பாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. "இவர்களுக்கும்" ரொம்பப் பிடிக்குமாம்!
சென்னை: பிக்பாஸ் புகழ் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் வின்னராக வரவில்லை என்றாலும் குழந்தைகளின் ஃபேவரிட் ஹீரோவாக மாறி விட்டார் .
நாளுக்குநாள் இவருக்கு குழந்தைகளின் அன்பு பெருகிக்கொண்டே வருகிறது .இவர் கப்பு திட்ட வில்லை என்றதும் ஒரு குழந்தை அவங்க அம்மாவிடம் சண்டை போட்டது .
பாலாஜிக்கு தான் கப்பு கொடுக்க வேண்டும் அவருக்கு சப்ப கப் கொடுத்துட்டாங்க என்று பீல் பண்ணி அழுதது வைரலாக பரவி வந்தது.

குழந்தைகளின் செல்லம்
இந்த நிலையில் மீண்டும் குழந்தைகளோடு ஆட்டம் போட்டு பாலாஜி இன்ஸ்டாகிராமில் தனது ஸ்டோரியில் இன்று ஒரு வீடியோவை வைத்திருக்கிறார் .இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். பாலாஜிக்கு ரசிகர்களும், எதிர்ப்பாளர்களும் அதிக அளவில் இருந்த நிலையில் அவர்களை பற்றி கவலைப்படாமல் ரசிகர்களை மட்டுமே கொண்டாடி வருகிறார்.

குழந்தைகளின் மனதில்
எனக்கு இந்த வீட்டிற்குள் இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் பலபேர் மனதை நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஃபேவரட் ஹீரோவாக மாறியது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் எனக்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் .

இன்ஸ்டாகிராம் வீடியோ
அதற்கு தகுந்த மாதிரி தான் குழந்தைகளோடு விளையாடி இவர் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். யார் உடனும் சேர்ந்து விளையாடாமல் தன்னிச்சையாக தன் கோபதாபங்களை காட்டினாலும் அடுத்த நிமிடமே கோபத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டு அதற்கு மன்னிப்பு கேட்கும் குணத்தை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது .

ரசிகர்கள் பட்டாளம்
அதனால் தான் இருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இணையதளங்களில் தற்போது உருவாகி வருகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் பலர் ஃபேன்ஸ் பேஜ்களையும் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். சிலர் இவரை முன்னுதாரணமாக எடுக்கக்கூடாது எடுத்தால் இவரை மாதிரிதான் அடிக்கடி கோபம் கொள்ளும் சைக்கோவாக மாறிவிடுவார்கள் என்று கூறி வந்தாலும் இளைஞர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்திருக்கிறது.

இதுவே பெரிய வெற்றி
குழந்தைகள் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வீடியோக்களை பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யவில்லை என்றாலும் குழந்தைகளின் மனதை ஜெயிச்சது பெரிய வெற்றிதான் என்று சந்தோசம் அடைந்திருக்கிறார். அதுவும் இந்த வீட்டிற்குள் இவர் இருக்கும் போது வெளியில் இவருக்கு இந்த அளவிற்கு ஆதரவு இருக்கும் என்பதை இவர் எதிர் பார்க்கவே இல்லையாம் .

அதிக பாசம்
வெளியே வந்த பிறகு தான் இவர் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு பாசத்தை வைத்திருக்கிறார்கள் என்பதை புரிய முடிந்திருக்கிறது என்று சந்தோஷமாக கூறியிருக்கிறார். அதுவுமில்லாமல் இவர் வீட்டிற்கு வரும்போது இவருடைய நண்பர்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டிருக்கிறார். தொடங்கி செம குத்தாட்டம் போட்டு இவருக்கு வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.

ஆதரவுக்கு நன்றி
யார் என்ன பத்தி என்ன சொன்னாலும் நான் இப்படி தான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன் என்று அடாவடியாக பேசி பல பேர் வைத்து எரிச்சலையும் பல பேர் மனதையும் கொள்ளை கொண்டவர் .எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications