சுருண்டு விழுந்து மயங்கிய பாரதி.. சவுந்தர்யாவுக்கு அதிர்ச்சி.. பாரதி கண்ணம்மாவில் செம ட்விஸ்ட்
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தலையில் வில்லன் இரும்பு ராடால் ஓங்கி அடிக்க அடுத்து ஒரு விறுவிறுப்பான ட்விஸ்ட் ஏற்படுகிறது. இதில் சவுந்தர்யா தேவி அதிர்ச்சி அடையும் சம்பவமும் நடந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை பற்றி கிராமத்தில் பாண்டி என்பவர் தவறாக பேசுகிறார். அப்போது கோபமடையும் பாரதி, எப்படியாவது பாண்டியை கண்ணம்மாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என நினைக்கிறார்.
இதற்காக பாண்டியுடன் பாரதி குஸ்தி சண்டை போடுகிறார். அப்போது பாண்டி அடித்ததால் பாரதி தரையில் விழுந்து விடுகிறார். பிறகு பாண்டி, அங்கிருந்தவர்களிடம் பார்த்தீர்களா உங்கள் டாக்டரின் நிலைமையை என கூறி சிரிக்கிறார்.

பாண்டி ஏளனம்
அவ்வாறு பாண்டி ஏளனமாக கூறி கொண்டிருக்கும் போதே பாரதி எழுந்து நின்று பாண்டியுடன் சண்டையிடுகிறார். தீவிரமாக சண்டையிடும் பாரதி, இறுதியில் பாண்டியை தோற்கடித்துவிடுகிறார். இதையடுத்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேள் என பாரதி பாண்டியை மிரட்டுகிறார். அதற்கு பாண்டி தயங்குகிறார்.

ஊர்காரர்கள்
உடனே ஊர்காரர்கள் எல்லாரும் ஒருமித்த குரலில் பாண்டியை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேள் என்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். பாண்டி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த போது பாண்டியின் நண்பர்கள் மறைத்து வைத்திருக்கும் சுத்தியலை பாண்டியிடம் கொடுக்கிறார்கள்.

பாரதியின் தலையில் ஓங்கி அடித்த பாண்டி
உடனே பாண்டி அதை எடுத்து பாரதியின் தலையில் ஓங்கி அடிக்கிறார். உடனே பாரதி தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து மயங்கிவிடுகிறார். இதையடுத்து அவரை தூக்கிக் கொண்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். தலையணை முழுவதும் ரத்தமாக உள்ளது. இந்த சமயத்தில் பாரதியின் தாய் சவுந்தர்யாவிற்கு மனது என்னவோ போல் இருக்கிறது.

அடம்பிடிக்கும் சவுந்தர்யா
சற்று இறுக்கமாகவே இருக்கிறது. இதனால் என்ன ஆக போகிறதோ என அச்சம் கொள்கிறார் சவுந்தர்யா. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த கண்ணாடி ஒன்று உடைந்துவிடுகிறது. இதனால் பாரதிக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த சவுந்தரயா உடனே மகன் பாரதியை பார்க்க வேண்டும் என அடம்பிடிக்கிறார். பாரதிக்கு ஒன்றும் ஆகியிருக்காது என சவுந்தர்யாவிடம் அகிலன்- அஞ்சலி கூறியும் அவர் கேட்காமல் நான் தனியாக கிளம்புகிறேன் என கூறி காரில் கண்ணம்மாவின் ஊருக்கு கிளம்புகிறார் சவுந்தர்யா.

மருத்துவமனையில் பாரதி
இதனிடையே பாரதியை மருத்துவமனையில் சேர்க்கும் கணபதி, டாக்டர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு சவுந்தர்யாவுக்கு பாரதிக்கு நடந்ததை கணபதி கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் சவுந்தர்யா அலறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது பாரதியின் நிலையை பார்த்து சவுந்தர்யா கண்ணீர் விட்டு அழுகிறார். அப்போது பாரதி என்னடா ஆச்சு உனக்கு என சவுந்தர்யா கேட்க, உடனே கண்விழிக்கும் பாரதி, "நீங்கலாம் யாரு" என கேட்டு எல்லோருக்கும் உச்சகட்ட அதிர்ச்சி கொடுக்கிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications