இனியா விஷயத்தில் கோபி கேட்ட கேள்வி.. ஈஸ்வரி இப்படி பேசிட்டாங்களே! பாக்யா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 29ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீண்டும் பாக்யா வீட்டிற்கு கோபி வந்து வழக்கம் போல பிரச்சனை செய்கிறார். ஆனால் இந்த முறை இனியா அதிர்ச்சி கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே வந்த காட்சிகள் தான் இப்போது ரிப்பீட் மோடியில் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஸ்கூல் படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து ஒரு வீட்டில் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வந்து பெரும் பிரச்சனையானது அதற்குப் பிறகு இப்போது அது போன்ற காட்சிகள் மீண்டும் வந்திருக்கிறது.

இனியா பப்புக்கு போன இடத்தில் அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் போலீஸ் வந்து இனியாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகும்போது போலீஸிடம் இருந்து இனியாவை ராதிகா காப்பாற்றி இருக்கிறார். அதே நேரத்தில் தற்போது உள்ள 2k கிட்ஸ்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் தான் இனியா கேரக்டர் இருந்து வரும் நிலையில் பாக்கியா இரண்டு நாட்களாக செம அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் ராதிகா தான் இனியாவை காப்பாற்றியது என்று தெரிந்ததும் ராதிகா மீது இருந்த கோபம் எல்லாம் கோபிக்கு குறைந்து போய் இருக்கிறது. இப்படியான நிலையில் இப்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்த கோபி பாக்யாவிடம் நேற்று நடந்தது சாதாரண விஷயமா? இவ அக்கறையோடு இனியாவை பார்த்துக்காததுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.
இனிமே நான் இனியவை பார்த்துக்குறேன்... இனியா வாமா டாடி வீட்டில் இருக்கலாம் என்று ஏற்கனவே ஒரு முறை கூப்பிட்டு போனது போல இப்போதும் கூப்பிடுகிறார். உடனே கோபமான ஈஸ்வரி கோபியின் கையை தட்டி விட்டு கைய விடுடா நீ வெளியே போ என்று விரட்ட அதற்கு கோபி நான் என் பொண்ணை விட்டு போக முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு பாக்கியா இனியா யார் கூடவும் எங்கேயும் வரமாட்டா என்று சொல்ல,
இனியாவும் இல்ல டாடி நானும் வரல நான் அம்மா கூட தான் இருப்பேன் என்று கோபியின் கையை தட்டிவிட்டு ஈஸ்வரி பின்னால் போய் நின்று விடுகிறார். ஏற்கனவே இது போல தான் பாக்யா ஒரு முறை இனியாவை திட்டி அடித்ததற்காக கோபி வீட்டிற்கு போய் இருந்தார். அப்போது அங்கு ராதிகாவோடு பிரச்சனை ஏற்பட்டதனால் தான் அந்த வீட்டை விட்டு மீண்டும் பாக்கியாவிடம் வந்திருந்தார்.
அதுபோல ஈஸ்வரியும் பாக்கியா வீட்டை விட்டு கோபியோடு போயிருந்தார். அங்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்போது ஈஸ்வரியும் திருந்தி இருக்கிறார். இதனால் மீண்டும் கோபி வந்து நாடகம் போட்டதும் இனியா கோபி வீட்டுக்கு போய் விடுவாரா என்று நினைத்திருந்த நிலையில் இப்போது இனியா வரவில்லை என்று சொன்னதால் கோபி வீட்டு வாசலில் நின்று கொண்டு இனியாவை பாவமாக பார்த்துக் கொண்டு நிற்கிறார்.
இந்த சீரியலில் மட்டும் தான் எந்த ஊரிலும் நடக்காத செயல்கள் எல்லாம் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. வீட்டை பெரும் பிரச்சனைக்கு பிறகு பாக்கியாவிடம் விற்று விட்ட கோபி மீண்டும் மீண்டும் ஒவ்வொரு மாசமும் ஏதாவது பிரச்சனையை சொல்லி வீட்டிற்குள் அது வந்து கொண்டே இருக்கிறார். ஆனால் பாக்கியா எப்போதும் போல நீங்க வெளியே போங்க என்று மட்டும் சொல்கிறாரே தவிர எந்த ஆக்சனும் இல்லை... சரி அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications