பிக் பாஸ் 7: கலவர பூமிக்குள் காலெடுத்து வைக்கும் கானா பாடகர்.. வைல்ட் கார்ட் ?அப்போ வெளியேற்றம் இவரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி இந்த வாரம் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.
18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்த நிலையில் இப்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர் அதில் ஒரு போட்டியாளர் இந்த வாரம் வெளியேறுவார்.

இந்த நிலையில் இந்த வாரம் கானா பாடகர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் யார்? என்ன? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால் சில மாதங்கள் கழித்துதான் இந்த 7வது சீசன் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்படுத்தி விட்டனர். காரணம் இந்த சீசனில் இரண்டு வீடுகள் என்று சொல்லப்பட்ட காரணம் தான்.
அதனால் நிகழ்ச்சி அப்படியாக இருக்குமோ இப்படியாக இருக்குமோ என்று ரசிகர்கள் பல்வேறு கற்பனைகளை வளர்த்துக் கொண்டிருந்தனர். கடைசிகள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிறையை தான் சின்ன பாஸ் வீடு என்று மாற்றி இருக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஆனாலும் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்களாக இருக்கின்றனர். ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இரண்டு வீடு என்பதால் இரண்டு வீட்டிலும் சரிசமமாக போட்டியாளர்கள் தங்க வைப்பார்கள் என்று கற்பனைகள் இருந்த நிலையில் கடைசியில் அதுவெல்லாம் பொய் என்று சொல்லும் விதமாகத்தான் ஆரம்பமான முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். அதில் நடிகை அனன்யா முதல் வாரத்தில் எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருந்தார். அவரை தொடர்ந்து அடுத்த நாளே பவா செல்லத்துரை தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை காட்டி அவரும் வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேஷனால் வெளியேற்றப்பட இருக்கிறார். இந்த நிலையில் இனி யார் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்று என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சின்னத்திரை நடிகை விஜே அர்ச்சனா கலந்து கொள்வார் என்ற ஒரு பேச்சு பரவி வந்தது. இந்த நிலையில் இப்போது கானா பாடகரான பாலா இந்த சீசனில் அறிமுகமாக போகிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து டாஸ்க் கொடுக்கப்பட்டது போட்டியாளர்களுக்குள் பிரச்சனை பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் கானா பாடகர் பாலா உள்ளே நுழைந்ததும் என்னவெல்லாம் மாற்றம் நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு கானா பாடகர் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த முறை கானா பாடகர் பாலாவின் விளையாட்டு என்ன மாதிரி இருக்கிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் வினுஷா வெளியேறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றம் ஏற்படலாம் பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications