பாலுமகேந்திரா.. "கிறங்கி" விழுந்தது இதுலதான்.. "இசை ராட்சசன்" இளையராஜாவே காரணம்.. இப்படி ஒரு அதிசயமா
சென்னை: இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவரது ரசிகர்கள் இன்னமும் மூழ்கி திளைத்து கொண்டிருக்கிறார்கள்.. அந்தவகையில் இளையராஜா இசையில், பாலுமகேந்திராவுக்கு பிடித்த பாட்டை குறித்தும் நினைவுகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
கவிதையை காகிதத்தில் மட்டும் எழுத முடியுமா? ஏன் வெள்ளித்திரையிலும் எழுதலாமே..!!
சிற்பத்தை கல்லில் மட்டும் செதுக்க முடியுமா? ஏன்? கேமிராவிலும் செதுக்கலாமே? என்று நிரூபித்தவர்தான் "கேமராக்காதலன்" பாலுமகேந்திரா!!

பாலுமகேந்திரா: ஒருவரே படைப்பாளராகவும், தொழில் நுட்ப கலைஞராகவும் இருப்பது ரொம்பவும் கஷ்டம்.. அந்த கடினத்தை எளிமையாக்கியதுடன், வெற்றியையும் பெற செய்தவர் பாலுமகேந்திராதான்..
வசனங்கள், திரைக்கதைகளுக்காகத்தான் காட்சிகள் என்ற நிலை மாறி, கேமிராவுக்காகத்தான் காட்சிகள் என்று மொத்த லாஜிக்கை புரட்டி போட்டது பாலுமகேந்திரா மட்டுமே!!
வெளிச்சம்: ஒளிப்படத்தின் வழியே பிம்பத்தை மட்டுமல்லாமல் உண்மையையும் காட்டமுடியும் என்று நம்பியவர்.. இவருக்கும் இளையராஜாவுக்கும் அத்தனை புரிதல்கள் உண்டு.. ஆழ்ந்த ஆத்மார்த்தம் உண்டு..
மூன்றாவது படத்தில் இளையராஜாவோடு கைகோத்தவர், கடைசி படமான "தலைமுறைகள்" வரை இளையராஜா கையை அவர் விடவே இல்லை.. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் ஏராளமான பாடல்கள் ஹிட் அடித்தாலும், அதில் இருவருக்குமே பிடித்தமான ஒரு பாடல் உண்டு.. அது "தும்பி வா" என்ற மலையாள பாட்டுதானாம்..
ஆட்டோ ராஜா: மலையாளத்தில் "ஓளங்க"ளில் (அலைகள்) படத்தை பாலுமகேந்திரா எடுத்தார்.. அந்த படத்தில் இந்த பாட்டு இடம்பெற்றிருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த பாடல் இது. இளையராஜாவின் புகழ்பெற்ற டியூன்களில் இதுவும் ஒன்று.. இந்த பாடல் வெளியான அதே வருடம், தமிழில் வெளியான "ஆட்டோ ராஜா" என்ற விஜயகாந்த் படத்திலும் "சங்கத்தில் பாடாத கவிதை" என்று இந்த பாடல் இடம்பெற்றது.
அதே பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான "நிரீக்ஷனா" என்ற படத்திலும், ஆகாசம் பாட்டாக வெளிவந்தது. இதே பாட்டை இந்தியிலும் பயன்படுத்த விரும்பினார்கள்.. அவர்களுக்காகவே இளையராஜா இசையமைத்துத் தந்த பாடல்தான் "கும் சும் கும்"
ஆழ்ந்த பிடிப்பு: அதென்னமோ தெரியவில்லை.. பாலுமகேந்திராவுக்கு இந்த பாடல் மீது தனிக்காதல்.. அலாதி பிரியம்.. தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால், இதைதான் முதலில் சொல்லுவாராம் பாலுமகேந்திரா. அதற்காகவே, பல மொழிகளில் தான் இயக்கிய வெவ்வேறு படங்களில் இந்த மெட்டை 3 முறை கேட்டு வாங்கி பயன்படுத்தியுள்ளார்..
அதேபோல, இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த பாட்டு என்றால் இதைதான் சொல்லுவாராம்.. இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும்... அதனால்தானோ என்னவோ, இந்த பாடலை ரசிகர்கள் இன்னமும் சோஷியல் மீடியாவில் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
முரண்பாடுகள்: இப்போதுவரை எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் இளையராஜா மீது இருக்கவே செய்கிறது.. இளையராஜா கோபப்பட்டு பேசிய, எத்தனையோ வீடியோக்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.. ஆனால், அவை எதுவுமே இளையராஜாவின் இசை கொண்டாடப்படுவதை தடுக்கவில்லை என்பதே உண்மை..
ரசிகர்கள் என்றில்லை, எந்த பிரபலங்களை இளையராஜா கடிந்து கொண்டாலும்கூட, அவர்களில் ஒருத்தருமே எதிர்வினையாற்றியதில்லை.. இளையராஜா என்ன திட்டினாலும், அவரது ரசிகர்களும் கோபிப்பதும் இல்லை;.. அவைகள் அனைத்தையுமே எல்லைமீறிய உரிமையாகவே எடுத்து கொள்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக, ரசிகர்களின் காதுகள், இளையராஜாவின் இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டுவிட்டன என்பதுதான் யதார்த்தமான நிஜம்..!!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications