ரச்சிதாவை விடுங்க.. பிக் பாஸ்க்கு பிறகு சீரியல் நடிகையோடு புகைப்படம் வெளியிட்ட தினேஷ்.. செம முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த சீசனில் கலந்து கொண்ட தினேஷ் வெளியே வந்ததும் சீரியல் நடிகை ஒருவரை சந்தித்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் தினேஷும் சீரியல் நடிகையான ரச்சிதாவும், மகா லட்சுமியும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துகொண்டு இதில் வெற்றி பெற்றதும் தன்னுடைய மனைவியிடம் அந்த கப்பை கொடுத்து தன்னுடைய காதலை நிரூபிப்பேன் என்று தினேஷ் கூறியிருந்தார்.
ஆனால் ரச்சிதா தன்னுடைய எதிர்ப்பை தான் ஒவ்வொரு இடத்திலும் காட்டிக் கொண்டிருந்தார். தன்னை பற்றி தினேஷ் எப்பவெல்லாம் பேசுகிறாரோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய கோபத்தை instagram ஸ்டோரில் தெரிவித்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று பிக் பாஸ் போயிருந்த தினேஷுக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி தான் கிடைத்திருந்தது.

ஒரு பக்கம் ரச்சிதா தன்னுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருந்தார். மறுபக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் நான்காவது இடத்தில் வெற்றி பெற்றிருந்தார். இது அவருக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தினேஷ் தனக்கு மக்கள் கொடுத்த ஆதரவை பார்த்து இதுவும் எனக்கு புதுவித அனுபவமாகத்தான் இருக்கிறது.
நான் நினைத்தது தான் நடக்கவில்லை ஆனால் மக்கள் என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்று தினேஷ் பேசி இருந்தார். அதுபோல அப்போது சீரியல் நடிகையான பிரேமி வெங்கட் சந்தித்து சில புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார். தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தொடர்ந்து தன்னுடைய ஆதரவை நடிகை பிரேமி தெரிவித்து வந்தார்.
தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரின் நண்பராக இருக்கும் பிரேமி வேங்கட் கடந்த சீசனில் ரச்சிதாவிற்காகவும் தொடர்ச்சியாக தன்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொண்டிருந்தார். அதோடு தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ரச்சிதாவும் தினேஷூம் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். ஆனால் அது அவர்கள் இருவருடைய தனிப்பட்ட விஷயம் அதில் அவர்கள் தான் முடிவெடுக்க முடியும் என்றும் தன்னுடைய விருப்பத்தை பிரேமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரேமி வேங்கட்டை தினேஷ் சந்தித்து நன்றி கூறி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல ரச்சிதா அவருடைய முடிவில் உறுதியாக இருப்பதால் இனி நான் என்னுடைய அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி பயணிக்க போகிறேன் என்று தினேஷ் பேட்டிகளில் கூறியிருக்கும் நிலையில் அது நல்ல முடிவு என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications