பிக் பாஸில் கூட இருந்தவங்க நண்பர்களா? தக் லைஃப் கொடுத்த பிரதீப்.. என்ன இப்படி பேசிட்டாரு?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பிரதீப் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரோடு கலந்து கொண்டவர்கள் பற்றி கேட்ட கேள்விக்கு பிரதீப் யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். அதை இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய அளவில் பரபரப்பையும் விமர்சனங்களையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பெற்று வந்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் போது அதிகமான போட்டியாளர்கள் இருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் குறுகிய நாட்களுக்குள் அதிகமான ரசிகர்களை கவர்ந்த பிரதீப் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

இது ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியாக்கி இருந்தது. பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை கூறி வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது குறித்து பல பிரபலங்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும் பலரும் விமர்சித்து வந்தனர்.
அதே நேரத்தில் பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனை தாக்கி இணையத்தில் பதிவுகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அவர் மீது நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது கம்ப்ளைன்ட் கூறிய பலரும் வெளியே வந்த பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து நாங்கள் பேசியது தவறு என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் பிரதீப் இப்போது சில திரைப்படங்களில் நடித்தும் படங்களை இயக்குவதற்காகவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். அப்படியான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அங்கு இருந்த உங்களுடைய நண்பர்களோடு பேசினீர்களா? என்று கேட்க,
அதற்கு பிரதீப் பிக் பாஸில் என்னோடு இருந்தவர்களை நண்பர்கள் என்று சொல்வதா? என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் யாருடனும் பேசவில்லை. இந்த பேச்சே இனி வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி போய்விட்டார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நட்பாக இருந்தவர்கள் தான் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்டு காட்டி இருந்தார்கள். இதனால் அவர்களைப் பற்றி எனக்கு எந்த பேச்சும் இல்லை என்று பிரதீப் கிளம்பி போயிருப்பதை சிலர் பாராட்டி வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications