விஜய் சேதுபதி முன்பு சாப்பாட்டுக்காக அழும் சாச்சனா.. ஆனால் உண்மையில் லைவில் நடந்தது இதுதான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் 19ஆம் தேதிக்கான எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி முன்பு தான் இரண்டு முறை சாப்பாடு கேட்டும் தனக்கு சாப்பாடு தராமல் திட்டமிட்டு தடுத்தார்கள் என்று சாச்சனா அழுது கொண்டிருக்கிறார். ஆனால் சாச்சனா சொல்வது உண்மையா? இல்லையா? என்பது பற்றி இதில் பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரைக்கும் போட்டியாளர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் பற்றி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொகுப்பாளர்கள் வந்து கேள்வி கேட்பது வாடிக்கையாக நடக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் ஆகிய இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேள்வி கேட்க வருகிறார்.

அவர் என்ன கேட்க போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் சாச்சனாவிடம் சில நாட்களுக்கு முன்பு சாப்பாடு பிரச்சனைக்காக அழுதது எதற்காக என்று கேள்வி கேட்கிறார். அதற்கு சாச்சனா நான் ரெண்டு முறை சம்பந்தி என்ற உணவு கேட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு தராம என்ன வேணும்னே அசிங்கப்படுத்தினாங்க. அதனால்தான் நான் அழுது சாப்பாடை கொட்ட போனேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது என்ன நடந்தது என்று பார்க்கலாம். கடந்த வாரத்தில் சாச்சிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது அவரை சரியாக கவனித்துக் கொண்டது அன்ஷிதா தான். அன்ஷிதா சாப்பாடு விஷயத்தில் எல்லாரையும் விடவும் அதிகமாக உதவி செய்து கொண்டு இருந்தார். அப்போது கிச்சனில் சம்பந்தி என்ற உணவு சமைத்துக் கொண்டு இருந்தார்கள். அதில் தர்ஷா குப்தா மற்றும் அன்ஷிதா இருவரும் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது தர்ஷா ஒரு பொடியை வைத்து இது என்ன பொடி என்று தெரியாமல் கேட்க அதற்கு அன்ஷிதா தான் இது சாம்பார் பொடி என்று சொன்னார். உடனே அந்த பொடியை அந்த சமையலில் போட்டார். அப்போது அங்கு வந்த அருண் சாம்பார் பொடியை எல்லாம் யாராவது இதில் போடுவாங்களா என்று கேட்டதும் தர்ஷா கோவப்பட்டு கிளம்பி போய்விட்டார். பிறகு அன்ஷிதா தான் சமையலை முழுமையாக செய்து முடித்தார்.
சமையல் செய்து முடித்ததும் சிலர் சாப்பிட உட்கார்ந்தனர். அப்போது சம்பந்தி என்ற பொறியல் போன்ற உணவை சாச்சிகாவிற்கு ஒரு ஸ்பூன் கொடுத்திருந்தார். அப்போது வேறு யாரும் சாப்பிட வரவில்லை என்பதால் அந்த கிண்ணத்தை தூரமாக எடுத்து வைத்திருந்தார். அங்கு வந்த எல்லோரும் அந்த உணவை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் சுனிதா சாப்பிட வரவில்லை என்பதால் சுனிதாவுக்கு இந்த சாப்பாடு இருக்கட்டும் என்று அன்ஷிதா சொல்கிறார்.
அப்போது தான் சாச்சிகா தான் நீங்க வேணும்னே என்னை அவமானப்படுத்துறீங்க எனக்கு சாப்பாடு கொடுக்க கூடாது என்று நீங்க இப்படி பண்ணுறீங்க. நான் அந்த பொறியல் கேட்டேன் என்று நீங்க அதை சுனிதாவுக்கு கொடுக்கணும் என்று எடுத்து தனியா வைக்கிறீங்க என்று பிரச்சனை செய்கிறார். அப்போது அங்கு வந்த சுனிதா உட்பட எல்லோரும் இந்த பொரியல் இங்கே தானே இருக்கிறது யாரும் தனியாக எடுத்து எங்கேயும் வைக்கவில்லை.
எல்லோரும் டைனிங் டேபிளில் இருக்கிறோம் அப்போது சுனிதா வரவில்லை என்பதை தான் நான் சொன்னேன் என்று சொல்ல சாச்சிகா அதற்கு வாக்குவாதம் செய்து சாப்பாட்டை கொட்ட போகிறார். அதனால் அன்ஷிதா, சுனிதா, தர்ஷிகா உட்பட எல்லோரும் கத்தி பேசுகின்றனர். அப்போது அர்னவ், ரஞ்சித் உட்பட சிலர் உள்ளே வந்து சாச்சிகாவை கூட்டிக்கொண்டு போகின்றனர்.
இந்த பிரச்சனை பற்றி தான் இன்று விஜய் சேதுபதி விசாரணையை தொடங்கி இருக்கிறார். மேலே சொன்ன காட்சிகள் தான் 24 மணி நேர எபிசோடில் அன்று நடந்தது. இதற்கு விஜய் சேதுபதி என்ன சொல்லப் போகிறார் என்று இரவு பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications