விஜயகாந்த் நினைவிடத்தில் பூர்ணிமா... பிக் பாஸுக்குள் இதுதான் நடக்கிறது ஓப்பனாக உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிகளில் இருந்து வெளியே வந்த பூர்ணிமா ரவி நேற்று மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் எதற்காக பணப்பெட்டியை எடுத்தேன் என்றும் ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக பூர்ணிமா விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தியதை பலர் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் இது விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார்களா? என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாயா பற்றியும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் பற்றியும் தன்னை பற்றி வெளியே பரவி வரும் மீம்ஸ்கள் பற்றியும் அதற்கான தன்னுடைய விளக்கத்தையும் பூர்ணிமா கொடுத்திருக்கிறார்.

bigg boss 7 contestant Poornima paid tributes to Vijayakanth as the first thing she did after leaving Bigg Boss

அந்த வந்த வகையில் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சத்தோடு பூர்ணிமா வெளியேறி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அந்த நிகழ்ச்சியை பற்றி வீடியோ போட தொடங்கி விட்டார்.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பூர்ணிமா முதல் முறையாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும்போது உடல்நிலை சரியில்லாமல் தான் வந்தேன். குடும்பம் நண்பர்களை பார்க்கிற ஆசையில் இருந்தேன். ஆனால் போகப் போக அதெல்லாம் மாறிக்கிட்டே போகுது. வெளியே வந்ததும் சோசியல் மீடியாவில் பார்க்கும்போது என்னையும் விஷ்ணுவும் பத்தி தான் அதிகமா மீம்ஸ் வந்து இருக்கும்னு நான் நினைச்சேன்.

ஆனால் என்னையும் மாயாவையும் பற்றி தான் நிறைய மீம்ஸ் வெளியிட்டு என்ன வச்சு செஞ்சிருக்காங்க. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... இருந்தாலும் இது எல்லாம் மீடியால சகஜம் தான். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நான் போகும் போது ஆரம்பத்துல யாரையும் நண்பர்களாகவும் நினைக்கல எதிரியாகவும் நினைக்கல. ஆனால் நான் தலைவரானதில் இருந்து பிரச்சனை ஆரம்பிச்சுட்டு.

அப்போ அந்த நேரத்தில் மாயா மட்டும்தான் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. அதுல இருந்து தான் நாம் மாயாவோடு நெருக்கமானேன். எனக்கும் மாயாவுக்கும் கூட சண்டை வந்திருக்கு. முரண்பாடுகள் வந்து இருக்கு. எங்கள் பிரண்ட்ஷிப் சுமுகமா போகல. எங்களுக்குள்ளேயும் நிறைய பிரச்சனை வந்திருக்கு. மாயா எனக்கு எப்படி நட்போ அது மாதிரி தான் விஷ்ணுவும்.

கொஞ்ச நாள் என்னோட நல்லா க்ளோசா சப்போட்டா இருந்தாங்க. பிறகு விலகிட்டாங்க, ஆனா ஒவ்வொரு நேரமும் மாறி மாறி பேசுவாங்க அதனால்தான் நாங்க எல்லோரும் அவரை பச்சோந்தின்னு நக்கல் அடிப்போம். அப்புறம் எல்லாரையும் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். யாரும் உண்மை இல்லை, எல்லோரும் அங்கு கேமுக்காக தான் அப்படி விளையாடிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.

அதனாலதான் நான் கொஞ்ச நாளா பிக்பாஸ் வீட்டில இருக்க பிடிக்காமல் போனது. என்கிட்ட நான் வெளியே வந்ததும் நிறைய பேர் கேட்கிற கேள்வி ஏன் பணப்பெட்டி எடுத்தீங்கன்னு தான். எனக்கு உண்மையிலேயே வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. பணம் எடுத்தா எனக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தான் வேறு எந்த காரணமும் இல்லை.

bigg boss 7 contestant Poornima paid tributes to Vijayakanth as the first thing she did after leaving Bigg Boss

அதுபோல பிரதீப் பற்றி நிறைய பேரு என்கிட்ட பேசிட்டு இருக்காங்க. நான் அதை பற்றி அடுத்த வீடியோவில் தெளிவாக பேசுறேன் என்று அந்த வீடியோவில் முடித்து இருக்கிறார். அதை தொடர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் பூர்ணிமா ரவி மாலை அணிவித்து அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு தன்னுடைய அஞ்சலியை செலுத்தி விட்டு வந்திருக்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+