நேற்று அர்ச்சனா பேசிய அபத்தமான வார்த்தை.. கடைசி நேரத்தில் ஏன் இப்படி? ரசிகர்கள் சப்போர்ட் வேஸ்டா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று 100வது நாள் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் புது டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை விட நான் எப்படி மற்றவர்களை விட சிறந்தவர் என்பதை எடுத்துக்காட்டோடு சொல்லுங்க என்று பிக் பாஸ் கூறி இருந்தார்.
அதன்படி எல்லா போட்டியாளர்களும் தாங்கள் எப்படி அடுத்தவர்களை விட சிறந்தவர்கள் என்பதை பற்றி விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தனர். ஆனால் அப்போது அர்ச்சனா பேசிய வார்த்தை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. அப்படி ஒரு பதிலை கடைசியில் அர்ச்சனா சொல்லி முடித்து இருக்கிறார்.
அதே நேரத்தில் இதுவரைக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தான் வருவார் என்று ரசிகர்கள் கூறி வந்திருந்த நிலையில் நேற்று அர்ச்சனாவின் நடவடிக்கை இப்போது ரசிகர்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இறுதி வாரத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றது. பொதுவாக ஒரு பழமொழி கூட சொல்வார்கள் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வது என்பது அதுபோலத்தான் நேற்று அர்ச்சனாவுக்கு நடந்தது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் நிக்சன் ஒருமுறை பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்கள் எல்லாமே ரொம்ப எளிமையா இருக்கு,
இது விறுவிறுப்பா இல்லை என்று சொன்னதால் பிக் பாஸ் நீங்களே ஒரு டாஸ்க் சொல்லுங்க என்று சொல்ல அதற்கு நிக்சனும் இரண்டு, மூன்று டாஸ்க்களை எழுதி கொடுத்து இருந்தார். ஆனால் அடுத்ததாக தலைவரானதும் நிக்சனுக்கு பிக் பாஸ் பெரிய ஆப்பு வைத்திருந்தார். அதுபோல நேற்று கடைசி வாரத்தில் வந்து விட்டோம் இன்னும் ஒரு சில நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் பிக் பாஸ் ரொம்ப போர் அடிக்கிறதே என்று குழந்தை போல அர்ச்சனா கத்தி கொண்டு இருந்தார்.
இதனால் பிக் பாஸ் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை. அடுத்ததாகவே இவர்களுக்குள் பிரச்சனையை கிளப்பும் வகையில் ஒரு டாஸ்க் கொடுத்து விட்டார். அதாவது மற்றவர்களை விட நான் எதில் சிறந்தவர்கள் என்பதை சொல்லுங்கள் என்று பிக் பாஸ் சொல்ல எல்லா போட்டியாளர்களும் தாங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மற்றவர்களை விட எப்படி எல்லாம் சிறந்தவர்கள் என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அதில் முதலாவதாக தினேஷ் எழுந்து பேசினார். அவர் விஷ்ணு 24 மணி நேரமும் ஸ்டேடர்ஜி பத்தி யோசிச்சிட்டு இருக்காரு. அது மாதிரி மணி விட்டுக் கொடுத்துவிட்டு பட்டும் படாமலும் விளையாடுகிறார், நான் அப்படி கிடையாது. அர்ச்சனா ரொம்ப கிளவர் பாயிண்ட் எல்லாம் தெளிவா பேசுவாங்க. ஆனா ஸ்பேஸ் கொடுக்காம மத்தவங்க பேச்சில ஓவரா பேசுவாங்க என்று சொல்லி இருந்தார். அதுபோல விஜய், மாயா முதலியோர் பற்றியும் தினேஷ் சொல்லியிருந்தார்.
அடுத்து அதைத் தொடர்ந்து மாயா தன்னுடைய கருத்தை தெளிவாக விளக்கி இருந்தார். அதில் என் ஸ்டேட்டர்ஸி டிராமா தான். என்டர்டைன்மென்ட் என்பது வெறும் காமெடி கிடையாது. அதில் நிறைய ஜேனர் இருக்கு. வம்பு பேசுறது, முரண்படுவது என்று எல்லாமே என்டர்டைன்மென்ட் தான் நான் தினேஷை விட எப்படி பட்ட பிளேயர் என்றால் நான் எதிராளியை பேச விடுவேன் ஆனா அவரு பேச விட மாட்டார்.
விஷ்ணு நிறைய வார்த்தைகளை விட்டுருவாரு ஈசியா ட்ரிக்கர் ஆயிருவாரு, மணிக்கு என்னன்னா ரிலேஷன்ஷிப் தான் முக்கியம். அதுபோல அர்ச்சனை சூப்பரா பேசுவாங்க ஆனா அதை சரியா பயன்படுத்தல வெறும் எமோஷனல் டிராமா தான். விஜய் எந்த இடத்திலும் பேலன்ஸா இருப்பாரு. வாய்ஸ் ஒவர் பண்ண மாட்டாரு என்று சொல்லியிருந்தார். அடுத்ததாக விஷ்ணு, தினேஷ் ஒரு விஷயத்தில் முற்றுப்புள்ளி வைக்காமல் இழுத்துட்டே போவாரு.
அதுபோல மணி யார் வழிக்கும் போக மாட்டாரு, அர்ச்சனா பத்தி நான் வெளியில ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கேன். ரொம்ப டெரரான ஆளுன்னு.. ஆனா உள்ளே வந்தபோ குழந்தைத்தனமா தோணிச்சு பிறகுதான் புத்திசாலியா ஒருத்தர் தப்பு பண்ணா அதை சாதகமாக பயன்படுத்தி சண்டை போட்டதை தான் பின்னாடி இருந்து பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
அடுத்ததாக விஜய் பேசி இருந்தார் அதைத் தொடர்ந்து மணியும் பேசியிருந்தார். இப்படியான நிலையில் தான் கடைசியில் அர்ச்சனா பேச வந்தார். வந்ததும் வராததுமாக இவ்ளோ நேரம் என்னை பத்தி என்னலாம் பேசினீங்க என்று அதற்கு விளக்கம் கொடுக்கப் போனார். அதற்கு முதலிலேயே தினேஷ் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். இங்கு வந்து நீங்க எல்லாரும் பேசினதையும் ரிவ்யூ கொடுப்பதற்காக வரல நீங்க மத்தவங்கள விட எப்படி பெஸ்ட் என்பதை மட்டும் சொல்லுங்க.
பிறகு நாம விளக்கம் கொடுத்துக் கொள்ளலாம் என்று பிரச்சனையை தொடங்க, அதை எல்லா போட்டியாளர்களும் ஆமோதித்தனர். இதனால் கோபமான அர்ச்சனா என்ன பேசுகிறேன் என்பதை தெரியாமல் திணறிவிட்டார் போல, அதுதான் இப்போது இணையத்தில் அர்ச்சனாவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அப்படி என்னதான் அர்ச்சனா பேசுனாங்கன்னு பார்த்தா அவர் ஆரம்பத்திலேயே தினேஷ் பத்தி தான் சொல்லியிருக்கிறார்.
அதில் தினேஷுக்கு யாராவது சாதாரணமா தண்ணி கொடுத்தா கூட இவங்க போன வாரம் நான் கேட்கும் போது தண்ணி தரல ஆனா இப்போ தராங்கனா அப்போ இதுல ஏதோ ஒரு ஸ்டேட்டர்ஸி இருக்குன்னு யோசிப்பாரு. ஆனா நான் அப்படி பண்ணுனதில்ல விஷ்ணுவோட ஒப்பிட்டா நான் சொந்தமாக என்னுடைய கப்பல்ல பயணம் பண்றேன். அடுத்தவங்க கப்பலை கவுக்கனும்ங்கிற கேம் எல்லாம் எனக்கு கிடையாது.
அதுபோல மணி ஒரு லிமிட்டோட விளையாடுவாரு, விஜய் வார நாட்களில் நடப்பதில் எல்லாம் யோசிச்சு வச்சுக்கிட்டு அப்ப பேசாமல் இருந்துகிட்டு வேற இறுதி நாளில் எல்லாம் பேசுவாரு. ஆனா நான் எல்லா நாட்களிலும் பேசுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்த அர்ச்சனா கடைசியில் சொன்னது தான் அதிர்ச்சியாகவும், அபத்தமாகவும்இருந்தது. இத்தனை நாட்களாக அவருக்கு ஓட்டு போட்டு ஆதரவு தந்த ரசிகர்களை ஐயோ என்று சொல்ல வைத்ததும் அதுதான்.
அது என்னன்னா கடைசியாக மாயாவை பற்றி பேசும்போது மாயா என்னை விட பெட்டர் பிளேயர் என்று மொத்தமாக விட்டு கொடுத்து விட்டார். இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் பல இடங்களில் அர்ச்சனா தெளிவாகவும், தைரியமாகவும் சூப்பராக விளையாடிக் கொண்டிருப்பார். ஆனால் கடைசி வாரத்தில் அதுவும் மிக முக்கியமான பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை நேற்றுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு அறிவிப்பு வந்தது.
அதாவது இந்த சீசனில் டைட்டில் ஜெயிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் மணை தருகிறார்கள் என்று கூறப்பட்டது. அப்போது கூட மாயா டைட்டில் வின்னருக்கு 15 லட்சம் ரூபாய் தராங்களா என்னை மறந்துடாதீங்க என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார். இப்படியான நிலையில் மொத்த திறமையும் மாயாவிடம் எனக்கு கம்மி தான் என்று சொல்வது போல, கடைசி வரைக்கும் அர்ச்சனா பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இது பற்றி உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் வந்து சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications