பாக்கியலட்சுமி: ராதிகாவுக்காக பாக்யா எடுத்த முடிவு.. ஈஸ்வரி கேட்ட கேள்வி.. கோபி கொடுத்த பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா சொன்னதற்காக பாக்யா மொத்த குடும்பத்தினரையும் சுற்றுலா செல்ல கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது ராதிகா மற்றும் ஈஸ்வரிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா பாக்யாவிடம் எல்லோரும் வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாம் என்று கேட்டதால், பாக்யா வீட்டில் ட்ரிப் போவதாக சொல்கிறார். அதற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில், அமிர்தா, நிலா பாப்பாவோடு வீட்டிற்கு வருகிறார்கள். பிறகு எல்லோரும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் எழில் பாக்கியாவிடம் நீ இப்படி முடிவு எடுக்க மாட்டியேமா திடீர்னு என்ன இந்த முடிவு எடுத்திருக்க என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி வந்ததும் அந்த பேச்சை நிறுத்தி விடுகிறார். கோபி மற்றும் இன்னும் கிளம்பி வரலையே என்று ஈஸ்வரி கேட்க அந்த நேரத்தில் கோபி ராதிகாவும் மற்றும் மயூவும் வருகின்றனர்.
அதைப் பார்த்ததும் கோபமான ஈஸ்வரி இவளை எதுக்கு கூட்டிட்டு வர என்று கேட்கிறார். அதற்கு கோபி ராதிகாவும் என்னுடைய குடும்பம் தானே... நாம குடும்பமாக போறோம், அப்போ ராதிகாவையும் கூட்டிட்டு வரதுல தப்பு இல்லை என்று நினைக்கிறேன் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி ராதிகா வந்தாலே பிரச்சனைதான் இருக்கும். அவ வர வேண்டாம் என்று சொல்கிறார்.

ஆனாலும் கோபி உங்களிடம் பேச வேண்டும் என்று ஈஸ்வரியை தனியாக கூட்டிக்கொண்டு சென்று, இப்போ இவங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க இவங்கள நான் இப்போ வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டா என்கிட்ட ரூமுக்குள் வைத்து சண்டைக்கு வருவா. அதனால எனக்கு நிம்மதி இல்லாம போகும். அதனால் மீண்டும் நெஞ்சு வலி வந்துடும் என்று சொன்னதும் ஈஸ்வரி சரி என்று சொல்கிறார்.
அதோடு ராதிகாவால் எந்தப் பிரச்சனையும் வராது அதுக்கு நான் கேரண்டி என்று கோபி சொன்னதும் ஈஸ்வரி சமாதானம் ஆகிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் ரெசார்ட்டில் சந்தோஷமாக வந்து இறங்குகின்றனர். அங்கே இனியா இங்க இருக்கிற எல்லா ராட்டினத்திலும் சுற்ற வேண்டும் என்று வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையாக கூப்பிட எல்லாரும் வேலை இருக்கு வரல என்று சொல்கிறார்கள்.

பிறகு இனியாவையும் மயூவையும் ராதிகா கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது இனியா ராதிகாவோடு போவதை பார்த்து ஈஸ்வரி கோபப்படுகிறார். பிறகு ராதிகா எழிலிடம் உன்னுடைய பட சூட்டிங் எப்படி இருக்கிறது என்று விசாரிக்கிறார். அடுத்ததாக நீ படித்திருக்கிறாய் தானே ஏன் வேலைக்கு போகல? உனக்கு விருப்பம் இல்லையா? என்று விசாரிக்கிறார்.
அதற்கு ஜெனி எனக்கு வேலைக்கு போறது விருப்பம் இல்ல. பிசினஸ் பண்ண விருப்பம் என்று சொல்கிறார். பிறகு எல்லோரிடமும் ராதிகா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த இனியா ஈஸ்வரியை ட்ரெயினில் செல்ல வருமாறு அழைக்கிறார். ஆனால் ஈஸ்வரி நான் வரவில்லை என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications