Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசிகர்கள் அதை மட்டுமா பார்க்கிறார்கள்.. எகிறி அடிக்கும் பாரதி கண்ணம்மா.. இது செம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் கவர்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, பெண்களின் முக்கியத்துவத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அப்படி கொடுக்கும்போது நிச்சயம் அதை பெரிதாக வரவேற்பார்கள். அதைத்தான் நிரூபித்துக் காட்டியுள்ளது பாரதிகண்ணம்மா சீரியலின் டிஆர்பி.

சீரியல்கள் என்றாலே பொதுவாக பலரின் மனதில் அது ஒரு குடும்ப வன்முறையை உருவாக்கும் கதைகள், அதில் பழிவாங்கும் படலம் தான் அதிகமாக இருக்கும் என்று ஒரு எண்ணம் உள்ளது. பல சீரியல்களிலும் அதேபோலதான் கதைகளும் இருக்கின்றன,

தற்போது சில சீரியல்களில் காதல், ரொமான்ஸ்களிலும் பின்னி பெடல் எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளிவிட்டு பெண்களின் சுயமரியாதையும் நல்லெண்ணத்திருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது பாரதிகண்ணம்மா சீரியல்.


கூடும் ரேட்டிங்

கூடும் ரேட்டிங்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இன்று சீரியல் வந்திருக்கிறது. பலர் இது அதிசயங்களில் ஒன்றுதான் என்று கூறி வந்தாலும் உண்மையில் இந்த கதையில் பெண்ணின் பெருமையும் ஒரு உண்மையான பெண்ணின் தைரியத்தையும் எடுத்துக்காட்டுவதாக இந்த வாரம் எபிசோடு இருந்ததே காரணம் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பெண்களின் அவல நிலை

பெண்களின் அவல நிலை

இந்த சீரியல் பல சீரியல்களை போன்ற கதையோடு இருந்தாலும் இது பல பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை எடுத்துக்காட்டுகிறது. அதுவும் படிக்காத மற்றும் அழகில்லாத அழகில் குறைந்த பெண்கள் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை எடுத்துச் சொல்வதால் இந்த சீரியலுக்கு கிராமப்புறங்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

கருப்பா இருந்தால் அவலமா

கருப்பா இருந்தால் அவலமா

பல பெண்கள் தாங்கள் கருப்பாக இருப்பதால் பல அவமானங்களையும் தாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தங்களுடைய அழகை கூட்ட வேண்டும் என்று நிறையவே மெனக்கெடுகிறார்கள். அதனால்தான் இன்று பல கம்பெனிகளின் அழகு சாதன பொருள்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது. கருப்பாக இருப்பவர்களை கேவலமாக பார்க்கும் ஒரு கூட்டம் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கண் கெட்ட ஜென்மங்கள்

கண் கெட்ட ஜென்மங்கள்

கலராக இருப்பவர்கள் அழகு என்று சில கண் கெட்ட ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த சீரியலும் இதனை மையமாகக் கொண்டு தான் எடுக்கப்பட்டது. ஒரு கருப்புப் பெண்ணை ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று தான் இந்த சீரியலின் கண்ணம்மா கேரக்டரில் ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது கேரக்டர் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதால், பல பெண்களும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். கருப்பாக இருக்கிறோம் என்று நமக்கு ஏற்பட்ட அவமானங்களும் இந்த பெண்ணிற்கும் நடப்பதை பார்த்து சிலர் கூறியிருக்கிறார்கள்.

மாமியார்

மாமியார்

அதற்கெல்லாம் பலனாக இந்த கதையின் படி இவருக்கு ஒரு நல்ல கணவன் கிடைத்தது இவருக்கு ஆதரவு கூடியிருக்கிறது. ஆனால் இந்தக் கதையின் படி இவரை முதலில் இவரது மாமியார் வெறுத்து ஒதுக்கி இருக்கிறார் .இது பல வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் தனது மகன் மீது உள்ள பாசமும் மகனுக்கு இருக்கும் குறையை மருமகள் தனக்கு என்று ஒத்துக் கொண்டதாலும் இவர் மீது அவருக்கு வெறுப்பு இருந்திருக்கிறது. தற்போது இந்த சீரியலின் கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் சந்தோசப்பட்டு அவருடைய மாமியார் அவரை தன் மகள் போல பாசமாக பார்த்துக்கொண்டிருக்கிறார் .

கதிலங்கிப் போன கண்ணம்மா

கதிலங்கிப் போன கண்ணம்மா

இருப்பினும் இதுவரையிலும் பாசமாக இருந்த கணவர் அவருடைய பள்ளி தோழி மூலமாக தனக்கு குழந்தை பிறக்காது என்பது என்ற அவரின் பொய் சர்டிபிகேட்டால் சந்தேகப்பட்டு அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்திருக்கிறார். என்ன நடந்தாலும் தனக்கு பாரதி மாமா முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறார் என்று தைரியமாக இருந்த கண்ணம்மா தற்போது பாரதியின் செயலைப் பார்த்து கதிகலங்கி போய் விடுகிறார். அதுமட்டுமல்லாமல் பாரதியின் ஸ்கூல் பிரண்ட்டான வெண்பா பாரதியை காதலிப்பதால் கண்ணம்மாவை கொலை பண்ணுவதற்கு துர்கா என்பவரை அனுப்பி இருக்கிறார்.

கொலைகார துர்கா

கொலைகார துர்கா

அவர் கெட்டவர்களை மட்டுமே கொலை பண்ணும் கொலைகாரன் அவனிடம் வெண்பா கண்ணம்மாவை பற்றி தப்பாக சொல்லி கொலை பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை முதலில் நம்பிய துர்காவும் அந்த வீட்டிற்குள் நுழைந்து கண்ணம்மாவை பலமுறை கொலை பண்ண ட்ரை பண்ணியிருக்கிறார். ஆனால் கண்ணம்மாவின் உண்மையான குணத்தை தெரிந்து கொண்ட துர்கா கண்ணம்மாவிடம் உண்மையை கூறிவிடுகிறார் .அதுவும் வெண்பா கொலை செய்ய சொன்னது பாரதி தான் என்று துர்காவை நம்ப வைத்திருக்கிறார். அதை அப்படியே சொல்லும்போது கண்ணம்மா பெரிய ஷாக் ஆகி இருக்கிறார் .அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் ஷாக்காகி இருக்கிறது.

குண்டு போட்ட பாரதி

குண்டு போட்ட பாரதி

தற்போது பாரதி தன்மீது வைத்திருந்த காதல் முடிந்து போய்விட்டது தன்னை கொலை செய்ய சொன்னதே இவர்தான் என்று தெரிந்ததும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று வீட்டை விட்டு கிளம்பும் போது அவரது மாமியார் மாமனார் எல்லோரும் தடுக்கும்போது உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பாரதியிடம் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் பாரதியும் நான் இந்த குழந்தைக்கு அப்பா இல்லை என்னால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது அதை இரண்டு முறை டெஸ்ட் எடுத்து இருக்கிறேன் என்று டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்துக் காண்பிக்கிறார்.

புரட்சித் தீ கண்ணம்மா

புரட்சித் தீ கண்ணம்மா

இதை சற்றும் எதிர்பார்க்காத குடும்பமும் கண்ணம்மாவும் பெரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த அளவிற்கு உன் மீது நம்பிக்கை இல்லாமல் சர்டிபிகேட்டை நம்பும் நீ எனக்கு தேவையில்லை என்று என் குழந்தையை என்னால் வளர்க்க முடியும் என்று அந்த வீட்டை விட்டு அவர் கிளம்புவது போல இந்த வாரம் எபிசோடுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலுக்கு இல்லாத அளவிற்கு பெரும் ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+