கோபி, பாக்யா வீட்டிற்கு போனதும் ராதிகா சொன்ன வார்த்தை.. ஜெனி கேட்ட கேள்வியால் ஆடி போன குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஈஸ்வரி வீட்டிற்கு கோபி வந்ததால் ராதிகா கடும் கோபத்தில் இருக்க அவருடைய அம்மா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் பாக்கியா வீட்டை விட்டு கிளம்ப கூடாது என்று ராமமூர்த்தி சத்தியம் வாங்கி விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஈஸ்வரியோடு கோபியோடு வீட்டிற்குள் வர அதை பார்த்து எழில் ஈஸ்வரியை திட்ட, ஈஸ்வரி கோபி எங்கேயும் போகமாட்டான். இங்கே தான் இருப்பான் அவனை உள்ள கூட்டிட்டு போங்க என்று இனியாவிடமும் செழியன் இடமும் சொல்கிறார். அதற்கு கோபி நான் இந்த வீட்டில் இருக்க முடியாது.
நீங்க அங்க இருக்கும்போது கேட்டதால என்னால தட்ட முடியாமல் தான் நான் உங்க கூடவே வந்தேன் என்று மீண்டும் ராதிகா வீட்டிற்கு போக போறேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நீ அங்க போனா எனக்கு ஏதாவது ஆகிவிடும். அது உனக்கு பரவாயில்லையா? என்று கேட்க, அதற்கு கோபி என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார். அப்போது எழில் இவரு மீண்டும் வீட்டுக்குள்ள வந்திட்டதால இனி அம்மாவும், இனியாவும் மீண்டும் ஹாலில் படுக்கணுமா? என்று கேட்க அதற்கு ஈஸ்வரி அப்படி யாரும் தியாகம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
என் ரூமில் இருக்கட்டும் என்று சொல்லி கோபியை தன்னுடைய அறைக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது பாக்யா, இனி நான் இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. இவர் வந்துட்டாரு கூடவே ராதிகா வருவாங்க, வந்து நான் இவரை கூட்டிட்டு வந்த மாதிரியே பேசுவாங்க. எனக்கு அந்த கேவலம் தேவை இல்லை. நானே போகிறேன் என்று கிளம்ப அதற்கு எழில் நீ ஏமா வீட்டை விட்டு போகணும்.
இந்த வீடு உன் பேரில் இருக்கிறது. நீதான் இந்த வீட்டில் இருக்கணும். நம்ம கஷ்டப்பட்டு இந்த வீட்டை வாங்கி இருக்கோம் என்று சமாதானப்படுத்த முயற்சிக்கு அதற்கு பாக்யா சம்மதிக்கவில்லை. அப்போது ராமமூர்த்தி நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது. இது என் மேல சத்தியம் என்று வாங்கிக் கொண்டு, நேத்து ராத்திரி முழுக்க ஈஸ்வரி கொஞ்சம் கூட தூங்கல. கோபி இங்கிருந்து போயிட்டா அதையே நெனச்சு ஈஸ்வரிக்கு ஏதாவது ஆகிடும்.
அதுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அவனால இந்த முறை எந்த பிரச்சனையும் உனக்கு வராம நான் பாத்துக்குறேன் என்று பாக்யாவை சமாதானப்படுத்துகிறார். அதே நேரத்தில் கோபி வீட்டை விட்டு அம்மாவோடு போய்விட்டது குறித்து ராதிகாவின் அம்மா ராதிகாவின் அண்ணனுக்கு போன் பண்ணி சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து ராதிகாவிடம் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல, அதற்கு ராதிகா வேண்டாம் உங்களால தான் இந்த ஆளை கல்யாணம் பண்ணினேன்.ஆனா இப்படி அவர் செய்வார் என்று எதிர்பார்க்கல. அடிக்கடி என்னால ஏமாற்றத்தை தாங்கிக்க முடியல. என்னை வேண்டாம்னு போறவர இழுத்து பிடித்து வைக்கிறதுக்கு எனக்கு விருப்பமில்லை.
விட்டுவிடுங்கள் என்று அழுது கொண்டு போக மயூ கவலையோடு பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து வீட்டில் ஜெனி, செழியனுடன் பாக்யா எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது மாலினி வருகிறார். அப்போது செழியனும் நானும் ஏற்கனவே ரெஸ்டாரண்டில் மீட் பண்ணி இருக்கிறோம்.
அப்ப எல்லாம் நல்லா பேசுவாரு. ஆனா இப்போ உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு இவர் என் கூட சரியா பேச மாட்டேன் என்கிறார் என்று சொல்ல, அதற்கு என்னதான் இருந்தாலும் நீங்க ஆபீஸ்ல உள்ளவங்க அவ்வளவு தானே? அதற்காக எதற்கு உங்ககிட்ட செழியன் எப்பவும் பேச வேண்டும்? என்று ஜெனி மாலினியிம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அப்போது செழியன் மற்றும் மாலினியின் நடவடிக்கைகளை பார்க்கும் போது பாக்யாவிற்கு சந்தேகம் வருகிறது.
அந்த நேரத்தில் ஜெனியின் குழந்தை அழுகிறது. நான் குழந்தையை தூங்க வைக்க போறேன் என்று ஜெனி கிளம்பி போக அப்போது செழியனும் மாலினியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் செல்வி இந்த பொண்ணு அடிக்கடி வீட்டுக்கு வருவது சரியா படல அக்கா என்று சொல்ல பாக்கியா எனக்கும் இது தப்பா தான் தெரிகிறது, என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications