Barathi kannamma serial: என்ன இவ..அக்கா புருஷனை பார்த்து ஐ லவ் யூ சொல்றா!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கருப்பு கண்ணம்மாவை மிகவும் காதலித்து கல்யாணம் செய்துக்கறான் பாரதி. பாரதியின் அம்மாவுக்கு கருப்பு பிடிக்காது. முக்கியமாக கருப்பு நிறத்தில் இருப்பவர்களை கண்டாலே பிடிக்காது.
பாரதியின் தம்பி அகிலன் மிஸ் சென்னை அஞ்சலியை காதலிக்கப் போக, அவனுக்கு அவனின் விருப்பப்படி அழகியான அஞ்சலியை பேசி முடிக்கப் போகையில்தான் கருப்பு நிற கண்ணம்மாவைப் பிடித்துப் போகிறது பாரதிக்கு.
கண்ணம்மாவுக்கு அஞ்சலியின் அம்மா சித்தி, அதாவது அவளின் அப்பாவுக்கு இரண்டாவது மனைவி.இதனால், சித்தி கொடுமை, தங்கை கொடுமை, பாட்டி கொடுமை என்று அத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கிறாள் கண்ணம்மா.

கண்ணம்மா அப்பா
அப்பாவின் அரவணைப்பில் மட்டுமே கண்ணம்மா வளர்கிறாள்,. பாரதியின் அம்மா சவுந்தர்யா அம்மாவுக்கு கண்ணம்மாவை பிடிக்கவில்லை. வேலைக்காரி என்று கண்ணம்மாவை சவுந்தர்யா அம்மாவிடம் சொல்றாங்க சித்தி. அஞ்சலி அகிலன் கல்யாணம் முடிஞ்ச உடனே அவளை அவள் வீட்டுக்கு அனுப்பி வச்சுடுங்கன்னு சொல்லிடறாங்க சவுந்தர்யா அம்மா.

அஞ்சலி அகிலன்
தன்னை பிடித்து போயி பெண் பார்க்க வந்த அகிலனை அஞ்சலிக்கு பிடிக்கலை.மாறாக அவனது அண்ணன் பாரதியைப் பிடிச்சுப் போகுது., ஏழையான அவளால் அதை வெளிப்படையாக சொல்ல முடியலை. என்றாலும், அகிலனை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சுட்டு, பாரதியை காதலிக்கிறாள் அஞ்சலி. இந்த இடத்தில் அஞ்சலி தவறு செய்ய ஆரம்பிக்கிறாள்.

பாரதி அஞ்சலி
அஞ்சலி பாரதியை லவ் டார்ச்சர் செய்ய ஆரம்பிக்க நொந்து போகிறான் பாரதி.எப்போதும் பாரதி மாமா பாரதி மாமான்னு சொல்லி அவனது உயிரை எடுத்து, ஐ லவ் யூ வேற சொல்லிக்கிட்டு திரிகிறாள். பாரதிக்கு இவள் இப்பட்டி செய்யும் ஒவ்வொடு நிமிஷமும் நெருப்பின் மேல் நிற்பது போல இருக்கிறது. தம்பியின் ஆசைக் காதலி, தன்னிடம் இப்படி நடந்துகொண்டால் யாருக்குத்தான் கோவம் வராது.

பாரதி கண்ணம்மா
அஞ்சலி தன் பிறந்த நாளில், நான் பாரதி மாமாவை காதலிப்பதாக சொல்லப் போகிறேன் என்று மிரட்டல் விட , காதலிச்ச அஞ்சலி கிடைக்கலேன்னா அகிலன் கதை என்னாகுமோ என்கிற எண்ணத்தில், உடனடியாக தான் காதலிச்ச கண்ணம்மாவை யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துகிட்டு வந்துடறான் இதை அஞ்சலியால் தாங்கிக்க முடியலை.
என்றாலும், அகிலனை கல்யாணம் செய்துகிட்டு,பாரதியை கரெக்ட் செய்துட வேண்டும் என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறாள் அஞ்சலி. அகிலன், என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லு அஞ்சலின்னு கேட்க, கண்ணை மூடிக்கோங்கன்னு சொல்லிட்டு, பாரதிக்கு போன் செய்து ஐ லவ் யூன்னு சொல்றா.
இதை கேட்ட கோவத்தில் அவளை தனியாக வர சொல்லி கன்னத்தில் பொளேர்னு அடி விடறான் பாரதி. போனாப் போகுதுன்னு விட்டா எல்லை மீறிப் போறேடி... நான் கண்ணம்மாவை உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கேண்டீன்னு கத்தறான் பாரதி.
பின்னே இப்படிப்பட்ட பெண்களை என்னதான் செய்வது?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications