பிக் பாஸ் வீட்டில் ‘கிண்டலே சுண்டலான’ கதை உங்களுக்குத் தெரியுமா?
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகி இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இம்முறை ஒரு கிண்டல் சுண்டலாகி இருக்கிறது.
அட ஆமாங்க, டான்ஸ் மாஸ்டர் சாண்டியை போட்டியாளராக கமலே இப்படித்தான் அறிமுகப்படுத்தினார். காரணம் கடந்த இரண்டு சீசன்களின் இறுதிப் போட்டி நாளன்றும் சாண்டி ஆடிய கிண்டல் நடனம் தான்.

அந்த சீசன் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்களைத் தொகுத்து சுவாரஸ்யமாக ஒரு ஆடலுடன் கூடிய பாடல் நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி இருந்தார் சாண்டி. ரசிக்கும்படி இருந்த அந்த இரண்டு பாடல்களுமே மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.
ஆனால், அப்படி ஆடும் போது சத்தியமாக தானும் ஒரு சீசனில் போட்டியாளர் ஆவோம் என சாண்டி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். 'என்னா வாய் பேசுன இப்ப வந்து மாட்டிக்கிட்டீயா?’ என சாண்டியின் வருகையை பலர் விருந்து வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
யாரும் சாண்டியைக் கட்டாயப் படுத்தி உள்ளே பிடித்துப் போடவில்லை. அவராகவே தான் விரும்பி பிக் பாஸுக்கு சென்றுள்ளார். இன்றைய புரோமோவில் அவர் பாவம் மோகன் வைத்யாவை பாட்டுப் பாடி பாடாய் படுத்துவது தெரிகிறது.
அதோடு கமல் கூறியது போல் மோகன் வைத்யாவை கட்டிப்பிடி வைத்யாவாக புரட்டி எடுக்கிறார். காலையிலேயே ரஜினி பாட்டுக்கு ஆட்டம் ஆடுகின்றனர். நிச்சயம் இம்முறை நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை புரோமோ காட்டுகிறது.
முதல் சீசனில் கலந்து கொண்ட காஜல் சாண்டியின் முதல் மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications