ரஞ்சித் உறவினர்களை நோஸ்கட் செய்த சேதுபதி.. அப்படி பேச காரணமே இதுதான்! போட்டுடைத்த பிரியா ராமன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதியிடம் ரஞ்சித்தின் நண்பர்கள் கோயம்புத்தூர் காரங்க பேசும்போது முதலில் சாப்பிட்டாச்சா என்று தான் கேட்போம் என்று ஊர் பெருமையை பேச, அதற்கு விஜய் சேதுபதி அப்போ எங்க ஊரில் எல்லாம் நாங்க வெளியே போங்க என்று சொல்லுவோமா? நாங்களும் சாப்பிட்டாச்சா என்று தானே கேட்போம் என்று பதிலடி கொடுத்திருந்தார். இது குறித்து ரஞ்சித்தின் மனைவியான ப்ரியா ராமன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் வரலாற்றிலேயே போட்டியாளர்களை விட அவர்களின் ஹோஸ்ட்டாக வந்தவர்கள் ட்ரெண்டானது என்றால் அது பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் தான். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீசனில் பெரிய ஒரு அதிர்ச்சி நடந்தது. இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பை விடவும் இதில் தொகுப்பாளராக வரும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறார்? கமல்ஹாசன் போல நிகழ்ச்சியில் நடுநிலை தன்மையோடு நடந்து கொள்வாரா? அல்லது விஜய் டிவி சொல்வதை மட்டும் விஜய் சேதுபதி வந்து பேசப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் முதல் நாளே விஜய் சேதுபதி எல்லோரையும் வியந்து பார்க்க வைத்திருந்தார். விஜய் சேதுபதியிடம் சிக்கியது போட்டியாளர்களை விடவும் பார்வையாளராக வந்த நடிகர் ரஞ்சித்தின் நண்பர்களும் தான். ரஞ்சித்தின் நண்பர்கள் சொன்ன ஒரு வார்த்தை மீம்ஸ் கண்டெண்டாக மாறிவிட்டது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே இயல்பாக ஒரு நண்பரிடம் பேசுவது போலவே எல்லோரிடமும் முகத்துக்கு நேராகவே பல்வேறு கேள்விகளை கேட்டு இருந்தார்.
அதிலும் அர்னாவ் "ஆம்பளையா இருந்துட்டு தைரியமா இல்லன்னா எப்படி?" என்று சொன்னதை சட்டென்று நிறுத்தி தைரியத்தில் என்ன ஆம்பள பொம்பள என்று பதிலடி கொடுத்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார். அதுபோல ரஞ்சித்திடம் கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு எழுந்த சர்ச்சைகளில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் விதம் ஆரம்பத்தில் நான் பார்த்த ரஞ்சித் இல்லையே என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அப்போது ரஞ்சித்தை தொடர்ந்து அவருடைய நண்பர்களிடம் விஜய் சேதுபதி வணக்கம் சொல்லி இருந்தார். அப்போது ஆரம்பத்தில் வணக்கம் சொன்ன விஜய் சேதுபதி நண்பர்கள் நீங்கள் சாப்பிட்டாச்சா என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அதற்கு அவரும் சிரித்தபடி ஆமாம் சாப்பிட்டாச்சு என்று சொன்னதும் ரஞ்சித்தின் நண்பர் எங்க ஊரு கோயம்புத்தூர்ல நாங்க யாரிடம் பேசினாலும் முதலில் சாப்பிட்டாச்சா என்று தான் கேட்போம் என்று பெருமையாக பேசினார்.
இதை கேட்டு கடுப்பான விஜய் சேதுபதி எல்லா ஊரில் உள்ளவர்களும் வீட்டிற்கு வந்தவர்களிடம் சாப்டாச்சா என்று தான் கேட்போம் என்று பேசியது இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இது குறித்து ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கடைசி வாரத்தில் தான் முடிவானது.
நானும் ரஞ்சித்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. சொந்த பந்தம் யாரும் இல்லாத ஒரு இளம் தம்பதியினர் எங்களை மட்டுமே நம்பி இருந்தனர் அவர்கள் வீட்டு பங்க்ஷனில் எங்களில் இருவரில் ஒருவராவது கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்ததால்தான் என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் ரஞ்சித் சார்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அதனால் தான் ரஞ்சித்தின் நண்பர்கள் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதற்காக விஜய் சேதுபதியிடம் அப்படி பேசினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு விஜய் சேதுபதியை பார்த்ததும் ஒரு பதட்டம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். பதட்டத்தில் எதை பேச வேண்டும் என்று தெரியாமல் இப்படி பேசி விட்டார்கள் என எனக்கும் தோன்றுகிறது.
ஏனென்றால் ரஞ்சித்தோடு வந்த அண்ணன்களுக்கு விஜய் சேதுபதி ரொம்பவே பிடிக்கும் நமக்கு ரொம்ப பிடிச்சவங்க திடீரென்று நம்மிடம் பேசும்போது அவர்கள் பதட்டத்தில் அப்படி பேசி இருக்கலாம். அதுபோல சாப்பிட்டாச்சா என்று கேட்பது கோயம்புத்தூர்காரங்க மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் தமிழர்கள் வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டீங்களா? சாப்பிடுறீங்களா? என்று தான் கேட்பாங்க.

நான் கூட என்னுடைய மகனை ஸ்கூலில் இருந்து கூப்பிட போனால் அங்கிருக்கும் வாட்ச்மேன் என்னை பார்த்ததும் என்ன மேடம் சாப்பிட்டாச்சா என்று தான் என்னிடம் கேட்பார். அதனால் எனக்கும் அந்த அண்ணா ஏன் இப்படி பேசிட்டாரு என்று தான் தோன்றியது. ஆனால் ஒரே நாளில் பிரபலம் ஆகிவிட்டார் என்று சிரித்தபடியே பிரியா ராமன் இந்த சம்பவம் பற்றி பேசி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications