பாக்கியலட்சுமி: எழில் சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் கோபி.. ராதிகா கேட்ட கேள்வி.. ஈஸ்வரிக்கு கிடைத்த அவமானம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் மற்றும் அமிர்தா மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் சொன்ன வார்த்தையை கேட்டு கோபியும் ஈஸ்வரியும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா வீட்டில் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது கோபியை வைத்து செல்வி பாக்யாவை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழிலும் அமிர்தாவும் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது பாக்கியா எழிலிடம் என்ன திடீர்னு வந்து இருக்க என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறார். என்ன நடக்குதுன்னு புரியாமல் பாக்கியா நின்று கொண்டிருக்கும் போது, ஈஸ்வரி இந்த வீட்டில் தான் இனி எழில் இருக்கப் போறான் அதற்காகத்தான் வர சொன்னேன் என்று சொன்னதும், பாக்கியா அதெல்லாம் நடக்காது.. எழில் அவனுடைய கனவை நிறைவேற்றிவிட்டு தான் இந்த வீட்டுக்கு வருவார்.
இந்த வீட்டில் அவன் வந்து இருந்தா நீங்க மீண்டும் குழந்தையை பற்றி கேட்பீங்க. அவனுக்கு அவனோட கனவு முக்கியம் என்று பாக்யா சொன்னதும் கோபி இந்த வீட்டிலிருந்து எழில் அவனுடைய கனவுகளை நிறைவேற்றலாமே! எதற்காக தனியா இருக்கணும்? இத்தனை நாள் தனியா பிரிஞ்சு இருந்தாச்சு.. இனியாவது எல்லாரும் ஒன்னா இருப்போம் என்று சொல்ல, பாக்கியா என் குடும்ப விஷயத்தில் உங்களை தலையிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். நீங்க எப்படி பேசலாம் என்று கோபப்படுகிறார்.

அப்போது ஈஸ்வரி நான் என்ன சொன்னாலும் நீ திமிரா எதிர்த்து பேசணும்னு நினைச்சுட்டு இருக்கியா பாக்கியா? என்று கேட்க, அதற்கு எழில் எனக்கு என்னுடைய அம்மாவின் லட்சியம் முக்கியம். நான் என்னுடைய கனவை நிறைவேற்றி அம்மாவின் சவாலையும் நிறைவேற்றுவேன். அதற்குப் பிறகு இந்த வீட்டில் சந்தோஷமாக வந்து இருப்பேன் அதுவரைக்கும் என்னை தொந்தரவு பண்ணாதீங்க.
நீங்க இதற்காக தான் போன் பண்ணுறீங்க என்று தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன் என்று அங்கிருந்து கிளம்பி போகிறார். அடுத்ததாக பாக்யாவிடம் கோபி மற்றும் ஈஸ்வரியின் நடவடிக்கைகளை பற்றி ஜெனியும் செல்வியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதியில் கோபி ராதிகாவுக்கு போன் போட்டு வீட்டில் நடக்கும் விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் இப்ப ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். ஆனா எனக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு அதை பார்த்து வீட்டில் எல்லாரும் பயந்து போயிட்டாங்க என்று சொல்ல அதற்கு ராதிகா பயப்படுகிறார்.
அடுத்ததாக ராதிகா பாக்யா வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபியும் இனியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராதிகாவை பார்த்ததும் இனியா கோபப்படுகிறார். ஆனாலும் அதை கண்டுகொள்ளாத ராதிகா கோபியிடம் நலம் விசாரிக்கிறார். பிறகு நாளைக்கு மயூவின் பிறந்தநாள் ஞாபகம் இருக்கா? என்று கேட்க அய்யோ மறந்துட்டேன்.
கண்டிப்பா நாளைக்கு வீட்டுக்கு வரேன் என்று கோபி சொல்ல, அதற்கு இனியா அங்கு உங்களை அனுப்பி வைக்க முடியாது டாடி என்று சொல்கிறார். இதை கேட்டு ராதிகாவும் கோபியும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications