பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ப்ரோமோவில் கவனிச்சீங்களா? அப்போ இந்த முறை “அந்த” நிகழ்ச்சியின் காப்பி தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் நடிகர் கமல்ஹாசன் எந்த வசனங்களையும் பேசாமல் கை மற்றும் கண் அசைவின் மூலமாக பேசியிருக்கிறார்.
அதே நேரத்தில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை கடலுக்கு நடுவில் கெத்தாக கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் பிரமோ வெளியானது. எல்லோரும் ஏற்கனவே சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்ததுமே எப்போது அடுத்த நிகழ்ச்சி தொடங்கும் என்று காத்திருக்க தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் இந்த முறை பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மாதங்கள் கால தாமதம் ஆகி இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்படும். அது முடிவடைந்ததும் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும். இப்படித்தான் நடந்து வருகிறது. ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சில மாதங்கள் கால தாமதம் ஆகியிருக்கிறது. அதற்கு காரணம் நடிகர் கமல்ஹாசன் இந்த முறை அரசியல் களத்தில் புது கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனாலேயே கூட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளி போனதா? என்றும் கேள்வி எழுந்து வருகிறது.

அதே நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட்டிங் சில வாரங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் நேற்று விஜய் டிவியில் மாலை ஏழு மணிக்கு அப்டேட் கிடைக்கும் என்று பதிவு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் கடல் நடுவே இருக்கும் பாலத்தில் கார் ஒரு பக்கத்தில் நிற்கிறது. நடிகர் கமல்ஹாசன் ஒரு பக்கமும் நிற்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னுடைய கையில் இருக்கும் கடிகாரத்தை பார்க்கிறார். பிறகு அவருக்கு பக்கத்திலேயே சூரியன் உதித்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஐ அம் வாட்சிங் என்று அவர் சொல்லும் அந்த சைகையை செய்து காட்டுகிறார். இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இது ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியின் வாடை இந்த ப்ரோமோவில் தெரிகிறதே என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது போல இந்த ஏழாவது சீசனிலும் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா? என்று யோசிக்க தோன்றுகிறது. அதே நேரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல இந்த முறை பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications