பிரபு வீட்டில் அன்று துப்பாக்கி சத்தம்.. சிவாஜி வீட்டை சிவக்குமார் மிதிக்கல.. சொத்து வருமா: பிரபலம்
சென்னை: பிக்பாஸில் சிவக்குமாரின் எலிமினேஷன் அநியாயம் என்று சிலர் பதிவிட்டு வந்த நிலையில், சிவாஜி குடும்பத்தில் சிவக்குமாருக்கு சொத்துக்கள் கிடைக்குமா? என்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி வருகிறது. அந்தவகையில், டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "செல்வம் உள்ள மனிதர்கள் வீட்டில் இப்படி நடக்கத்தான் செய்யும்.. சிவாஜி வீட்டில் மட்டும்தான் இப்படி நடக்குமா? எம்ஜிஆர் வீட்டில் நடக்கலியா? 2 பேரும் அப்போ துப்பாக்கியால சுட்டுக்கிட்டாங்களே?

திருமணம்: பொதுவாக, முதல் மனைவியை, வீட்டில் கட்டிவைப்பார்கள்.. 2வது மனைவியை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்வார்கள்.. என்னை நீதானே கூட்டிட்டு வந்தாய்? என்று 2வது மனைவி கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க. அதனால, 2வது மனைவி மீது அதிகப்படியான அக்கறை காட்ட வேண்டிய நிலை கணவனுக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் 2வது மனைவி எப்போதுமே டாமினேட்டிங்காக இருப்பார்கள்.
இதைத்தவிர, 2வது தாரங்களுக்கு சமூக அங்கீகாரமும் அவ்வளவாக இருக்காது. இதுக்காகவே பல 2வது தாரங்கள் போராட வேண்டியிருக்கும். இதுக்காகவே 2வது தாரம் பிள்ளைகளுக்கு சொத்துக்களை கூடுதலாக எழுதி தர வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே மூத்த தாரத்து பிள்ளைகள், 2வது தாரங்களை உள்ளே விடமாட்டாங்க.
சொத்து பிரச்சனை: எங்குமே 2ம் தாரம் என்றாலே தகராறுதான்.. ஒரு பிள்ளைக்கு மேல பெத்துக்கிட்டாலே தகராறுதான். அண்ணன் தம்பி சொத்துக்காக அடிச்சிக்கதான் செய்வாங்க. சிவாஜி குடும்பத்தில் ஏற்கனவே சொத்து பிரச்சனை இருந்திருக்கலாம். அது பற்றி நமக்கு தெரியாது.
ஹிந்தி படங்களுக்கு விக்ரம் பிரபு போயிருக்கலாம். நம்ம ஊர் கதாநாயகனுக்குரிய முகம் அவருக்கு இல்லை.. துஷ்யந்த் விக்ரம் பிரபு 2 பேரிடமுமே கவர்ந்திழுக்கக்கூடிய முகம் இலலை. பிரபுவுக்கு இயல்பான நடிப்பு உண்டு.. அதனால் மக்கள் மனதில் அன்றே நின்றுவிட்டார். ரஜினி, கமலை புக் செய்ய முடியாதவர்கள் எல்லாம், அன்று பிரபுவை புக் செய்தார்கள். அந்த அளவுக்கு பிரபுக்கும் பிசினஸும் அப்போது இருந்தது" என்றெல்லாம் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
சிவாஜி மகன்: அதேபோல, Adadaa Tamil யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, "ஸ்ரீபிரியாவின் அப்பா, அம்மா இருவருமே மிகப்பெரிய கலைஞர்கள். ஸ்ரீபிரியா தன்னுடைய சகோதரிக்கு உதவியிருக்கிறார்.. ஆனால், சிவாஜி தரப்பிலிருந்தும் இதுவரை எந்த உதவியும் சகோதரி குடும்பத்துக்கு செல்லவில்லை. சிவக்குமாரை தன்னுடைய மகன் என்றும் ராம்குமார் அங்கீகாரம் செய்யவில்லை.
வேண்டுமானால் தன்னுடைய குடும்பத்துக்கு தெரியாமல் ராம்குமார் உதவி செய்திருக்கலாம். ஆனால், வெளியே தெரிந்து உதவி செய்யவில்லை. இதெல்லாம் அப்போது சிவாஜிக்கே தெரியும். சில விஷயங்களை நான் சொல்ல விரும்பவில்லை.. சிவாஜி வீட்டில் துப்பாக்கி சூடுகூட நடந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் துப்பாக்கி சூடு நடந்தது. ஆனால், அப்போது எப்ஐஆர்கூட போடவில்லை..
தவறுகள்: அங்காங்கே தவறுகள் நடக்கத்தான் செய்யும்., அதெல்லாம் அவர்களின் பர்சனல் விஷயங்கள்.. அதை நாம் தோண்டி எடுக்கக்கூடாது. அவங்களே அதை பற்றி கவலைப்படவில்லை, நாம ஏன் கவலைப்படணும்? ஆனால், சுஜாவருணி, சிவக்குமார் இருவருமே இதுவரைக்கும் சிவாஜி வீட்டு வாசற்படியைகூட மிதிக்கவில்லை" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications