பிக் பாஸ் 8இல் மொத்தமாக மாறிய எலிமினேஷன் லிஸ்ட்.. கடைசியில் ஆப்பு இவருக்கு தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் மூன்றாவது வாரத்தில் 8 போட்டியாளர்கள் நாமினேசன் லிஸ்டில் இருக்கிறார்கள். இதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதை பற்றி பார்க்கலாம்.
18 போட்டியாளர்களோடு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் விளையாட்டை தொடங்கி வைத்திருக்கின்றனர். அதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் இரண்டு ஆண் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். முதல் வாரத்தில் ரவீந்தரும் இரண்டாவது வாரத்தில் அர்னவும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். தற்போதைய மூன்றாவது வாரத்தில் 8 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள்.
அதில் ஐந்து பெண் போட்டியாளர்களும் 3 ஆண் போட்டியாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் இந்த முறை வெளியே போக போவது ஆண்களா? பெண்களா? என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. இன்று வரைக்கும் வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா தான் கடைசி இடத்தில் இருந்தார்.
ஆனால் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த வார நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் பெண்கள் பெற்றிருக்கின்றனர். கடந்த வாரத்தை போல இந்த வாரத்திலும் பெண்கள் தான் இந்த டிக்கெட்டை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த வாரத்தில் ஐந்து பெண் போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் இவர்களில் பவித்ராவை தவிர மீதம் இருக்கும் நான்கு பேரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
பவித்ராவை தொடர்ந்து அன்ஷிதா மற்றும் தர்ஷா குப்தா தான் வாக்குகளின் அடிப்படையில் குறைவாக இருக்கிறார்கள். அதிலும் இருவருக்கும் அதிகமான வித்தியாசம் இல்லாததால் தர்ஷா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று வரைக்கும் தர்ஷாதான் குறைவான வாக்குகள் பெற்று இருந்தார். ஆனால் இன்று தான் அன்ஷிதா அவரை விட குறைந்திருக்கிறார்.
அதனால் இன்று மாலை வரைக்கும் ஓட்டுகள் அளிக்கப்படும் என்பதால் கடைசி நேரத்தில் கூட வாக்குகளில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து தர்ஷா குப்தா ப்ரோமோவில் வந்துவிட வேண்டும் என்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். அவரால் சில சண்டைகளும் வருகிறது, சில சுவாரசியமான சம்பவங்களும் நடக்கிறது.
இதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் இருப்பாரா? அல்லது வெளியேற்றப்படுவாரா? என்று குழப்பம் நிலவி வருகிறது. அன்ஷிதா விஜய் டிவி பிரபலம் என்பதால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவது சந்தேகம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல கடைசி நேரத்தில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவரை வெளியேற்றி விடுவார்களா? என்றும் பல கேள்விகள் எழும்பி வருகிறது.
முதலிடத்தில் முத்துக்குமாரன் இருக்கிறார். அவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சத்யா இருக்கிறார். ஆனால் ஐந்தாவது ஆறாவது இடத்தில் தான் அருண் இருந்து கொண்டிருக்கிறார். கடைசி இடத்தில் இருக்கும் பவித்ரா சேவ் ஆகும் நிலையில் பிக்பாஸில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications