பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்ல.. சிறகடிக்க ஆசை சீரியலும் சாதனையின் உச்சம்.. காரணம் இதுதானா?
சென்னை: பொதுவாக சீரியல்களின் வெற்றிகள் டிஆர்பியின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடத்தின் 28 வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் உயர்ந்து இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் ரசிகர்களின் மனதை கவர்வதற்காக சின்ன திரையில் பெரும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவி சீரியல்களுக்கு அதிகமான வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. அதை பார்த்து அடுத்தடுத்ததாக புது புது சேனல்கள் தொடங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சன் டிவி சீரியல் டிஆர்பிஐ சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் முறியடித்து இருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது விஜய் டிவி சீரியல்களும் அவ்வப்போது முறியடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான 28 வது வாரத்தின் டிஆர்பி விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் வரிசை இருக்கிறது.
அதில் அதிகமான முறை சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும். இதில் இந்த முறை நான்காவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பிடித்து இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பாக்யா ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற்று தன்னுடைய திறமையையும் சுயமரியாதையையும் நிரூபிப்பதை அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் கடைசி வாரத்தில் கோபியிடம் தான் போட்ட சவாலில் ஜெய்ப்பதற்காக பாக்கியா பாண்டிச்சேரியில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அதை தொடர்ந்து பாக்யாவுக்கு உதவி செய்வதற்காக எழில் 5 லட்சம் ரூபாயும் செழியன் ஐந்து லட்சம் ரூபாயும் கொடுத்து கோபியின் கடனை அடைத்து கோபி ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தனர். இந்த எபிசோடு மற்றும் அதை சார்ந்த எபிசோடுகளும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்திருந்தது.
இதன் அடிப்படையில் இந்த சீரியல் இதுவரைக்கும் இல்லாத வகையில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இந்த வாரத்தில் 9.34 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. அதேபோல சிறகடிக்க ஆசை சீரியலும் கடந்த வாரத்தை விட அதிகமான புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அதிக அளவில் வித்தியாசம் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு சீரியல்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதே நேரத்தில் இதுவரைக்கும் ஏழாவது அல்லது எட்டாவது இடங்களில் இருந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது டிஆர்பி யில் சரிவடைந்து ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியல், சன் டிவியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல், மிஸ்டர் மனைவி சீரியலை பின்னுக்கு தள்ளி முன்னேறி இருப்பதால் வரும் வாரங்களில் கதையில் வேகம் அதிகரித்தால் இன்னும் முன்னணி இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications