பிக் பாஸ் 7: இந்த வாரம் வெளியே போகப் போகிறவர் இவரா? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பெண் போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில் இந்த வாரம் 6 போட்டியாளர்களின் பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறது. அதில் ஒருவராக ஐசுவும் இருக்கிறார்.

ஆனால் இன்று விசித்திராவிற்கும் ஐசுவுக்கும் இடையே விவாதம் நடைபெற்ற போது ஐசு எனக்கு மக்கள் ஓட்டு தேவை இல்லை என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது ரசிகர்களின் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. 18 போட்டியாளர்களோடு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்திருக்கின்றனர்.
வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகு ஏற்கனவே இருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்களை பழி வாங்குவதற்காக ஸ்மால் பாஸுக்குள் அனுப்பி தங்களுடைய பெயரை தாங்களே கெடுத்துக் கொண்டனர். வெளியே நடப்பது அவர்களுக்கு தெரியாததாலோ என்னவோ தாங்கள் செய்ததுதான் சரி என்று இவர்கள் ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த சனிக்கிழமை பிரதீப் பற்றி சில போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் வைத்ததன் காரணமாக அவர் அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு இணையத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் அங்கே பிரதீப் பற்றியும் பிக் பாஸ் பற்றியும் தான் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
அதில் பிக் பாஸுக்குள் இருக்கும் எல்லாரும் தான் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள். பிரதீப் மட்டும்தான் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறாரா? அது போல உள்ளே இருக்கும் எல்லாரும் தான் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்கிற தொனியில் பல கமாண்டுகளையும் மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனக்கான எலிமினேஷன் நடைபெற்றிருக்கிறது. அதில் விசித்திரா, தினேஷ், அர்ச்சனா, பிராவோ, பூர்ணிமா, ஐசு முதலிய ஆறு போட்டியாளர்கள் பெயர் இருக்கிறது. இந்த ஆறு போட்டியாளர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களின் மத்தியில் வந்துவிட்டது.
அதிலும் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா மூன்று பேரும் முதல் போட்டியாளர்களாக சேவ் ஆக வேண்டும். இவர்கள்தான் விளையாட்டை சரியாக விளையாடுகிறார்கள் என்று இவர்களுக்கு அதிகமான சப்போர்ட்டுகளையும் காண முடிகிறது அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் பூர்ணிமா மற்றும் ஐசு மீது அதிகப்படியான கோபத்தில் இருக்கின்றனர்.
பூர்ணிமா, மாயா, ஐசு, ஜோவிகா, நிக்சன் போன்றோர் சேர்ந்து கொண்டு போடும் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கோபத்தில் கமெண்ட் போடுகின்றனர். இன்னொரு தரப்பினர் இவர்கள் எல்லாரும் பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி விட்டார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
அதோடு ஐசு மீது அவர் நிக்சனுடன் அதிகமாக நெருக்கமாக இருக்கிறார். ஆனால் பிரதீப்புடனும் நன்றாக பேசிக்கொண்டு கடைசி நாளில் அவருக்கு ரெட் கார்டு காட்டிவிட்டார் என்றும் சில ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இப்படியாக இருக்கும் நிலையில் இன்று வெளியான அன் அபிஷியல் வோட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் பூர்ணிமா இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு விவாதம் நடைபெற்றது. அப்போது விசித்திரா சனிக்கிழமை பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது தவறு என்று தன்னுடைய விவாதத்தை வைத்திருந்தார். அப்போது பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த போட்டியாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வரிசையில் ஐசுவும் விசித்ராவிடம் பிரதீப் மீது தப்பு இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரா ஒரு கட்டத்தில் சரி உன் மீது தப்பு இல்லை என்றால் வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் உனக்கு ஓட்டு போடுவார்கள் என்று கூறி இருக்கிறார். அதற்கு ஐசு கோபமாக எனக்கு மக்கள் ஒன்றும் ஓட்டு போட வேண்டிய அவசியமே இல்லை என்று கூறியிருக்கிறார்.
தற்போது இது மீம்ஸ்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு மக்கள் ஓட்டு தேவை இல்லை என்றால் எதற்காக இவர் பிக் பாஸ்க்குள் வந்தார் என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் ஐசு தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications