பிக்பாஸ் பற்றி லெட்டர் படித்து ஜி பி முத்து உடைத்த ரகசியம்..கடைசியில் இவருமா..?குவியும் கருத்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் இன்னும் ஒரு சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் புதிய பிரமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஜி.பி முத்து லெட்டர் படித்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு அதில் இரண்டு வீடு என்று எல்லோருக்கும் தெரியும். அப்போ இந்த சீசனில் இரண்டு வின்னரா? என்று ஜிபி முத்து கேள்வி கேட்டிருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்களுக்கு கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சி தற்போது வரைக்கும் ஆறு சீசன்கள் வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஏழாவது சீசன் தொடங்க இருக்கிறது.

நூறு நாட்கள்,பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டில் எந்த வித வெளி உலக தொடர்பும் இல்லாமல் மக்களின் ஆதரவோடு முன்பின் தெரியாத பிரபலங்களோடு இந்த வீட்டில் எப்படி அங்கு இருக்கும் சூழ்நிலைக்கு தாக்கு பிடித்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய விஷயமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் முதல் சீசன் தொடங்கப்பட இருக்கும் போது பலருக்கும் வியப்பாக இருந்தது. ஆனால் அதை தொடர்ந்து ஒவ்வொரு சீசனில் போட்டியாளர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனாலும் உள்ளே கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் நாங்கள் நிஜத்தில் எங்களுடைய உண்மையான கேரக்டரில் தான் இருந்தோம் என்று கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு வீடு என்றும் இரண்டு பிக்பாஸ் இருப்பார் என்பது போன்று நடிகர் கமல் ப்ரோமோவில் பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சீசனில் அதிகமான ரசிகர்களின் ஆதரவை பெற்று, ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிகழ்ச்சியை விட்டு திடீரென்று வெளியேறிய ஜிபி முத்து எந்த முறை ப்ரோமோவில் தன்னுடைய வழக்கமான லெட்டர் படிக்கும் முறையில் ப்ரோமோவில் பேசி இருக்கிறார். அந்த வகையில் அவர் அந்த லெட்டரில் ஒரு வீட்டையே சமாளிக்க முடியாது. இதுல ரெண்டு வீடா? என்று தன்னுடைய வழக்கமான பாணியில் பேசியிருக்கிறார்.

Bigg Boss Tamil Season 7 Grand Launch promo gp muthu reaction

அது மட்டுமல்லாமல் ரெண்டு வீடுன்னா இந்த முறை ரெண்டு டைட்டில் வின்னரா? என்ற கேள்வியும் ஜி பி முத்து கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு வீடு எப்படி இருக்க போகிறதோ என்ற குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த முறை இரண்டு டைட்டில் வின்னர் என்று ஜிபி முத்து கேட்டிருப்பதால் பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு ரசிகர்கள் பலர் வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் சுவாரசியம் இல்லாத கேம்கள் இந்த முறை இல்லாமல் விறுவிறுப்பு ஏற்படும் படி விளையாட்டுகள் இருந்தால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் ஏற்படும். இல்லை என்றால் கமல்ஹாசன் வரும் சனி மற்றும் இரவு எபிசோடு மட்டும்தான் ரசிகர்களின் மத்தியில் எடுபடும் என்றும், இந்த சீசனிலாவது ரசிகர்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் வரவேண்டும் என்றும் பலர் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+