"பிக்பாஸ்" என் சுயநலமல்ல, பொதுநலம்.. மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன்- கமல்
மக்கள் எல்லோரிடமும் பேசவும், தொடர்பு கொள்ளவும் பிக்பாஸ் 2 தளத்தை பயன்படுத்திக் கொள்வேன் என்று கமல்ஹாசன், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசியுள்ளார்.
சென்னை: மக்கள் எல்லோரிடமும் பேசவும், தொடர்பு கொள்ளவும் பிக்பாஸ் 2 தளத்தை பயன்படுத்திக் கொள்வேன் என்று கமல்ஹாசன், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசியுள்ளார்.
மக்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஆரவார பிக்பாஸ் போட்டியின் அடுத்த சீசன் தொடங்கிவிட்டது. பிக்பாஸ் சீசன் 2, இன்னும் 100 நாட்களுக்கு இணையம் தொடங்கிய, தெரு முனையில் இருக்கும் பாட்டிகளின் இணையம் வரை, எல்லோரும் இதை பற்றித்தான் பேச போகிறார்கள்.

இப்படி எல்லோரும் பேச போகும் பிக்பாஸ் பற்றி, கமல்ஹாசன் பேசினார். தொடர்ந்து இரண்டாவது வருடமாக பிக்பாஸை தொகுத்து வழங்குகிறார். அதில் அவர் கூறிய சில குறுப்படம் முத்துக்கள் மக்களை கவர்ந்தது.
அதில், அரசியலுக்கு வந்த பின்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முக்கிய காரணம் இருக்கிறது. இந்த நிகழ்வு மூலம் மக்களுடன் அதிக தொடர்பில் இருக்க முடியும். இந்த பிக்பாஸ் மூலம் தினமும் நான் மக்களுடன் பேச முடியும். இதனால் அதிக மக்களிடம் பேச முடிகிறது.
இந்த பிக்பாஸ் என்பது என்னுடைய, சுயநலம் கிடையாது. என்னுடைய சுயநலத்திற்காக நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. மக்களின் நலனுக்காக, இந்த நிகழ்ச்சியில் எதாவது பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பெரிய தளத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.
விக்ரம், தேவர் மகன், தசாவதாரம் என பல படங்களில் என்னுடைய நடிப்பு கவர்ந்து இருக்கிறது. ஆனால் இதில் நான் உண்மையாக பேசுவது மக்களை சென்று சேர்ந்துள்ளது. உண்மையான கமல்ஹாசனாக மக்களுக்கு நான் சென்று சேர்த்துள்ளேன்.
படங்களை விட நான் பேசுவதை இங்கு மக்கள் அதிகம் கேட்கிறார்கள். நான் மக்களிடம் கருத்துக்களை நேரடியாக பேசுகிறேன். யாருடையா வசனத்தையும் நான் பேசுவது இல்லை. இந்த பிக்பாஸ் மூலம் யார் நல்லவர் கெட்டவர் என்று தெரிய வரும். இந்த பிக்பாஸ் 2 கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும். மக்கள் அதற்கு சாட்சியாக இருப்பார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications