முடியும் என எதிர்பார்த்தது மீண்டும் தொடர்கிறது... பாரதி கண்ணம்மாவில் எதிர்பார்க்காத திருப்பங்கள்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலின் எபிசோட்டில் இன்று ஹேமா தான் அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்ததால் தான் பாரதி தன்னிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் .அதனால் என்னை அங்கேயே கொண்டு விட்டுவிடுங்கள் என்று குடும்பத்தினரிடம் அழுது கெஞ்சி கொண்டிருக்கிறார்.
மருத்துவமனையில் பாரதி, கண்ணம்மாவிடம் ஹேமாவை தன்னிடம் பேசி சொல்லி எடுத்து கூற சொல்லியதற்கு கண்ணம்மா முகத்துக்கு நேராக பாரதிக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

பாரதியின் கேள்விக்கு கண்ணம்மாவின் பதில்
பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பாரதி மருத்துவமனைகளில் யோசித்தபடி இருக்கிறார். அப்போது கண்ணம்மாவை அழைத்து இன்று என்ன ப்ரோகிராம் இருக்கிறது என்பதை கேட்கிறார். கண்ணம்மா இன்றைய ப்ரோக்ராம் பற்றி விரிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார். கடைசியில் பாரதி நான் உங்களிடம் ஒரு ஹெல்ப் கேட்பேன் நீங்க செய்வீங்களா என கேட்டவும், சொல்லுங்க சார் என்று கண்ணம்மா சொல்கிறார் .எங்க வீட்டில் யாருமே என்கிட்ட பேசிட மாட்டார்கள், எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது .ஆனால் அதைவிடவும் ஹேமா என்னிடம் பேசாமல் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை .அதனால் ஹேமாவிடம் பேசி என்னிடம் பேச சொல்லுங்கள் என்று சொல்கிறார் .அதற்கு நான் உங்களுடைய பர்சனல் விஷயத்தில் தலையிடுவதற்கு யார்? எனக்கு அப்படி ஒரு அவசியம் இல்லை என்று கண்ணம்மா சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கண்ணம்மாவுக்கு கிடைத்த வரவேற்பு
கண்ணம்மா தன்னிடம் திமிராக பேசிக்கொண்டு செல்வதை கோபத்தோடு பாரதி புலம்பி கொண்டிருக்கிறார் .பேசு இன்னும் ஒரு நாள் தான் டிஎன்ஏ ரிசல்ட் வரட்டும் அதற்குப் பிறகு நான் பேசுகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வீட்டில் அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்கின்றனர் அப்போது பாரதி வந்து நிற்கிறார் யாருமே கண்டு கொள்ளவில்லை. கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு லட்சுமியோடு வருகிறார். ஹேமா வர சொன்னதாக தான் வந்ததாக குடும்பத்தினரிடம் சொல்கிறார் .லட்சுமி மற்றும் கண்ணம்மா இருவரும் வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ஹேமா
அனைவரும் கண்ணம்மாவிடம் பேசுவதை பார்த்து பாரதி கடுப்பாகிறார். ஹேமா எதற்காக வர சொன்னார் என்று அனைவரும் குழப்பத்தோடு இருக்கும்போது, ஹேமா கையில் பெட்டியோடு மாடியில் இருந்து கீழே வருகிறார். எதற்காக துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் என்று எல்லோரும் கேட்டதற்கு என்னை அனாதை ஆசிரமத்தில் இருந்து தானே எடுத்துக்கொண்டு வந்ததாக அப்பா சொன்னார் .அங்கேயே என்னைக் கொண்டு விட்டு விடுங்கள் இங்கே இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார் .அனைவரும் அதிர்ச்சியில் ஏன் ஹேமா இப்படி பேசுகிறாய் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இது முடிகின்ற மாதிரி தெரியலையே
ஹேமா பேசுவதை கேட்டு அதிர்ச்சியான பாரதி நான் தெரியாமல் செய்துவிட்டேன் .ஹேமா இனி இப்படி பண்ண மாட்டேன் என்று சொல்கிறார். நீங்கள் ஏற்கனவே இப்படிதான் என்னிடம் சத்தியம் செய்துவிட்டு என்னை ஏமாற்றி வெண்பாவை ஆன்ட்டியை திருமணம் செய்ய போனீங்க .நான் எப்போதே வீட்டை விட்டு போகணும் என்று தான் கிளம்பினேன். நீங்க அப்போ சத்தியம் செய்து சொன்னதினால் தான் இருந்தேன். ஆனால் சொல்லி ஒரு வாரத்திற்குள் மீண்டும் என்னிடம் பொய் சொல்லி விட்டீங்க. இதுவே உங்களுடைய பொண்னாக இருந்திருந்தால் இப்படி என்கிட்ட பொய் சொல்ல மாட்டீங்க? அதனால எனக்கு இங்க இருக்கு பிடிக்கல, நான் ஒரு அனாதை தானே என அனாதை ஆசிரமத்தில் கொண்டு விட்டுருங்க என்று அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. முதல் பாகம் முடிவடைய போகிறது என்று செய்தி வெளியானதும் விரைவில் டிஎன்ஏ டெஸ்ட் வெளியாகி சீரியல் முடிவடையும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் திருப்பங்கள் வருவது கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது. நாளை எபிசோட் கண்ணம்மா நாளைய எபிசோடில் நான் தான் உன்னுடைய அம்மா என்று ஹேமாவிடம் கூற இருக்கிறார்.












Click it and Unblock the Notifications