பிக் பாஸ் 7: சோசியல் மீடியா ஹேட்டர்களுக்கு கமல் கொடுத்த குட்டு.. பூர்ணிமா சொன்ன அந்த வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது கமல்ஹாசன் ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியே போன போட்டியாளர்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து என்னவெல்லாம் கற்றுக் கொண்டீங்க? வெளியே உங்களுக்கு வரவேற்பு எப்படி எல்லாம் கிடைக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் இருக்கும் ஹேட்டர்களுக்கு குட்டு வைக்கிற மாதிரி சில வார்த்தைகளை பேசி இருக்கிறார்.
அப்போது பூர்ணிமா தனக்கு சமூக வலைத்தளத்தில் ஹேட்டர் கேட்கும் கேள்விகளுக்கு தன்னுடைய வெற்றியின் மூலம் பதில் அளிப்பேன் என்று சொல்ல, அதற்கு கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் தவறாக பேசும் ஹேட்டர்ஸ் நிஜத்தில் உங்களை பார்க்கும் போது சிரிப்பார்கள் அதுதான் வாழ்க்கை என்று தத்துவத்தை சொல்லி இருந்தார். என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்று பிரமாண்டமாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு மணியிலிருந்து இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் நிலையில் தொடக்கத்தில் கலாய் பாடல் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியே போன போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் நீங்கள் வெளியே போன பிறகு உங்களுடைய நிலைமை எப்படி மாறி இருக்கிறது? பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் எதை கற்றுக் கொண்டீர்கள்? என்று கேள்வி கேட்க அதற்கு ஆளாளுக்கு ஒவ்வொரு காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது வினுஷா நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து நல்லவங்களா மட்டும் இருந்தா போதாதுன்னு கத்துக்கிட்டேன் என்று சொல்லி இருந்தார். அதை தொடர்ந்து பேசிய பூர்ணிமா நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்த செயல்கள் வெளியே வேற மாதிரி போயிருந்தது. பலர் சமூக வலைத்தளத்தில் என்னை திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
என்னைப் பற்றி புரியாதவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் என்னுடைய வெற்றிகள் மூலம் நான் அவங்களுக்கு பதில் கொடுப்பேன் என்று சொல்லி இருந்தார். அதற்கு இடை மறித்த கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வலம்வரும் ஹேட்டர்ஸ் நிஜத்தில் உங்களை பார்க்கும் போது அவர்களை அறியாமல் சிரித்து விடுவார்கள், அவ்வளவு தான்.
முகம் தெரியாமல் தான் அவர்கள் எதுவும் பேசுவார்களே தவிர நமது முகத்துக்கு முன்பு வந்ததும் அவர்களுடைய நடவடிக்கை மாறிவிடும் என்று சொல்லி இருந்தார். அதை தொடர்ந்து ரவீனா பேசுகையில் நான் சமூக வலைத்தளத்தில் என்னைப் பற்றி தவறாக பேசுபவர்களை பார்த்து இவர்கள் என்ன பிக் பாஸ் வீட்டுக்குள்ள நம்ம பேசறதை விட மோசமா பேசிக்கிட்டு இருக்காங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனால் வெளியே போகும்போது மக்கள் எனக்கு கொடுக்கும் உற்சாக வரவேற்பை பார்த்ததும் இதில் எது உண்மைன்னு எனக்கு புரியல என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications