Bigg Boss: பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் நள்ளிரவில் நடந்த சண்டை! பெண்களை இழிவுபடுத்திய பிரவீன் காந்தி!
சென்னை: விஜய் டிவியோட 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' ஷோ நேற்று முன்தினம் (அக்டோபர் 5) பிரம்மாண்டமா ஆரம்பிச்சது. வழக்கம் போல, விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், அரோரா சின்க்ளேர், எஃப்.ஜே., வி.ஜே. பார்வதி, இயக்குனர் பிரவீன் காந்தி உட்பட மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டுக்குள்ள போயிருக்காங்க.

வீட்டுக்குள் போனதும் விஜய் சேதுபதி வச்ச ட்விஸ்ட் என்ன தெரியுமா? எல்லாரையும் சிவப்பு (சாதாரண அறை) மற்றும் நீல நிறப் பேட்ஜை (சூப்பர் டீலக்ஸ் அறை) தேர்வு செய்யச் சொன்னார். பெரும்பாலானவங்க சிவப்பு பேட்ஜை எடுத்ததால, எல்லா வசதியும் உள்ள சூப்பர் டீலக்ஸ் அறையில ஒரு சிலரும், சாதாரண ரூம்ல மத்தவங்களும்னு பிரிஞ்சு போயிருக்காங்க. இந்த ரூம் பஞ்சாயத்துலயே இன்னும் நிறைய சண்டை வரும்னு எதிர்பார்க்கலாம்!
திவாகருக்கு அப்புறம் பிரவீன்
பிக் பாஸ் வீட்டுல முதல் நாளே சண்டைக்குப் பஞ்சமே இல்லை. ஏற்கனவே, குறட்டை விட்டதுக்காக நடந்த சண்டையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எல்லார்கிட்டேயும் வாங்கிக் கட்டிக்கிட்டார். இவரை அடிக்கணும்னு சில பேர் வெறி ஆயிருக்காங்க. இந்த களேபரத்துல, சத்தமில்லாம இன்னொரு பெரிய குண்டைப் போட்டாரு இயக்குநர் பிரவீன் காந்தி!
பிரவீன் காந்தியின் சர்ச்சை பேச்சு
விக்ரம், துஷார், மற்றும் நந்தினிகிட்டப் பேசிக்கிட்டு இருக்கும்போது, பிரவீன் காந்தி திடீர்னு 'பெண்கள் சைக்காலஜி' பற்றித் தன்னோட 'ஆழ்ந்த' கருத்தைச் சொன்னார். அதுதான் இப்போது பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரவீன் காந்தி என்ன சொன்னார் தெரியுமா? "பெண்களால், தன்னை விட அழகான இன்னொரு பெண் வந்துட்டால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த அழகைத் தூக்கி சாப்பிட என்ன செய்யலாம்னு அவங்க யோசிப்பாங்க. அது பெண்களின் படைப்பு. கடவுள் படைப்பிலேயே பெண்களிடம் இரண்டு விஷயங்களைக் கொடுத்துவிட்டார். ஒன்று பொறாமை, இன்னொன்று பேராசை. இந்த இரண்டை பெண்களிடம் இருந்து நான் எடுக்கவே முடியாது"னு ரொம்பப் பொதுப்படையாக பேசினார்.
இதைக் கேட்டதும் அங்க இருந்த நந்தினிக்குக் கோபம் வந்துடுச்சு. "எல்லா மனிதர்களுக்கும் பொறாமை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. பெண்களுக்கு மட்டும் இப்படின்னு பொதுப்படையாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!"னு சொல்லி, பிரவீன் காந்தியின் கருத்துக்கு ஒரு சரியான கிளாஸ் எடுத்தாங்க.
இவருடைய பேச்சைக் கேட்டு, "இப்படி எல்லாம் பேசுறவரை, எந்த அடிப்படையில் பிக் பாஸ் வீட்டுல விட்டாங்க?"ன்னு ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. பொதுவா பேசி மாட்டிக்கிறதுல பிரவீன் காந்தி ஒரு கில்லாடி போல! நந்தினி தன்னிடம் கேட்ட கேள்வியை பார்த்ததும் நாம பேசியது தவறு என்று புரிந்து கொண்ட பிரவீன் காந்தி பிறகு சமாளித்து இருந்தார். அதுபோல பிறகு நடந்த ஒரு டாஸ்கிலும் வாட்டர் டேங்க்கை தண்ணீர் வரும் குழாயில் வைத்து பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கு வலிமையான ஆண்கள் வாங்க, பெண்கள் வேண்டாம் என்று பிரவீன் காந்தி சொன்னார். அப்போதும் அங்கிருந்த பெண்கள் கோபப்பட்டனர்.
மொத்தத்துல, பிக் பாஸ் வீட்ல குறட்டை விட்டாலும் சண்டை, பொதுவா பேசினாலும் சண்டைன்னு இருக்கு. திவாகருக்கு அப்புறம் பிரவீன் காந்தி இந்தப் பொதுப்படையான பேச்சால, இந்த வாரம் அடுத்த டார்கெட்டா ஆகுவாரான்னு பார்க்க ஒரு குரூப் காத்துக்கிட்டு இருக்கு!
பிரவீன் காந்தியின் இந்த 'பொதுப்படையான' பேச்சைக் கேட்ட மத்த பெண் போட்டியாளர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க?












Click it and Unblock the Notifications