பிக் பாஸ் 8: தர்ஷிகா வெளியே போகும் போது விஷாலுக்கு கொடுத்த கிப்ட்.. விஜய் சேதுபதி கேட்ட கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இருந்து தர்ஷிகா வெளியே செல்லும் முன்பு வி.ஜே விஷாலிடம் ஒரு கிப்ட் கொடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் தர்ஷிகாவிற்கு விஜய் சேதுபதி சில அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இன்று பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. வீட்டில் தலைவராக கடந்த வாரத்தில் இருந்த ரஞ்சித் தலைமை வகித்தது சரியில்லை என்று பெரிய விவாதம் போனது. அதுபோல ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே தர்ஷிகா வெளியேற்றப்பட்டார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

தர்ஷிகா மற்றும் விஜே விஷால் லவ் கண்டென்ட் கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இவர்களில் ஒருவரை வெளியே கொண்டுவர வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. அது போலவே இன்று நடந்து விட்டது. ஆனால் தர்ஷிகா எலிமினேஷன் என்று அறிவித்ததும் அவர் எல்லோரிடமும் விடைபெறும் போது விஜே விஷாலிடம் தன்னுடைய அம்மாவின் மோதிரத்தை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

தன்னுடைய அம்மாவின் ஞாபகமாக வைத்திருந்த மோதிரத்தை என்னிடம் தந்துவிட்டாள், இதுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று விஜே விஷால் புலம்பி கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதுபோல விஜய் சேதுபதி முன்பு தர்ஷிகா வந்ததும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் உங்களுடைய விளையாட்டு சிறப்பாக இருந்தது. ஆனால், பிறகு திடீரென்று உங்களுடைய விளையாட்டு மாறிவிட்டது.

எந்த இடத்தில் நீங்கள் சறுக்குனீங்க என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டபோது இல்லை சார் என்று சொல்கிறார். பிறகு தர்ஷிகாவின் பயண வீடியோ போட்டுக் காட்டப்படுகிறது. அப்போது தர்ஷிகா அதிகமாக விஜே விஷாலோடு சுற்றித்திரிந்தது, அவரிடம் பேசிக் கொண்டிருந்தது தான் காட்டப்படுகிறது. அதை பார்த்ததும் தர்ஷிகா வெக்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

பிறகு பயண வீடியோ முடிந்ததும் இப்போ உங்களுக்கு நீங்க எந்த இடத்தில் சறுக்குனீங்க என்று தெரிந்திருக்குமே என்று விஜய் சேதுபதி கேட்க, ஆமாம் சார் என்று தர்ஷிகா சொன்னதும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நினைத்த தூரம் வேறு ஆனால் வழியில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் உங்களுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் பார்த்திருப்பீங்க வெளியே போய் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் என்று சொல்லி இருக்கிறார்.

பிறகு உள்ளிருக்கும் போட்டியாளர்களில் யார் விளையாட்டை சரியாக கொண்டு போக வேண்டும் என்று நீங்க நினைக்கிறீங்க என்று விஜய் சேதுபதி கேட்டதும் முதல் நாளாக விஜே விஷால் தான் தர்ஷிகா தேர்ந்தெடுத்து இருக்கிறார். அப்போது விஜே விஷாலிடம் நீ ஸ்டாங் பிளேயர். என்டர்டைன்மெண்ட் செய்யக்கூடிய ஆள் எந்த இடத்திலும் உன்னுடைய விளையாட்டை விடாதே தொடர்ந்து விளையாடு என்று அட்வைஸ் செய்கிறார்.

அதற்கு வி.ஜே விஷால் உன்னுடைய தூய்மையான அன்பை நான் புரிந்து கொண்டேன். உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு உன்னுடைய அன்பு எனக்கு பிடிக்கும் அந்த பாசத்தை நான் மதிக்கிறேன் என்று சென்டிமெண்டாக பேசி இருக்கிறார்.

தர்ஷிகா முதல் இரண்டு வாரம் விளையாடிய விளையாட்டு பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகுவாரா என்று கூட பேசப்பட்டது. ஆனால் ஸ்கூல் டாஸ்க் தொடங்கப்பட்ட பிறகு வி.ஜே விஷால் ஒன்று அவருடைய பேசிப் பழகி வந்த விதம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படவில்லை. இது கூட அவர் இந்த வாரம் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+