Barathi Kannamma Serial: கன்னத்தில் பொளேர்.. இப்போ சொல்லு...பத்திரிகை எப்படி அடிக்கணும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டு கல்யாணம் செய்து கொண்டவர் கதை.ஒரு பெண் கருப்பாக பிறந்து அவள் படும் கஷ்டங்கள் பற்றிய கதை என்று பல விஷயங்களை சொல்கிறது.

இது போன்ற கதைக்கள் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை சொல்வதாக இருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

இது போன்ற சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சமூகத்தின் பார்வை வேறு மாதிரியாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

திமிர் பணக்காரி

திமிர் பணக்காரி

சவுந்தர்யா அம்மாவுக்கு தான் பணக்கார தொழிலதிபர் என்பதில் திமிர் இருக்கிறது என்றாலும் ,கொஞ்சம் மனித நேயமும் இருக்கிறது .ஆனால், அவர்களுக்கு பிடிக்காத ஒன்று, அதோடு அவங்க வெறுக்கும் ஒரு விஷயம் என்றால் அது கருப்பு நிறத்தில் இருக்கும் பெண்களைத்தான். கருப்பு என்றாலே இருட்டுன்னு கிண்டல் பண்றவங்க அவங்க.

மிஸ் சென்னை அஞ்சலி

மிஸ் சென்னை அஞ்சலி

மிஸ் சென்னை அஞ்சலியை சவுந்தர்யா அம்மாவின் ரெண்டாவது பிள்ளை அகிலன் ஒரு தலையாய் காதலிக்க, அவன் கேட்டதும், அஞ்சலி மிஸ் சென்னை அழகி என்று கல்யாணத்துக்கு சம்மதிக்கறாங்க. அதோட, அஞ்சலி ஏழை வீட்டு பெண் வேற.இவங்க அப்பாவுக்கு முதல் மனைவி இறந்து, அவங்களுக்குத்தான் கருப்பு கண்ணம்மா பிறந்திருக்கிறாள். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவள்தான் இந்த மிஸ் சென்னை அஞ்சலி.

சவுந்தர்யா அம்மாவுக்கு

சவுந்தர்யா அம்மாவுக்கு

அஞ்சலியை பிடிச்ச சவ்ந்தர்யா அம்மாவுக்கு, கருப்பு கண்ணம்மாவை பிடிக்காமல் போகிறது. ஆனால், பாருங்கள்,இவங்களின் மூத்த பையனுக்கு கண்ணம்மாவின் மேல் காதல் வந்து, அம்மாவுக்கு தெரியாமல் கல்யாணம் செய்துகிட்டு வந்துடறான்.இருந்தாலும் சவுந்தர்யா அம்மா கண்ணம்மாவை ஏத்துக்கலை.

லக்ன பத்திரிகை

லக்ன பத்திரிகை

லக்னப்பத்திரிகை எழுதும்போது பெண் வீட்டாரிடம் கலந்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று சவுந்தரா அம்மா முடிவு செய்து, அஞ்சலியின் அப்பா,அம்மா பெயரை போட்டு, இவர்களின் ஒரே புதல்வி அஞ்சலிக்கும், அகிலனுக்கும் என்று போட்டுவிட கொதித்து போகிறார் கண்ணம்மாவின் அப்பா.

எப்படி வேணும்னாலும்

எப்படி வேணும்னாலும்

இளைய மகள் அஞ்சலின்னு போடறதுக்கு ஒரே மகள்னு போட்டு இருக்காங்கன்னு அப்பா கேட்க, ஏன்.. எனக்கும் உங்களுக்கும் பிறந்தவ இவ மட்டும்தானே..இல்லை எனக்கே தெரியாமல் இன்னும் ஒரு பிள்ளையை பெத்து போட்டேனா நானு என்று அஞ்சலி அம்மா கேலி பேச, பொளேர் என ஒரு அறை விடுகிறார்.இப்போ சொல்லு பத்திரிகை எப்படி அடிக்கணும்னு என்று கேட்க நீங்க சொல்ற மாதிரி எப்படி வேணும்னாலும் அடிக்கலாம்ங்கன்னு சொல்றாங்க அஞ்சலி அம்மா.

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க..சரிதானே?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+