BB tamil 8 finale சூட்டிங் இன்னும் முடியல! 3 மணிக்கு சம்பவம் இருக்கு! கலந்து கொண்டவங்க உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று ஜனவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பல எதிர்பார்க்காத சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக இந்த நிகழ்ச்சிகளின் கிராண்ட் பினாலே ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் கூறி இருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 நாட்களை கடந்து இன்றுடன் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான கிராண்ட் பினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

bigg boss tamil bigg boss tamil 8 8

இதில் இறுதி கட்டத்தில் தேர்வாகி இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் யார் வெற்றியாளராக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நேற்று சனிக்கிழமை மதியம் வரைக்கும் சூட்டிங் நடைபெற்று இருக்கிறது.

அதில் இரண்டு போட்டியாளர்கள் மட்டும் எவிக்ஷன் செய்யப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது பவித்ரா மற்றும் ரயான் இவர்கள் இருவரும் தான் எவிக்ஷன் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பவித்ரா நான்காவது வெற்றியாளராகவும், ரயான் ஐந்தாவது வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல இந்த நிகழ்ச்சிக்கான கிராண்ட் பினாலே ஷூட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் சில தகவல்களை கூறி இருக்கிறார்கள் அது பற்றி பார்க்கலாம். இதுவரைக்கும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒரே நாளில் சூட்டில் நடைபெறும். ஆனால் இந்த முறை இரண்டு நாளில் நடைபெறுகிறதாம்.

நேற்று இரண்டு போட்டியாளர்கள் எவிக்ஷன் செய்ததை மட்டும்தான் சூட் செய்து இருந்தார்களாம். இன்று மூன்று மணிக்கு தான் முதல் மூன்று போட்டியாளர்களுக்கான ஷூட்டிங் நடைபெற இருக்கிறதாம். அதுபோல இதற்கு முன்பு கிராண்ட் பினாலே ஷூட்டிங்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொள்வார்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்களும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.

bigg boss tamil bigg boss tamil 8 8

ஆனால் இந்த முறை இந்த நிகழ்ச்சிக்காக ஸ்பான்சர் செய்த விளம்பரதாரர்கள் தான் அதிகமாக கலந்து கொள்கிறார்கள். ஒரு போட்டியாளர்களுக்கு இரண்டு உறுப்பினர் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நேற்று நடந்த சூட்டிங்கில் ஜாக்குலின் பெயரை அறிவித்த போது பிக் பாஸ் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் எல்லோருமே கத்தி தங்களுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதை பார்த்து ஜாக்குலின் கண்கலங்கி எமோஷனலாகி இருக்கிறார். தற்போது வரைக்கும் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகவும் ரன்னராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான சூட்டிங் இன்னும் நடைபெறவில்லை இன்று மாலை தான் சூட்டிங் நடைபெற இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சௌந்தர்யா ரன்னராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான சூட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத சம்பவம் காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+