இனியாவால் பாக்கியாவை தப்பாக பேசும் கோபி.. ராதிகா சொன்ன வார்த்தை.. கோபத்தில் எழில்.. திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா காலேஜ் போவதை தெரிந்து கொண்ட கோபி அதிர்ச்சியாகி புலம்பி கொண்டு இருக்க ராதிகா பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.
அதே நேரத்தில் பாக்யாவை பற்றி இனியாவிடம் கோபி தப்பாக பேசி கொண்டிருக்க எழில் கோபப்படுகிறார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொடின் ஆரம்பத்தல் ராதிகா வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது கோபி போனையே பார்த்துக் கொண்டிருக்க மயூ சாப்பிட்டு விட்டு மாடிக்கு போவோமா டாடி என்று கேட்க கோபி அதை கவனிக்காமலே போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து ராதிகா கோபப்படுகிறார்.

அதற்கு என்னுடைய நண்பன் வெளிநாட்டில் இருந்து எனக்கு போன் பண்ணி இருந்தான். இனியாவுடைய படிப்பு பற்றி பேசினேன். அதற்கு இனியா வெளிநாட்டில் படிக்கலாம் என்று சொன்னான். ஆனால் அந்த இடியட் தான் விஸ்காம் கொண்டு சேர்த்து இனியா வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு இருக்கா என்று திட்டிக் கொண்டிருக்க, ராதிகா அது பாக்கியாவாக கொண்டு சேர்த்து விடலையே..? இனியா சொல்லி தான சேர்த்து இருக்காங்க என்று கேட்கிறார்.
இதனால் ராதிகாவின் அம்மா ராதிகாவை திட்டுகிறார். அதைத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும்போது கோபி இனியாவை பார்ப்பதற்காக இனியாவும் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று பேசுகிறார். அப்போது காலேஜுக்கு தேவையான பொருட்கள் வாங்கியாச்சா என்று கேட்க, நாளைக்கு மம்மி கூட போய் வாங்கணும் என்று இனியா சொல்ல, நானும் நீயும் மட்டும் நாளைக்கு போய் வாங்கிட்டு வருவோம். அவளுக்கு ஒன்னும் தெரியாது என்று பாக்யாவை திட்டுகிறார்.

அப்போது இனியா பாக்கியா காலேஜில் சேர்ந்த விஷயத்தை சொல்ல, கோபி அதிர்ச்சியாகி இனியாவிடம் நீ படிக்கிற காலேஜில் சேர்ந்து உன்னை உன்னுடைய பிரண்ட்ஸ் முன்னாடி அவமானப்படுத்துவதற்காக தான் இப்படி செய்கிறார் என்று பிரச்சனையை பெரிது பண்ணி விட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டில் போய் இதை பற்றியே தனியாக புலம்பி கொண்டிருக்க, அப்போது ராதிகா வர ராதிகாவிடமும் பாக்யா காலேஜுக்கு போவதை பற்றி கோபி சொல்கிறார்.
அதற்கு ராதிகா," பாக்யா என்ன மனசுல பெரிய புரட்சி பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்காங்களா..? எத்தனை வேலையை தான் அவங்களால பார்க்க முடியும்? இவங்க சரியான டிராமா குயினா இருப்பாங்க போல. காலேஜ் எல்லாம் இவங்களால தாக்கு பிடிக்க முடியாது. போன ஒரு வாரத்தில் திரும்ப வந்துடுவாங்க பாருங்க என்று சொல்ல அதை கேட்டுக் கோபியும் பாக்கியாவை திட்டி கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பாக்கியா காலேஜுக்கு போவதற்காக என்னென்ன வாங்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டு கொண்டு இருக்க, அப்போது இனியா பாக்யாவின் செயலை பார்த்து நக்கல் அடித்து விட்டு அம்மா செய்து கொண்டு இருக்கும் அலப்பறையை பார்த்தா எனக்கு காலேஜ் போற ஐடியாவே போய்விடும் போல என்று ரூமுக்குள் எழுந்து போய்விட எழில் கோபப்பட்டு திட்டுகிறார். பிறகு பாக்யாவுக்கு தேவையான பொருட்கள் பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications