது.
அதாவது இந்திரா கூட படிச்ச மனோஜ்னு ஒருத்தன், இந்திராவை துரத்தி துரத்தி காதலிக்கிறானாம். அவன் போனை தவிர்க்க, இந்திரா அவனை அவாய்ட் பண்ண சக்தியின் அப்பா, இந்திராவுக்கு தன் பையன் சக்தியுடன் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு பொய் சொல்றார்.
இந்திராவும் அந்த பொய்யை ஆமோதிக்க, திடீர்னு ஊருக்கு புறப்பட்டு வந்துடறான் மனோஜ். அப்புறம் என்ன நடிப்பை இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரணுமாம்.

அவன் போயிடுவானே
என்னதான் விரட்டி விரட்டி காதலிப்பவனாக இருந்தாலும் , உன்னை பிடிக்கலை போடான்னா அவன் போயிடப் போறான். இதுக்கு காளி அம்மா மகன் சக்தியை காதலிப்பது போல நடிக்கணுமாம். சரி நடிக்கறாங்கன்னு பார்த்தால் உண்மையாவே லவ் பண்றவங்க செய்யற அத்தனையும் செய்யறாங்க. மிஸ் யூன்னு கட்டிக்கறா.. காதலோடு ஆசையா பார்க்கறா.

சாப்பிடுகையில் காதலா
சாப்பிடலாம்னு மனோஜ் உட்கார, அங்கேயும் சக்தியும், அவங்க அப்பாவும் நடிக்க ஆரம்பிச்சு, உண்மையாவே லவ் பண்ற மாதிரி சம்பவங்கள் நடக்குது.வேணும்னே சக்திக்கு தான் குடிச்ச தண்ணீரை குடிக்க குடுக்கறா...இவனும் ஆசையா வாங்கி ரசிச்சு ருசிச்சு அந்த தண்ணியை குடிக்கறான்.

அண்ணன் தங்கச்சி
இந்திரா குடும்பமும் இதுக்கு சம்மதம் தெரிவிக்க ரெண்டு பேரும் நடிக்கறாங்களாம். இவங்க நடிப்பில் உண்மை அப்பட்டமாய் தெரிய பக்கத்தில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் அண்ணன் இன்னொரு தங்கச்சி பக்கத்தில் இருக்க அவளுக்கு போன் செய்யறான். என்னடி இது நடிப்பா உண்மையானு கேட்கறான்.ரியல் நடிப்புதானாம்... சொல்லிக்கறாங்க. நம்பிடலாம்.. ஃப்ரீயா விடுன்னு சொல்றா தங்கச்சி.

சக்தி தலைவலி
இந்திராவின் அண்ணன் சொல்றான்... இப்போ தலைவலி மனோஜ்ன்னு சொல்லி சக்தியை நடிக்க வைச்சு இருக்கா.நிச்சயமா இவளுக்கு அடுத்த தலைவலி சக்திதான்னு சொல்றான். விடு விடு கண்டுக்காதேன்னு சொல்றா தங்கச்சி. படுக்கையில் வந்து பார்த்தால் இந்திரா சக்தியை கட்டிப் பிடிச்சதை நினைச்சுகிட்டு படுத்து இருக்கா. ஆனால்,தங்கச்சிகிட்டே மட்டும் வெறும் நடிப்புத்தான்னு சொல்லி சமாளிக்கறா.
எதை நம்ப.. எதை விட?
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications