அந்த 2 மாத பிரச்சனை.. ரச்சிதா பிரிய காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த தினேஷ் பெற்றோர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தினேஷ் குறித்தும் அவருடைய மனைவி ரச்சிதா குறித்தும் தினேஷின் பெற்றோர் பல தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றனர்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷின் விளையாட்டு குறித்து தினேஷை இதற்கு முந்தைய சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற ஆரியோடு கம்பர் பண்ணி தினேஷின் பெற்றோர் பேசியிருக்கின்றனர்.

அது மட்டும் அல்லாமல் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் எதனால் பிரிந்தார்கள் என்பது பற்றியும் தினேஷின் பெற்றோர் பேசி இருக்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரை தம்பதிகளாக ரச்சிதா மற்றும் தினேஷ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரபலமானவர்கள் தான். கடந்த சீசனில் ரச்சிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்த நிலையில் இந்த சீசனில் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ் மற்றும் அவருடைய மனைவி ரச்சிதா இருவரும் பிரிந்திருக்கும் நிலையில் தினேஷ் தன்னுடைய மனைவியோடு மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல இடங்களில் தன்னுடைய ஆசையை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தினேஷ் பற்றி அவருடைய பெற்றோர் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பேசி இருக்கின்றனர்.
அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள தினேஷ் யாருக்கு தடங்கலாக இருக்கிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மாயாக்கும் பூர்ணிமாக்கும் தான் தினேஷுக்கு தடையா இருக்காங்க என்று தினேஷின் அம்மா கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பிக் பாஸுக்குள் போவதற்கு முன்பே தினேஷுக்கு பிரதீப்தான் பிடிக்கும்.
அவர் நல்லா விளையாடி வந்தாரு. அதனாலதான் நாங்க பிக் பாஸ் விரும்பி பார்த்தோம். அப்போ பிரதீப்க்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்துச்சு. உள்ளே இருக்கிற போட்டியாளர்கள் ஏதோ பிளான் பண்ணி அவரை வெளியே அனுப்பிட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் தினேஷ் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசினதே கிடையாது.
அப்படி பேசி நாங்க பார்த்ததும் கிடையாது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் சில நேரங்களில் தினேஷ் சில வார்த்தைகளை பேசி இருக்கிறார். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அதுபோல விசித்திரா கூட ஆரம்பத்துல தினேஷ் நல்லாதான் இருந்தார். ஆனால் இடையில் அந்த ஜெயில் பிரச்சனை வந்த பிறகுதான் இவர்கள் இருவருக்கும் கசப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம்.
அதுபோல தினேஷின் கல்யாண வாழ்க்கை பற்றியும் பேசி இருக்கின்றனர் அதில் தினேஷ் ரச்சிதாவை இனி நடிக்க வேண்டாம் என்று சொன்னதால்தான் அவர்களுக்குள்ள சண்டை வந்துச்சு என்று சிலர் சொல்றாங்க. ஆனா அது உண்மையே கிடையாது என்று தினேஷின் அப்பா பேசுகிறார்.
மேலும் கொரோனா டைம்ல எங்களுக்கு கொஞ்சம் பொருளாதார பிரச்சினை இருந்துச்சு. அந்த டைம்ல ரெண்டு மாசம் வாடகையை கட்ட முடியுமா என்று நாங்கள் கேட்டது தான் ரொம்ப தப்பா போயிட்டு. அதுல வெடிச்ச பூகம்தான்... யாருடைய பேச்சைக் கேட்டு இப்படி எல்லாம் பண்றாங்கன்னு தெரியல.
எனக்கு அந்த விஷயத்தோட மனசு ரொம்ப சங்கடமா போயிட்டு... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் காதலிச்சு கல்யாணம் பண்ணாங்க.. அதுபோல ரச்சிதா சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பண்ணிக்கிட்டு இருந்தாங்.க ஆனா நாச்சியாபுரம் மட்டும் ரச்சிதாவிற்கு நடிக்க விருப்பமில்லை.
அப்போ நாங்க எல்லாரும் சொல்லித்தான் ரச்சிதா நடிச்சாங்க. அதுபோல நாங்க ஒரு நாளும் ரச்சிதா நடிக்க வேண்டாம் என்று தடுத்ததில்லை. அதுபோல எந்த ஷோக்கும் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னது கிடையாது. சில நேரம் ரச்சிதா கூட நானும் போயிருக்கிறேன். ரச்சிதாவிற்க்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுப்பேன் என்று தினேஷின் அம்மாவும் அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
அதுபோல ரச்சிதாவுக்கு தொழில் ரீதியாக எந்த தடையுமே நாங்கள் கொடுத்ததில்லை. நாங்கள் மட்டும் இல்ல, தினேஷம் அப்படித்தான். ஆனால் ரச்சிதா தான் சமீப காலமாக ரொம்ப மாறிட்டாங்க. அதுபோல ரச்சிதா கிட்ட தினேஷ் எப்போதுமே பணம் கேட்டதில்லை. நீங்க வேணும்னா தினேஷோட பேங்க் அக்கவுண்ட் செக் பண்ணி பாருங்க.
ஆனால் ரச்சிதா யார் யாருக்கு எவ்வளவு பணம் அனுப்பி இருக்காங்க என்று எங்களால சொல்ல முடியும். ஆனா நாங்க அப்படி பண்ண மாட்டோம் அவங்க சம்பாதிக்கிறவங்க அவங்க காசு ஆனால் ஒரு நாள் கூட காசு விஷயத்துல தினேஷ் பிரச்சனை கொடுத்தது கூட கிடையாது. ஆனால் தினேஷ் பற்றி ரச்சிதா போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னதெல்லாம் பொய் என்று அந்த பேட்டியில் தினேஷின் பெற்றோர் பேசியிருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications