அரசு வேலை, 60 ஆயிரம் சம்பளத்தை விட்டு.. சினிமாவில் பிரதீப் பட்ட அவமானம்.. இணையத்தை புரட்டிய சம்பவம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நேற்று நடிகர் பிரதீப், ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகராக தான் பல கஷ்டங்களை பட்டிருக்கிறேன் என்றும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்து தான் வைத்திருக்கும் கதையை இயக்கி தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவேன் என்றும் பிரதீப் அடிக்கடி கூறியிருந்தார்
ஆனால் பிரதீப் 60 ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருந்த அரசு வேலையை விட்டு விட்டு சினிமாவுக்காக பல அவமானங்களை பட்டிருக்கிறார். அது பற்றி அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பிரதீப் மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி தகாத கெட்ட வார்த்தைகளால் பேசியதால் நேற்று அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு பிரதீப் சீசன் மூன்றில் கவின் நிகழ்ச்சியில் இருந்த போது அவருடைய நண்பராக வந்து அவரை கன்னத்தில் பளார் என்று அடித்து இருந்தார்.
அதன் மூலமாகவே அவர் பெரிய அளவில் பிரபலமாக இருந்தார். அது குறித்து கூட நேற்று முன்தினம் சக போட்டியாளர்களிடம் விளக்கமும் கொடுத்து இருந்தார். கவினுக்கு இருந்த நெகட்டிவிட்டியை போக்குவதற்காக தான் நான் அப்படி நடந்து கொண்டேன் என்று விளக்கமும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பிரதீப் உடைய ஆரம்ப காலம் குறித்து அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தான் ரயில்வேயில் பணியாற்றிய போது மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேலே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் சினிமாவில் இருந்த பேஷன் காரணமாக வேலையை விட்டுவிட்டு ஒரு படத்தில் நடிக்க தொடங்கினேன்.
அந்த படத்தில் நான் ஹீரோ இல்லை ஆனால் ஹீரோ என சொல்லிக் கொள்ளலாம் அந்த அளவிற்கு ஒரு ரோல் இருந்தது. நான் சாப்பிட போகும் போது கூட பரிமாறுபவர்கள் என்னை ஹீரோ போல பார்த்து சாப்பாடு போடுவார்கள். ஆனால் அந்தப் படத்தின் துணை இயக்குனர் என்னை அசிங்கப்படுத்தி பேசினார்.
ஆனாலும் அதை எல்லாம் தாங்கிக் கொண்டுதான் நான் சினிமாவில் இருந்தேன். சினிமாவில் இப்படி அசிங்கப்பட்டு நான் இரண்டு வருடத்தில் வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் சம்பாதித்து இருந்தேன் என்று பேசி இருக்கிறார். அதோடு தனக்கு சினிமா மீது பெரிய அளவில் விருப்பம் வருவதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் கூறியிருக்கிறார்.
அதில் நான் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடைய நண்பராக ஃப்ரீஸ் டாஸ்க்கில் கலந்து கொள்ள வந்த போது முதல் முறையாக எனக்கு கேரவன் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு எனக்கு எங்கேயும் இப்படி ஒரு மரியாதை கிடைக்க வில்லை. இந்த மரியாதை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இது நன்றாக இருக்கிறது என்று நான் அப்போ அதை ரொம்பவே அனுபவித்தேன்.
தனி கேரவனில் எனக்கு கிடைத்த வரவேற்பும் மரியாதையும் வேற லெவலில் இருந்தது. அதனாலேயே நான் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். எப்படியும் நான் ஒரு முறை வந்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
இப்படி எல்லாம் இருந்திருந்த பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய விளையாட்டில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் அவர் கெட்ட வார்த்தை பேசியது, பெண்களிடம் மரியாதை இல்லாமல் சில இடங்களில் பேசியது போன்றவை சக போட்டியாளர்களால் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் அதை திருத்திக் கொண்டிருந்தால் எப்படியும் இந்த சீசனில் அவர்தான் வெற்றியாளராக இருந்திருப்பார் என்று பலரும் பீல் பண்ணி வருகிறார்கள்.
அதே நேரத்தில் நான் இப்படித்தான் நான் மாறவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பிரதீப் குறித்து இணையத்தில் அதிகமானோர் திட்டி வந்து கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் இவருக்கு ஒரு முறை வார்னிங் கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் நேற்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரதீப் பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. அதன் காரணமாகவே ட்ரெண்டிங்கில் நேற்று இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் பிரதீப் பிடித்திருக்கிறார். இது குறித்து அதிகமான ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த அளவிற்கு பிரதீப் ஒரே நாளில் பிரபலம் அடைந்திருக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications