அய்யனார் துணை சீரியல்: மீண்டும் வீட்டுக்கு சென்ற நடேசன் குடும்பம்.. கடைசியில் எதிர்பாராத சம்பவம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் (Ayyanar Thunai serial Feb 19th Episode) 2026 பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில், வீட்டு பத்திரத்தை சோழனும் நிலாவும் கண்டுபிடிக்க பிறகு போலீஸ் உதவியுடன் மொத்த குடும்பமும் தங்களுடைய பழைய வீட்டிற்க்கே போயிருக்கின்றனர். அப்போது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில், நடேசனின் அண்ணன் போலீசில் கொடுத்த புகாரின் காரணமாக நடேசனின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதையடுத்து ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும் வீட்டை மீட்பதற்கு அந்த உயிரை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று பிளான் போட்டு இருந்தனர்.

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அதனை சோழனும் நிலாவும் சேர்ந்து வெற்றிகரமாக கண்டுபிடித்து விட்டனர். உயிலை மீட்ட அவர்கள் உடனே ஓட்டலுக்கு திரும்பினாலும், அப்போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் இந்த மகிழ்ச்சியான செய்தியை காலையில் சொல்லலாம் என காத்திருந்தனர்.
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடின் (Ayyanar Thunai serial today episode) ஆரம்பத்தில், விடிந்ததும் சோழனும் நிலாவும் அனைவரும் தங்கியிருந்த அறைக்குச் செல்கிறார்கள். அதற்குமுன்னரே நிலா போன் செய்து எல்லாரையும் ரூமிலேயே இருக்கும்படி சொல்லியிருந்தார். இதனால் நடேசனையும் வெளியே விடாமல் வைத்திருந்தனர்.
சந்தோஷத்தில் குடும்பம்
உள்ளே சென்ற சோழன், "ஒரு சந்தோஷமான விஷயம்... நீங்களே கண்டுபிடிங்க" என்று சொல்ல, யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக நிலா கையில் இருந்த பத்திரத்தை எடுத்துக்கொண்டு, "நமக்கிருந்த வீடு நமக்கு சொந்தமாகும்... அந்த பத்திரம் கிடைத்துவிட்டது" என்று சோழன் சொன்னதும் எல்லோரும் சந்தேஷப்படுகின்றனர்.
பின்னர் ஹோட்டலை காலி செய்துவிட்டு அனைவரும் வீட்டிற்குச் செல்கிறார்கள். வீட்டிற்கு சீல் வைத்தவர்களையும் மீண்டும் வரவழைத்து அந்த உயிலை காட்டுகிறார்கள். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பத்திரத்தை படித்து, "இந்த உயில் நடேசன் பெயரில் தான் இருக்கிறது... ஆகவே இந்த வீடு அவருக்கே சொந்தம்" என்று தெரிவிக்கிறார்.
நடேசன் வாக்குவாதம்
இதற்கு நடேசன், "நாங்க அப்பவே சொன்னேன்ல... இவங்களோட பேச்சைக் கேட்டு சீல் வச்சிட்டீங்க" என கூற, "அப்பவே உயிலை காட்டியிருந்தா நாங்க ஏன் சீல் வைக்கப்போறோம்?" என இன்ஸ்பெக்டர் பதிலளிக்கிறார். இந்நிலையில் நடேசனின் அண்ணனும் தங்கச்சியும் இது போலியான பத்திரம் என குற்றம் சாட்டுகிறார்கள்.
உடனே அதிகாரிகள் அதை சரிபார்த்து, இது ஒரிஜினல் பத்திரம் தான் என உறுதிப்படுத்துகிறார்கள். இருந்தும் அடங்காத அவர்கள், "எங்க அப்பா இன்னொரு உயில் எழுதி வைத்திருக்கிறார்... அதில் இந்த வீடு எங்க பெயரில் தான்" என புதிய கதையை சொல்கிறார்கள். இதற்கு இன்ஸ்பெக்டர், "அப்போ அந்த உயிலை கொண்டு வாங்க" எனக் கேட்க, இருவரும் பதில் சொல்ல முடியாமல் திணறி நிற்கிறார்கள்.
சந்தோஷத்தில் குடும்பம்
இதையடுத்து நடேசன், "இவங்க ரெண்டு பேரும் பயங்கரமான ஃபிராடுகள்... பொய் சொல்றாங்க. இன்னொரு உயில் எப்படி எழுத முடியும்? அப்படியிருந்தா உங்களுக்கு தெரியாதா?" என கிண்டலாக பேசுகிறார். பின்னர் வீட்டில் வைக்கப்பட்ட சீலை எடுக்கின்றனர். நடேசன் குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்குள் சென்று வேலைகளை தொடங்குகிறார்கள்.
அந்த நேரத்தில் சேரனின் பெரியப்பா காரின் பின்னால் ஒளிந்து கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை கவனிக்கும் நடேசன், தன் அண்ணனை பிடித்து வைத்து தனது மகன்களிடம் பாட்டு பாடச் சொல்லி அவருக்கு செம்மையான பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications