பாக்கியலட்சுமி: பாக்யா கேட்ட கேள்வி! மீண்டும் ராதிகா வீட்டுக்கு கிளம்பிய கோபி.. நாடகமாடிய ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மீண்டும் ராதிகா வீட்டிற்கு போவதற்காக கிளம்புகிறார். அதேபோல ராதிகா வீட்டிற்கு பாக்கியாவும் போகிறார். பாக்யாவிடம் ராதிகா சில கேள்விகளை கேட்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா டான்ஸ் ஆடி முடிக்கிறார். பிறகு எல்லோரும் டான்ஸ் காம்பெடிஷனில் ஆடி முடிக்கின்றனர். இறுதியாக இனியா தான் ஜெயித்தார் என்று சொல்கிறார்கள். இனியா பெயரை சொன்னதும் குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். அப்போது இனியாவை பேச கூப்பிடுகின்றனர்.

television baakiyalakshmi serial vijay tv

மறுபக்கத்தில் ராதிகாவின் அம்மா உங்க அண்ணி தான் போன் பண்ணா மாப்பிள்ளை குடும்பத்தோட டிவில தெரிகிறாராம் என்று சொல்லி டிவியை ஆன் பண்ணுகிறார். அப்போது இனியா இறங்கி வந்து எல்லோரிடமும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு கோபி மற்றும் பாக்யாவை மேடைக்கு அழைத்து செல்கிறார். இவங்க தான் என்னுடைய அப்பா, அம்மா என்னுடைய சக்ஸஸுக்கு காரணம் இவங்கதான் என்று கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.

இதை பார்த்த ராதிகா டென்ஷன் ஆகுகிறார். எங்க வீட்ல இருக்குறவங்க சப்போர்ட் பண்ணுனதால தான் என்னால இதுவரைக்கும் வந்திருக்க முடிந்தது. இல்லனா வந்திருக்க முடியாது என்று சொல்லி இனியா சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் இதையெல்லாம் ராதிகா பார்த்துக் கொண்டிருக்கும் போது மயூ டிரஸ் எப்படி இருக்குமா என்று வருகிறார்.

சூப்பரா இருக்குமா என்று ராதிகா சொல்கிறார். பிறகு ராதிகா மயூடன் இன்னைக்கு எங்க போகலாம் டின்னர் போகலாமா? இல்ல தியேட்டர் போயிட்டு டின்னர் போலாமா? என்று கேட்கிறார். அதற்கு வேண்டாம் மம்மி நீங்க சந்தோசமா இருந்தீங்கன்னாவே போதும் என்று சொல்ல, ராதிகா மயூவை கட்டிபிடித்து கண் கலங்குகிறார்.

சாரி மயூ என் வாழ்க்கையில் நான் எடுக்குற முடிவு எல்லாமே தப்பா தான் இருக்கு. அந்த முடிவால் உன்னுடைய மனது எவ்வளவு கஷ்டப்படும் என்று எனக்கு தெரியும். இனி நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். உன்ன கஷ்டப்படவும் விடமாட்டேன், உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்.

உனக்காக நான் இருக்கிறேன் லைஃப் ஃபுல்லா உன்ன ஹேப்பியா வைத்திருப்பேன் என்று சொல்கிறார். கொஞ்ச நேரம் கழித்து ராதிகாவின் அம்மா பால் பாயாசம் எடுத்துக்கொண்டு வந்து மயூவிடம் கொடுத்துவிட்டு ராதிகாவிடம் கொடுக்கிறார். அதற்கு ராதிகா எனக்கு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்கிறது.

அந்த சத்தத்தை கேட்டதும் ராதிகாவின் அம்மா மாப்பிள்ளை தான் வந்து இருக்காரு. மயோட பிறந்தநாளுக்கு அவர் எப்படி வராமல் போவாரு என்று சொல்லிக் கொண்டு கதவை திறந்து பார்க்க அங்கு பாக்கியா நிற்கிறார். பாக்யாவை பார்த்ததும் கோபமாகி எதுக்கு இங்க வந்த என்று கேட்க, அதற்கு பாக்கியா ராதிகாவை பார்த்து உள்ளே வரலாமா என்று கேட்கிறார்.

பிறகு ராதிகா ராதிகாவின் அம்மா உள்ளே வருமாறு சொல்லிவிட்டு நீங்க வாங்க என்று கூப்பிடுகிறார். என்ன விஷயமா வந்தீங்க என்று ராதிகா கேட்க பாக்கியா நா மயூவை தான் பார்க்க வந்தேன் என்று மயூவிற்கு விஷ் பண்ணி கிப்ட் கொடுக்கிறார்.

பிறகு நான் கிளம்புறேன் என்று பாக்கியா கிளம்பும்போது மயூவை உள்ளே அனுப்பிவிட்டு ராதிகா கொஞ்சம் இருங்க என்று சொல்லி நீங்க கிடைக்கிற டைம்ல்ல கோபியோட மனைவியா வாழ நினைக்கிறீங்களா? என்று கேட்க, அதற்கு பாக்கியா அது இந்த ஜென்மத்துல நடக்காது என்று உறுதியாக சொல்கிறார். அதற்கு ராதிகா அப்போ நீங்க மேடையில போயி பேரண்டா நின்னது எப்படி என்று கேட்க, நான் இனியாவோட அம்மாவா மட்டும் தான் போய் நின்னேன்.

television baakiyalakshmi serial vijay tv

எப்பவுமே கோபிநாத்தோட மனைவியா நிக்கல என்று பாக்கியா சொல்கிறார். அடுத்த கட்டத்தில் வீட்டில் ஜெனி மற்றும் செல்வியுடன் பாக்யா பேசிக்கொண்டே டின்னருக்கு சாப்பாடு செய்யப் போகிறார். அப்போது இனியாவுக்கு பிடிச்ச ஃப்ரைட் ரைஸ்சும், டிராகன் சிக்கனும் செய்யணும் என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்கும் போது கோபி இனியா, செழியன், மற்றும் ஈஸ்வரி எல்லோரும் வீட்டிற்கு டின்னர் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்.

வீட்டிற்கு வந்ததும் அங்கே எடுத்த போட்டோவை கோபி, இனியா, செழியன், ஈஸ்வரி என எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி நான் இப்போ ராதிகா வீட்டுக்கு போயிட்டு பத்து நிமிஷத்தில் வந்து விடுவேன் என்று சொல்கிறார். அதற்கு இனியாவும் ஈஸ்வரியும் விட மறுக்கிறார்கள்.

ஈஸ்வரி உனக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியல. நீ அங்கேயே இருக்க முடியாம நெளிஞ்சுட்டே இருந்த. இப்போ ரெஸ்ட் எடு. நீ ராதிகா வீட்டுக்கு போனா சீக்கிரமா வரமாட்ட என்று சொல்கிறார். அதுபோல இனியாவும் நீங்க அங்க போனா வர மாட்டீங்க இங்கவே இருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+