தர்ஷனின் நிலைமை இப்படியா? தம்பி மூஞ்சியில டீ ஊற்றி.. அட, நீதிபதி மகன் முகத்தில் காயமே இல்லை: பிரபலம்
சென்னை: நடிகரும் பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.. முன்னுக்கு வருவதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.. இதுவரை தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்றாலும், தர்ஷனை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.. அந்தவகையில், இப்போதும் சலசலப்பு கிளம்பியிருக்கிறது. தர்ஷனை போலீசார கைது செய்துள்ளனர்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சொன்ன கருத்து என்ன?
நேற்று மாலை தர்ஷன் வீட்டின் முன்பு , நீதியின் மகன் காரை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்ஷன் அவர்களிடம் கேட்டபோது இரு தரப்புக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு இருதரப்பினரும் மாறி, மாறி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன், "நான் வழக்கம்போல் மாலை 3 மணிக்கு ஜிம்முக்கு சென்றுவிட்டு, 4.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அப்போது என்னுடைய வீட்டு வாசல் முன்பு ஒரு கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. அதனால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை.
கார் பார்க்கிங்
இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் யாருடைய கார் என்று விசாரித்தேன். அவர்கள் தங்களுடைய இல்லை என்று சொன்னதும், வீட்டுக்கும் போன் செய்து உறவினர்கள் யாரும் வந்திருக்கிறார்களா? என்று கேட்டேன். அவர்களும் இல்லை என்றார்கள்..
இதனையடுத்து மேல் வீட்டில் இருந்த என்னுடைய தம்பியிடம், "கார் ஒன்று வெளியே நிற்கிறது யார் என்று தெரியவில்லை, வா" என்று சொன்னேன். அவர் வந்து பக்கத்தில் இருந்த டீக்கடையில் விசாரிக்கும் போது, அங்கிருந்த ஒரு குடும்பத்தினர், "இது எங்களுடைய கார்" என்றார்கள்.. அப்போது அவர்களிடம், "ஏங்க நான் 20 நிமிடமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ரோட்டில் அதிக நேரம் காரை நிறுத்த முடியாது. கொஞ்சம் காரை எடுங்கள்" என்று சொல்லிவிட்டு என்னுடைய காரை எடுக்க சென்றேன்.
நெஞ்சில் ஏறி உட்கார்ந்து
அதற்குள் அவர்கள் என் தம்பியிடம், "பிக் பாஸ் போனா அவன் என்ன பெரிய ஆளா ஏன் அவனால் கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ண முடியாதா?" என்று கேட்டு, என் தம்பி மீது அவர்கள் குடித்து கொண்டிருந்த, சூடான டீயை முகத்திலேயே ஊற்றி விட்டார்கள். அதனை தடுக்க முயன்ற என் தம்பியை கீழே தள்ளிவிட்டு, அவன் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து தாக்கினார்கள்..
அதனைத் தடுக்க சென்ற என்னையும் தாக்கிவிட்டு, "நான் ஜட்ஜ் பையன் டா, உன்னால என்ன பண்ண முடியும்?" என்று கேட்டு என் முகம், கைகளில் நகத்தால் கீறி தாக்க முயற்சித்தார்கள். இது தொடர்பாக நாங்கள் புகார் தந்த நிலையில், பதிலுக்கு அவர்களும் எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். சம்பவம் நடந்து 3 மணி நேரத்திற்கு பிறகு நீதிபதி மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டு, நாங்கள் அடித்துவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்று கண்கலங்கி சொன்னார் தர்ஷன்.
நீதிபதி மகன் புகார்
இதற்கிடையே காரை தர்ஷன் வீட்டு முன்பு காரை நிறுத்தியவர் நீதிபதியின் மகன் ஆதிசூடி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஜெ.ஜெ.நகர் போலீசில் தர்ஷன் மீது புகார் தந்துள்ளனர்.. மேலும், தர்ஷன் தாக்கியதாக கூறி ஆதிசூடி மற்றும் அவரது மாமியாரும் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் செய்தியாளர்களுக்கு தந்த பேட்டியில், "தர்ஷன் தரப்பினர் என் மனைவியை ஆபாசமாக பேசினார்கள். இதுகுறித்து கேட்கச் சென்றபோது என்னையும் அவர்கள் தாக்கினார்கள்.. தர்ஷன் போதைப்பொருள் எடுத்துள்ளார் என சந்தேகமாக உள்ளது. ஒரு சாதாரண மனிதன் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்" என்றார்.
இதையடுத்து, நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நீதிபதியின் மகன், அவரது தோழியை தாக்கியதாக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், "யாராக இருந்தாலும் முகத்தில் டீ ஊற்றியது தவறுதான்.. 2 இளைஞர்களுமே பிரபலமானவர்கள் என்பதால், இருவரையுமே அழைத்து போலீசார் வார்னிங் தந்திருக்கலாம்.. அல்லது அட்வைஸ் தந்து அனுப்பி வைத்திருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு, மருத்துவமனை வரை நீதிபதி மகன் சென்றிருக்க தேவையில்லை.. 3 பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்றும் தெரியவில்லை.
போட்டோ ஆதாரம் இல்லை
தன்னை தாக்கியதாக சொல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நீதிபதி மகனின் முகத்தில் காயமில்லை.. அதேபோல தர்ஷன் தம்பி முகத்தில் சூடாக டீ ஊற்றியதாக சொன்ன போட்டோவும் வெளியே வரவில்லை.. எனினும், தம்பி மீது டீ ஊற்றியதால்தான் அதை தட்டிக் கேட்டேன் என்று தர்ஷன் தரப்பில் சொன்னது நியாயமாக உள்ளது..
அதேபோல, அந்த நேரத்தில் ஜிம் போயிட்டு வந்ததாக தர்ஷன் சொல்கிறார்.. ஆனால், போதை பொருள் பயன்படுத்தியதாக, நீதிபதி மகன் தரப்பில் சொல்கிறார்கள்.. டீ கடையில் டீ குடித்து கொண்டிருப்பவர்களுக்கு தர்ஷன் போதை பொருளை பயன்படுத்தியது எப்படி தெரியும்? வாசனை ஏதாவது வந்ததா? அல்லது வெறுமனே குற்றச்சாட்டாக சொல்வதற்காக சொல்கிறார்களா? தெரியவில்லை.
ஒருவரையொருவர் குற்றச்சாட்டுகளை மட்டுமே வீசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, உண்மை தெரியவில்லை.
தர்ஷன் மீது வழக்கு நடத்தி பிறகுதான் தண்டனை தரப்படும். ஆனால், இதற்கெல்லாம் பெரிய தண்டனை தரப்படுமா என தெரியவில்லை.. அநேகமாக நீதிமன்றம் இவர்களை கண்டித்து, அறிவுறுத்தி அனுப்புவார்கள் என தெரிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications