பாக்கியலட்சுமி: பாவமாக மயூ கேட்ட கேள்வி.. ராதிகா இப்படி பேசலாமா? வீட்டை விட்டு கிளம்பும் பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிசம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு வந்து மயூ கேட்ட கேள்வியை கேட்டு பாக்கியா கோபப்படுகிறார். அதே நேரத்தில் பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அம்மா கமலா ராதிகாவிடம் என்ன ஆச்சு என்று கேட்க கோபியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நாம போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று கமலா சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

அதற்கு ராதிகா அப்படி கம்ப்ளைன்ட் கொடுத்தால் என்னால் தான் அவருக்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது என்று அவர் சொல்வார் என்று சொல்கிறார். அதோடு இன்னும் ஒரு வாரம் பொறுமையாக இருக்கலாம். அதற்குள் அவர் மனம் மாறி வராரான்னு பார்ப்போம் அப்படி வரவில்லை என்றால் இங்கிருந்து போய்விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக பாக்யா கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கோபி தனக்கு ஒரு காபி போட்டுக்கொண்டு, பாக்கியாவுக்கு ஒரு காபி கொடுக்கிறார். நீ ஊருக்கே காபி போட்டு கொடுப்ப... ஆனா உனக்கு காபி போட்டு தர யாரு இருக்கா... நான் போட்டு தரேன் என்று பாசமாக பேசுகிறார். இதனை ஜெனியும் செல்வியும் பின்னால் இருந்து பார்த்து விடுகிறார்கள்.

கோபி சொன்ன வார்த்தையை கேட்டு கோபமான பாக்கியா காய்கறிகளை வேகமாக வெட்டுவதை பார்த்து கோபி தன்னையே வெட்டுவது போன்று பயப்படுகிறார். இதனால் நான் வெளியே போய் காபி குடிக்கிறேன் என்று அங்கிருந்து நைசாக நழுவி விடுகிறார். பிறகு அங்கு வந்த செல்வி கோபி சாருக்கு இப்பதான் அக்கா மேல லவ் மலர்ந்து இருக்கு போல.. காபியில் லவ் எல்லாம் கலந்து இருப்பார் என்று கிண்டல் செய்ததும் பாக்கியா கோபமாக அதை கொட்டி விடுகிறார்.

அடுத்ததாக கோபியை பார்க்க மயூ பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். ஆனாலும் உள்ளே வராமல் வாசலில் யோசித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த பாக்கியா உள்ளே வா என்று கூப்பிடுகிறார். அதற்கு மயூ நான் உள்ளே வந்தா பாட்டி திட்டுவாங்க என்று உள்ளே வர மறுக்கிறார்.

அதோடு வீட்டில் ராதிகா அழுது கொண்டு இருப்பதையும், தாங்கள் எல்லோரும் வீட்டை காலி பண்ணி போக போகும் விஷயத்தையும் மயூ பாக்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ராதிகா வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் எதற்காக அடுத்தவர்களிடம் போய் சொல்கிறாய் என்று மயூவை திட்டுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

அதோடு பாக்கியா சொல்வது ஒரு மாதிரி... நடப்பது வேறு மாதிரியா இருக்கும் என்று பாக்கியாவை குத்தி காட்டிவிட்டுப் போகிறார். இதனால் அதிர்ச்சியான பாக்கியா வீட்டிற்குள் வருகிறார். அப்போது கோபி வீட்டினர் எல்லாருடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபியிடம் நான் உங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தும் கூட.. இன்னும் இரண்டு நாட்களில் வீட்டை விட்டு நீங்க வெளியே போயிறணும் என்று சொல்கிறார்.

இதை கேட்ட கோபி, இனியா, செழியன் என எல்லோரும் கோபி இங்கே தான் இருப்பார் என்று வாக்குவாதம் பண்ண அதற்கு பாக்யா அவர் இங்கே இருந்தா நான் எங்கேயாவது போய் விடுவேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+