Bigg Boss 7 grand finale: 2nd ரன்னர் அப் ஆனதும் மாயா செய்த செயல்! ஓடிப் போயிட்டாங்களே அர்ச்சனா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் 2வது ரன்னர் அப் ஆக மாயா தேர்வாகி இருக்கிறார். இதை கமல்ஹாசன் அறிவித்ததும் சகப் போட்டியாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருந்தனர்.. அப்போது இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக மாயா ஜெயிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த விசித்திரா ரொம்பவே அதிர்ச்சியாகி இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இறுதி மேடையில் அர்ச்சனா, மணி, மாயா மூவரும் கமல்ஹாசன் முன்பு பயத்தோடு இந்த சீசனில் யார் வின்னராக இருக்கும் என்று நின்று கொண்டிருக்கும் போது கடைசியில் மாயாவுக்கு அதிர்ச்சி கொடுத்து அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

ஆனால் தான் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் பல போட்டியாளர்களின் மனதை கவர்ந்து விட்டேன். அதுபோல வெளியேவும் எனக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதுவே எனக்கு போதும் என்று மாயா கடைசி நேரத்தில் மேடையில் பேசியிருந்தார். அதோடு வேறு என்னவெல்லாம் பேசினார் என்பதை இந்த செய்திகள் பார்க்கலாம்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் பினாலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக யார் இருப்பார்கள் என்ற விவாதம் பெரிய அளவில் இருந்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் மாயா அல்லது அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவார்கள் என்று ரசிகர்கள் அடித்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடைசியில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர். அதிலும் அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகிய ஐந்து பேரும் இருந்தனர். இதில் யார் முதலிடத்தில் வருவார்கள் என்ற தவிப்பில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் இருந்த நிலையில் இன்று ஐந்தாவது இடத்தில் விஷ்ணு வெளியேற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நான்காவதாக தினேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தார். அதை தொடர்ந்து மூன்று போட்டியாளர்கள் கிராண்ட் பினாலே மேடையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மாயா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மாயா எடிட் ஆகி விட்டார் என்பதை தெரிந்ததும் விசித்திரா அதிகமான அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதே நேரத்தில் இருந்தாலும் அர்ச்சனா ஓடி சென்று மாயாவை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து இருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இறுதி மேடையில் இவர்களின் இந்த செயல் உண்மையானது தானா? அல்லது இதுவும் நடிப்பு தானா என்று எல்லோருக்கும் தோன்றியிருக்கும். ஆனாலும் அதைத் தொடர்ந்து மாயா பேசியிருந்தது தான் வேற லெவலில் இருந்தது. அதாவது நான் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இங்கு இருக்கிற என்னோடு சேர்ந்த போட்டியாளர்களின் மனதை நான் ஜெயித்து விட்டேன். அதுபோல எனக்கு இத்தனை நாட்களாக ஓட்டளித்த மக்கள் இருக்கும் போது எனக்கு வேறு என்ன கவலை என்கிற மாதிரி பேசி இருந்தார். இந்த வெற்றி வந்து என் நான் மட்டும் கொண்டாட கூடியது அல்ல, இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியே போன போட்டியாளர்கள் எல்லோருமே அவர்கள் வெளியே போகும்போது நாங்க தான் வெளியே போயிட்டோம். ஆனால் மாயா நீ விடக்கூடாது நீங்க ஜெயிக்கணும்னு சொல்லிட்டே போனாங்க. அதனால இந்த இடத்தில் எல்லா போட்டியாளர்களும் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று மாயா பேசியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications