அய்யனார் துணை அப்டேட்: நிலா போட்ட பிளான் சக்சஸ், ஆனால் எதிர்பாராத சம்பவம்! சோழன் நிலைமை தான் திண்டாட்டம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 17ஆம் தேதி காண எபிசோடில், நடேசன் வீட்டு பத்திரத்தை எடுப்பதற்காக நிலாவும் சோழனும் பழைய வீட்டிற்கு கேட் ஏறி குதித்து வீட்டிற்குள் போய் இருக்கின்றனர். அங்கு எதிர்பாராத சம்பவம் நடந்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில், நடேசன் வீட்டின் சொத்து உயில் தனது பெயரில் இருப்பதாக முன்பு கூறியிருந்த சம்பவம் சோழனுக்கும் நிலாவுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த உயில் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க நிலா கொடுத்த ஐடியா படி, சோழன் தன்னுடைய பெரியப்பாவையே கடத்தும் அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறார்.
பல்லவன் மற்றும் பாண்டியனை வைத்து பெரியப்பாவை கடத்தி விசாரிக்கும் போது, அவர் உலறி அந்த பத்திரம் நடேசன் வீட்டில்தான் இருப்பதாக சொல்லிவிடுகிறார். உடனே சோழனும் நிலாவும் எதுவும் தெரியாதவர்கள் போல அவரை காப்பாற்றி விட்டதாக நடித்து, தங்களது அடுத்த பிளானுக்கு போகிறார்கள்.

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலில் Ayyanar Thunai Serial Feb 17 episode ) இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில், உயில் நடேசன் வீட்டில் இருப்பது உறுதியாகியதும், அதை எப்படி எடுப்பது என்பது பெரிய சவாலாக மாறுகிறது. வீடு சீல் வைக்கப்பட்டிருப்பதால் நேராக உள்ளே செல்ல முடியாது. அதனால் வெளியே இருந்து கேட்டை பூட்டி வைத்திருந்தாலும் அதைக் கடந்து உள்ளே போக முடிவு செய்கிறார்கள். இருவரும் கேட்ட ஏறி குதிக்கின்றனர்.
நிலாவின் பக்கா பிளான்
வீட்டுக்குள் செல்ல வழி தேடும் சோழன், அங்கிருந்த ஏணியும் கயிறையும் பயன்படுத்தி மேலே ஏற முடிவு செய்கிறார். முதலில் அவர் மேலே ஏற, பின்னர் நிலாவும் அவரைத் தொடர்ந்து மேலே செல்கிறாள். ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கும் சோழன், வீட்டுக்குள் தனியாக உயிலை தேடும் நிலையில், நிலா மேலே நின்று யாராவது வருகிறார்களா என்று கவனித்து கொண்டு இருக்கிறார்.
வீட்டுக்குள் சென்ற சோழன், கிடைத்த எல்லா இடங்களிலும் தேடுகிறார். அலமாரி, பெட்டிகள், பழைய ஃபைல் என்று எதையும் விடாமல் பார்க்கிறார். ஆனால் தேடித் தேடி அந்த உயில் மட்டும் கைக்கு எட்டாத தூரத்தில் போய்விடுகிறது. தேவையில்லாத பல பொருட்கள் கிடைத்தாலும் முக்கியமான பத்திரம் கிடைக்காததால் அவர் திக்குமுக்காடி நிற்கிறார். நேரம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பதட்டம் அதிகரிக்கிறது.
அதே நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்டாக சோழனின் பெரியப்பா அந்த வீட்டின் அருகே ரவுண்ட்ஸ் வர ஆரம்பிக்கிறார். வெளியே நின்று கவனித்து கொண்டிருந்த நிலா இதைப் பார்த்து பதறி போகிறார். உள்ளே இருக்கும் சோழனுக்கும் அதிர்ச்சி. எந்த நேரத்திலும் அவர்கள் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications