"பாரதிராஜா பையனுக்கென்னடா குறைச்சல்?" பல்லைக் கடித்துக் கொண்டு.. அடங்காத ஆசையுடன் அடங்கிப்போன மனோஜ்
சென்னை: தன்னுடைய அப்பாவை வைத்து மனோஜ் டைரக்ட் செய்திருந்தது, அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டாலும், தேசம் போற்றும் மிகப்பெரிய டைரக்டராகி விடவேண்டும் என்பதே மனோஜின் உச்சபட்ச ஆசையாக இருந்தது.. அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருந்தார். அதற்குள் தன்மூச்சை நிறுத்திக்கொண்டுவிட்டார் மனோஜ்.
பிரபலமான இயக்குனராக வந்திருக்க வேண்டியவர் மனோஜ்.. அவருடைய மூச்சு முழுவதுமே சினிமாவாகவே இருந்தது.. தாஜ்மஹால் படத்தில் நடித்போது, ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை மனோஜ் சந்தித்திருந்தார்.. அதேசமயம், ஈச்சி எலுமிச்சி பாடலில், அவரது பிரத்யேக குரலுக்கு பலரும் ரசிகர்களாகி போனார்கள்..

கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் முன்னுக்கு வரமுடியவில்லை.. எத்தனையோ நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் இமயத்துக்கு, தன்னுடைய மகனையே பெரிய நடிகராக கொண்டு வர முடியவில்லையே? என்ற விமர்சனங்கள் இன்றுவரை வலம்வரத்தான் செய்கிறது.
அஜிய் - விஜய்
சினிமா துறையில் மனோஜுக்கு அஜித் நெருங்கிய நணபர் என்றால், விஜய் அண்டை வீட்டுக்காரர் ஆவார். எனினும், யார் மூலமும் மனோஜூக்கு எந்த பெரிய உதவியும் கிடைத்ததாக தெரியவில்லை.
முதல் படத்தை அதிகமாக எதிர்பார்த்திருந்தது மனோஜ் மட்டுமல்ல, பாரதிராஜாவும்தான்.. இத்தனைக்கும் தாஜ்மஹால் ஷூட்டிங்கின்போது 2 முறை உயிர் பிழைத்துள்ளார் மனோஜ்.. 30 அடி ஆழத்துல இறங்கி தண்ணீரிலிருந்து மேலே வர முடியாத அளவுக்கு புதரில் கால் மாட்டி தவித்திருக்கிறார்.. இன்னொரு முறை குதிரையிலிருந்து கீழே விழுந்து, முதுகெலும்பு உடைந்து படுஅவஸ்தைக்கு உள்ளானார். இவ்வளவு ரிஸ்க் எடுத்தும்கூட, தாஜ்மஹால் வெற்றிப்படமாக அமையவில்லை.
தன் மகனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டுமென மெனக்கெட்டு, தாஜ்மஹால் படத்தை பாரதிராஜா எடுத்திருந்த போதும், அதீத மெனக்கடல்களால் அந்த படத்தை கெடுத்ததே பாரதிராஜாதான் என்றும் விமர்சனமும் அன்றைய காலகட்டத்தில் எழுந்தது.
தன்னுடைய திறமை வெளியே தெரியவில்லை என்ற வருத்தம் மனோஜூக்கு மனதை அரித்து கொண்டே இருந்தது.. பல சமயங்களில் மனசு நொறுங்கி விழுந்தபோதெல்லாம், தனக்கு உறுதுணையாக எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டது, மமனவியும், குழந்தைகளும்தான் என்று உருக்கமாக மனோஜ் கூறியிருக்கிறார்.. நடிப்பதற்கு வாய்ப்புகள் வராவிட்டாலும் சோர்ந்து போகாமல், உதவி இயக்குனராக பணி புரிந்ததற்கு காரணம், சினிமா மீது மனோஜூக்கு உள்ள ஆர்வமும், அடங்காத ஆசையும்தான்..
ஈகோ பார்த்தால் முடியுமா
ஒரு பேட்டியில் மனோஜ் கூறியிருந்தார், "டைரக்ஷனில்தான் நிறைய ஆர்வமாக இருந்தேன்.. அதனால்தான், மணிரத்னம் சாரின் பம்பாய் படத்தில் உதவி இயக்குனநராக பணிபுரிந்தேன்.. அப்பாவின் ஆசைக்காக அமெரிக்கா சென்று நடிப்பு பயிற்சி படிச்சிட்டு நடிக்க வந்தேன்.
என்ன கேரக்டர் தேடி வந்தாலும் நடிக்கலாம்னு இருந்தேன்.. ஆனால், வாய்ப்புகள் வரல.. நாமளாகவும் தேடிப்போக முடியாத நிலைமை.. அப்புறம்தான் எந்திரன் படத்தில் பணிபுரிந்தேன்.. ரஜினி சாருக்கு டூப் போட்டு நடிச்சேன்.. டிராபிக் போலீஸ் கை வெடுற சீன், மணலில் ஓடற சீன் எல்லாமே நான்தான் பண்ணேன்.. ஈகோ பார்த்தால் எங்கேயும் வேலை பார்க்க முடியாது.
அவனுக்கென்னடா, பாரதிராஜா பையன்
வெளியே இருந்து பார்க்கும்போது, யாருக்கும் என் கஷ்டம் பெரிசா தெரியாது.. அவனுக்கென்னடா, பாரதிராஜா பையன், என்ன குறைச்சல்னு சொல்லுவாங்க. என்னோட இடத்துல இருந்து பார்த்தால்தான் தெரியும். 2005-லிருந்து 2012 வரை வேலை இல்லாமல்தான் இருந்தேன்.. வருமானமும் இல்லை. பல்லைக் கடித்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
என் அப்பா அடிக்கடி சொல்வார், "நம்பிக்கையோடு கனவுகளை துரத்து.. இந்த உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் பிறந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. அதை ஒழுங்காக நீ துரத்தினால் முன்னுக்கு வருவாய்" என்றார்.. அதைதான் ஃபாலோ பண்றேன்" எனறெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
தன்னுடைய அப்பாவை வைத்து மனோஜ் டைரக்ட் செய்திருந்தது, அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டாலும், தேசம் போற்றும் மிகப்பெரிய டைரக்டராகி விடவேண்டும் என்பதே மனோஜின் உச்சபட்ச ஆசையாக இருந்தது.. அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருந்தார். அதற்குள் தன்மூச்சை நிறுத்திக்கொண்டுவிட்டார் மனோஜ்.












Click it and Unblock the Notifications