பாக்கியலட்சுமி: ராதிகா மீது பழி போட்ட கோபி.. ஈஸ்வரி செய்த கேவலமான செயல்.. ஜெனி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் கோபியை பார்க்க போன ராதிகாவிடம் கோபி கோபப்படுகிறார். அதே நேரத்தில் செழியன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனி கேள்வி கேட்கிறார். மேலும் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக பாக்கியா ஆஸ்பிட்டலுக்கு வரவில்லை என்று ஈஸ்வரி திட்டுகிறார். அதற்கு பாக்கியா அவருடைய உயிருக்கு ஆபத்து என்றதும் நான் தான் ஹாஸ்பிடலில் சேர்த்தேன் அதோடு என்னுடைய கடமை முடிந்துவிட்டது இனி அவரை நான் வந்து பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்.

அதற்கு ஈஸ்வரி, கோபி ஹாஸ்பிடலில் இருந்து இனி இந்த வீட்டுக்குத்தான் வருவான் என்று சொல்ல அது ஒரு நாளும் நடக்காது என்று பாக்யா சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி என்னுடைய பிள்ளையை என்னால் இழக்க முடியாது அதனால் கோபி நேரா இந்த வீட்டுக்கு தான் வருவான் என்று சொல்ல, யார் என்ன சொன்னாலும் அவர் இந்த வீட்டுக்கு இனி வரக்கூடாது என்று பாக்கியா உறுதியாக சொல்கிறார்.
அதுபோல ஈஸ்வரி கோபி இந்த வீட்டுக்கு தான் வருவார் என்று பிடிவாதமாக இருக்கிறார். அப்போது செழியனை கூப்பிட்டு ட்ரீட்மெண்ட் செலவுக்கு ஈஸ்வரி பணம் கொடுக்கிறார். ஆனால் செழியன் அதை வாங்காமல் நாம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஜெனி எப்படி காசு கொடுப்ப உனக்கு வேலை இல்லையே என்று கேட்க சேவிங்கில் இருக்கிற பணத்தை கொடுப்பேன் என்று சொல்கிறார்.
அதற்கு ஜெனி, அன்னைக்கு அம்மாவுக்கு பிரச்சனை வரும்போது நீ அந்த காசை எடுக்கவில்லை, இப்பொழுது அப்பாவுக்கு என்றதும் எடுக்கிறியா? என்று கேட்கிறார். அதற்கு செழியன் இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சமாளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஹாஸ்பிடலில் எழில் இருக்க அங்கு ராதிகா வருகிறார். ராதிகாவை நீங்க போய் பாருங்க என்று ரூமிற்குள் எழில் விடுகிறார். முதலில் ராதிகாவை பார்த்ததும் கோபி முகத்தை திருப்பி கொள்கிறார், தனக்கு ஒன்று என்றால் மொத்த குடும்பமும் இருக்கு.. நீ ஆடி அசைந்து வருகிறாயா? உன்னை எவ்வளவு நம்பினேன், ஆனால் நீ இப்படி பண்ணிட்ட என்று மனம் நொந்து பேசுகிறார்.
ஆனால் அதற்கு ராதிகா நான் வந்தபோது உங்களுடைய குடும்பம் என்னை பார்க்க விடவில்லை என்று நடந்ததை சொல்கிறார். ஆனாலும் தனக்காக மொத்த குடும்பமும் இருக்கிறார்கள், நான் பாக்யாவிற்கு அத்தனை கஷ்டம் கொடுத்தேன் ஆனா அவ கூட எனக்காக ஹாஸ்பிடலில் இருக்கிறா என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து ராதிகா நிற்பதை பார்த்து அவரை வெளியே போகுமாறு விரட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் கோபி முன்னாடி ராதிகா ஒவ்வொரு முறையும் வந்து சண்டை போட்டதால் தான் பார்க்க விடல என்று பிளேட்டை மாற்றுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications