Barathi Kannamma Serial: கண்ணம்மாவை அடிக்கும் சித்தி அத்தை.. பாரதிக்கு மனசில் வலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்பு கண்ணம்மாவை அத்தை பொளேர் பொளேர்னு அடிக்கறாங்க. அடுத்து மாற்றாம் தாய் பொளேர் பொளேர்னு அடிக்கறாங்க.

இதை எல்லாம் கூட பொறுத்துக்கொண்ட கண்ணம்மாவுக்கு கணவன் பாரதி நெஞ்சிலே சாய்ந்து அழும்போது அவனுக்கு மனதில் கொடுக்கிறாள் பாருங்கள் மனதில் ஒரு அடி. அதுதான் பயங்கரமான வலி.

முதலில் தனக்கு முதலிரவு நடக்க கூடாது. அதற்கு பலியாடு ஒருத்தர் வேண்டும் என்று நினைக்கிறாள் அஞ்சலி. அதற்குத்தான் கண்ணம்மா இருக்கிறாளே!

அஞ்சலிக்கு ஜூஸ்

அஞ்சலிக்கு ஜூஸ்

அஞ்சலிக்கு ஜூஸ் குடுங்க மல்லிகா அக்கா, எனக்கு வேணாம்னு கண்ணம்மா சொல்ல, இல்லை காலையில் இருந்து வெறும் வயிற்றில் வேலை செய்துகிட்டு இருக்கே. அதனால நீயே குடின்னு சொல்லி வச்சுட்டு போறாங்க மல்லிகா. சரின்னு சொல்லி திரும்பி வேலையைப் பார்க்க, அஞ்சலி சத்தம் போடாமல் வந்து, ஜூஸில் விஷ மாத்திரையை கலந்து வச்சுடறா.

சர்க்கரை இல்லையே

சர்க்கரை இல்லையே

அய்யே இந்த மல்லிகாக்கா ஜூஸில் சர்க்கரையே போடலைன்னு சொல்லி, சர்க்கரையை கலப்பதை சவுந்தர்யா அம்மா பார்த்துடறாங்க.அறிவு வந்து, அஞ்சலிக்கு பசிக்கும் கண்ணம்மா அவளுக்கு ஜூஸ் குடுன்னு சொல்ல, நான் குடுத்தால் குடிக்கமாட்டா. நீங்க குடுத்ததா சொல்லிட்டு அறிவுன்னு சொல்லி அனுப்ப, அஞ்சலியும் தான் விஷம் கலந்த ஜூஸை தானே வாங்கி வச்சுக்கறா.

தொட பிடிக்கலை

தொட பிடிக்கலை

அகிலன் ஆசையாக அஞ்சலியைத் தொட, அவளுக்கு பிடிக்கலை.இப்போ வேணாம் அகிலன்னு சொன்னாலும் அவன் கேட்கலை.சரி சரி இரு பால் குடிக்கலாம். நீ பாலை குடி..நான் இந்த ஜூஸை குடிக்கறேன்னு சொல்லிட்டு குடித்த வேகத்தில் மயக்கம் போட்டு விழுந்துடறா அஞ்சலி.

விஷத்தை கண்ணம்மாதான்

விஷத்தை கண்ணம்மாதான்

சாப்பிட்டதில் ஃபுட் பாய்சன் ஆயிருச்சுன்னு டாக்டர் சொல்ல, சவுந்தர்யா அம்மா கண்ணம்மா ஜூஸில் என்னவோ கலந்ததை நான் பார்த்தேன்னு சொல்லிப் பாளார் பளார்னு அவளை அடிக்கறாங்க அப்போது பாரதி வேறு ஒரு ஆபரேஷனில் இருந்தான்.அத்தையும் சித்தியும் கண்ணம்மாவை அடிக்க, அப்போதுதான் வந்த பாரதிக்கு விஷயம் தெரிய வருகிறது.

தெரியாது மாமா

தெரியாது மாமா

பாரதி மார்பிலே சாய்ந்து, மாமா எனக்கு இந்த விஷம் கலக்க எல்லாம் தெரியாது மாமா.என்னை யாராவது திட்டினால் கூட தனியா போயி அழுவேனே தவிர,இந்த வேலை எல்லாம் எனக்கு தெரியாது. மாமா. என்னை கொலை செய்ய விஷம் கலந்தேன்னு சொல்றாங்கன்னு அழறா. பெண்டாட்டி வாங்கிய அடி, அவள் மீது விழுந்த பழி, அதைத் தாங்காமல் அவள் அழுகை என்று, பாரதிக்கு நெஞ்சு வலிக்கிறது.

இதற்காகத்தான் பாரதி கண்ணம்மா என்று சீரியலுக்கு பெயர் வைத்து இருப்பார்கள் போலும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+